ஏற்றுமதியில் ஈடுபட்டிருந்த பெரும் வியாபாரிகளாகிய மரைக்காயர்களைத் தவிர மற்ற முஸ்லீம்களும், பறவர்களும் பெரும்பாலும் சங்கு குளிக்கும் தொழிலாளர்களாவே இருந்தனர்.
நாம் பலமாதிரியான சங்குகளைப் பார்த்திருப்போம். சிறியவை, பெரியவை, தமிழ் மொழியில் எல்லாமே சங்கு தான். ஆனால் ஆலயங்களில் வைத்திருக்கும் அல்லது கோவில்களில் ஊதும் சங்குதான் நான் கூறும் சங்கு.