முதல்கட்டமாக 500 டாஸ்மாக் கடைகளை மூட தமிழக அரசு உத்தரவு!

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

முதல்கட்டமாக 500 டாஸ்மாக் கடைகளை மூட தமிழக அரசு உத்தரவு!

சட்டப்பேரவையில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை மானியக்கோரிக்கையின் போது 500 சில்லரை மதுபான விற்பனைக் கடைகள் கண்டறியப்பட்டு மூடப்படும் என, அப்போதைய மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சரான செந்தில்பாலாஜி அறிவித்திருந்தார். இதனைத்தொடர்ந்து 20.04.2023 தேதியிட்ட அரசாணை எண் 140 இன் படி, தற்போது முதற்கட்டமாக மூடப்பட இருக்கும் டாஸ்மாக் கடைகள் கண்டறியப்பட்டுள்ளன.

உடனுக்குடன் அங்குசம் வாட்சப் சேனலில்.. சேர.....

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

இதன்படி, சென்னை மண்டலத்தில் 138 கடைகள், கோவை மண்டலத்தில் 78 கடைகள், மதுரை மண்டலத்தில் 125 கடைகள், சேலம் மண்டலத்தில் 59 கடைகள், திருச்சி மண்டலத்தில் 100 கடைகள் மூடப்படுவதாக டாஸ்மாக் நிர்வாகத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 5,329 மதுக்கடைகளில் 500 கடைகள் நாளை முதல் (22.06.23) மூடப்படும் நிலையில், எஞ்சிய 4829 மதுக்கடைகளையும் படிப்படியாக மூட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டிருக்கிறது.

 

அங்குசம் இதழ் - இலவசமாக படிக்க -

Leave A Reply

Your email address will not be published.