அங்குசம் பார்வையில் ‘சைத்ரா’
அங்குசம் பார்வையில் ‘சைத்ரா’.
தயாரிப்பு: ‘மார்ஸ் புரொடக்சன்ஸ் ‘ கே.மனோகரன். டைரக்டர்: எம்.ஜெனித்குமார். ஆர்ட்டிஸ்ட்: யாஷிகா ஆனந்த், அவிதேஜ், சக்தி மகேந்திரா, பூஜா, கண்ணன், மொசைக் குட்டி ராஜேந்திரன். ஒளிப்பதிவு: சதீஷ் குமார், இசை: பிரபாகரன் மெய்யப்பன், எடிட்டிங்: எலிசா. பிஆர்ஓ: மணவை புவன்.
படத்தின் முதல் சீனிலேயே மொட்டை மாடியில் இருந்து தற்கொலைக்கு முயற்சிக்கிறார் யாஷிகா ஆனந்த். “நான் ஏன் இப்படி ஆனேன்” என்பதற்கு அவரே ஃப்ளாஷ்பேக்கை ஓப்பன் பண்ணுகிறார். அந்த ஃப்ளாஷ் பேக்கில் அவருடைய நெருங்கிய தோழியும் அவரது கணவரும் சாலை விபத்தில் இறந்துவிடுகிறார்கள். அதைப் பார்த்த யாஷிகாவுக்கு மனநலம் பாதிக்கப்படுகிறது. இதை குணப்படுத்த மருத்துவம் பார்க்கிறார் யாஷிகாவின் கணவர் அவிதேஜ். இருந்தாலும் அடிக்கடி மொட்டை மாடிக்கு ஓடுகிறார் யாஷிகா.
இந்த கதையுடன் அவிதேஜின் நண்பர், அவரது லவ்வர் சக்தி மகேந்திரா, இவரது அண்ணன் இன்ஸ்பெக்டர் கண்ணன், யாஷிகாவின் தோழி பூஜா இவரது புருஷன், ஒரு சாமியார், இவனின் சிஷ்யன் ( மொசைக் குட்டி) அப்புறம் ஒரு டாக்டர், கம்பவுண்டர், ஒரு கான்ஸ்டபிள். இம்புட்டு கேரக்டரையும்ர எதுக்கு சொலறோம்னா, அத கடைசில சொல்றோம். தமிழ் சினிமா பேய் பிசாசு படங்களில் எல்லாமே, ஒரு மொரட்டுப் பேய்க்கு, ஃப்ளாஷ் பேக்கில் தனக்கு நடந்த அநியாயம், அக்கிரமம் ஞாபகத்துக்கு வந்து, அக்கிரமம் செய்தவர்களை உக்கிரமா பலி வாங்கும்.
ஆனால் இந்த ‘சைத்ரா’விலோ செத்துப் போன தோழியும் அவரது கணவரும் மனுச உருவில் பேயாக வருகிறார்கள். அவர்களைப் பார்த்த யாரும் உயிரோடு இருக்கமாட்டார்கள். இந்த ஒன்லைனை கரெக்டா பிடிச்ச டைரக்டர் ஜெனித்குமார், அதை நல்ல கதை திரைக்கதையாக மாற்றி த்ரில்லிங் அனுபவத்தை தர, ரொம்பவே நடுங்கி, தடுமாறியிருக்கார்.
சீன்களெல்லாம் சப்பைத்தனமானமா போனதால் நமக்கு த்ரில்லிங் ஃபீலிங்கே வரல. சைத்ராவாக நடித்த யாஷிகா ஆனந்த், மொசைக் குட்டி ராஜேந்திரன் ஆகியோர் மட்டுமே நமக்கு ஓரளவு பரிட்சயமான முகங்கள். மற்றவர்கள் எல்லோரும் புதுமுகங்கள். நடிக்க, டயலாக் பேச பயந்து நடுங்கியிருப்பது ஸ்கிரீனில் அப்பட்டமாக தெரிந்தது. மியூசிக் டைரக்டரும் கேமரா மேனும், சைத்ரா’ வுக்கு சைடு எஃபெக்ட் கொடுக்க லேசா ட்ரை பண்ணியிருக்கிறார்கள். படத்தின் சில கேர்கடர்களை ஆரம்பத்தில் சொன்னோம்ல.
நாம சொன்ன அம்புட்டுப் பேரையும் (யாஷிகா ஆனந்த் உட்பட) பேய் போட்டுத் தள்ளிருது. பேய் பிசாசு மேல டைரக்டருக்கு அபார நம்பிக்கை போல. அதனால விஞ்ஞானத்தையும் மருத்துவத்தையும் சேர்த்து போட்டுத் தள்ளிட்டாரு. க்ளைமாக்ஸில் பார்ட் 2 வுக்கு லீட் போட்டார்கள். அதையாவது பார்த்து பக்குவமா பண்ணுங்கப்பா. இல்லேன்னா போற போக்குல பேய் உங்களையும் ஒரு காட்டு காட்டிரப் போகுது. –
-மதுரை மாறன்.