சட்டத்தை தாண்டி நியாயம் இருக்கும், நியாயத்தை தாண்டி தர்மம் இருக்கும், ஆனால் இறுதியில் தர்மமே ஜெயிக்கும் எனும் கருத்தை மையமாகக் கொண்டு, ஒரு அதிரடி ஆக்சன் த்ரில்லராக இப்படம் உருவாகியுள்ளது.
'ஆக்சன் கிங்' அர்ஜுன் - ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்முதலாக இணைந்து நடிப்பதால் படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு இருந்த நிலையில் இப்போது ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளது தயாரிப்பு நிறுவனம்.