மாஜி அதிமுகவின் பிடியில் தமிழக அரசியல் ! சாதி பல்ஸ் பார்த்த அமித்ஷா ! திமுகவுக்கு செம்ம செக் !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

நேரலையில் நயினார் பேச்சை கேட்டுக் கொண்டிருந்தார் அதியன். கதவை திறந்து உள்ளே நுழைந்த கபிலன், ”என்ன ஒரு வழியா பஞ்சாயத்து எல்லாம் முடிஞ்சது போலயே. ஒரே கல்லில் ரெண்டு மாங்காய அடிச்சிட்டாங்களே”னு ஆரம்பித்தார். டி.வி.யை அணைத்துவிட்டு ஆயத்தமானார் அதியன்.

“அது என்னவோ வாஸ்தவம்தான். கட்சிக்கு தலைவர தேர்ந்தெடுத்த மாதிரியும் ஆச்சு. கூட்டணி கணக்கை தொடங்கி வச்ச மாதிரியும் ஆச்சு.”

Dhanalakshmi Srinivasan University | Samayapuram ...

“அதுசரி. பேராசிரியர் ராமசீனிவாசன் பெயர்தானே அடிபட்டுச்சு. கடைசி நேரத்துல நயினார் நாகேந்திரன் எப்படி உள்ளே வந்தாரு?”

நயினார் நாகேந்திரன்

அங்குசம் தற்போதைய இதழ்.. படிக்க..

நயினார் நாகேந்திரன்

“கடைசி நேரத்திலயா, அவர் கட்சிக்குள்ள வந்த காலத்துல இருந்தே தலைவரு பதவி கொடுக்கலயேனு வருத்தத்துல இருந்தவருதானேப்பா நயினார். 2017 இல கட்சிக்கு வந்தப்பவே எதிர்பார்த்தாரு நடக்கல. 2020 இல ஆசையா இருந்தாரு எல்.முருகன போட்டாங்க. அப்ப வெளிப்படையாவே அதிருப்தியை பதிவு பன்னாரு. அப்புறம் 2021 இல இந்த முறை நாமதான்னு நம்பிக்கையா இருந்தாரு. இந்த முறை அண்ணாமலை அணை போட்டாரு. சரி, எம்.பி.யாகி டெல்லிக்கே போயிடலாம்னு நினைச்சாரு. அதுவும் கைகூடல. இந்த முறை கச்சிதமா காய்நகர்த்தி காரியத்தை சாதிச்சிட்டாரு நயினார்”

“ஆமா. அண்ணாமலை நல்லாத்தானே கட்சிய வளர்த்தாரு. தமிழ்நாட்டுல பட்டி தொட்டியெல்லாம் பி.ஜே.பி.ய கொண்டு போனாரே. அவர ஏன் பொசுக்குனு கழட்டி விட்டுட்டாங்க”

“அவரு கட்சிய வளர்த்தாரா? இல்ல, கட்சிய வச்சி அவரை வளர்த்துக்கிட்டாரானுதான் தலைமைக்கு சந்தேகமே. அவரு பேசுன பேச்சு கொஞ்ச நஞ்சமா? தமிழகத்துல தனக்கு எதிரா ஒருத்தன் வந்துற கூடாதுனு கே.டி.ராகவன், இராம.சீனிவாசன் தொடங்கி ட்ரெயின்ல சிக்குன நயினாரோட நாலுகோடி மேட்டர் வரைக்கும் உள்ளடி வேலை நிறைய பார்த்திருக்காரு.”

அண்ணாமலை
அண்ணாமலை

“என்னதான் இருந்தாலும், எல்லாத்தையும் அலறவிட்டாரே?”

“பி.ஜே.பி.யில பேச ஆள் இல்லைனு நினைக்கிறியா, கபிலன். ஹெச்.ராஜாவ விட்டா, தர லோக்கலா அலசிட்டு வந்துருவாரு. வாதத்துல வானதிய விஞ்ச ஆள் இருக்கா? சாந்தமானவருனு நினச்ச இராமசீனிவாசன் ஹலால் பத்தி பேசி தெறிக்கவிடலையா? அப்புறம் பி-டீம் சீமான்லாம் எதுக்கு இருக்காரு? பெரிய பெரிய ஆளுங்ககூடல்லாம் பிசினஸா எப்படி குழஞ்சாருனெல்லாம் டெல்லிக்கு போகாமத்தான் இந்த முடிவ எடுத்தாங்களா, என்ன?”

அமித்ஷாவின் ஆட்டம் !

🛑வெறும் 2500 முதல் LED TV |50%Opening Offer |BISMI ELECTRONICS

” எப்படியாவது திமுகவை வீழ்த்தனும். பிஜேபியோட டார்கெட் அதான். போன எம்.பி. எலக்ஷன்ல அதிமுகவ விட பிஜேபி 70 இடங்கள்ல முன்னணி வந்திருக்கு. திமுகவுக்கு எதிரான மனநிலையில இருக்குற சில்லற கட்சிகள ஒருங்கிணைச்சா எப்படியும் 90 சீட்ட உத்தரவாதம் செஞ்சிரலாம். எப்படி பார்த்தாலும் 150+ கன்பார்ம்ங்கிறதுதான் அமித்ஷாவோட கால்குலேஷன்.”

“அப்போ, இது அமித்ஷவோட ஆட்டம்னு சொல்றீங்க”

”கண்டிப்பா, கபிலன். நீயே பாரேன். நாடார், கவுண்டர், தாழ்த்தப்பட்டோர்னு பிஜேபி தலைவரா எல்லா கம்யூனிட்டி ஆளுங்களும் இருந்துட்டாங்க. வன்னியர் சமூகத்துல இருந்தும் முக்குலத்தோர் சமூகத்துல இருந்தும்தான் இன்னும் யாரும் தலைவராகலைனு குறையா இருந்துச்சி. வன்னியர் சமுதாயத்துல இருந்து ஒரு தெளிவான ஆள் யாரும் இப்ப வரைக்கும் இல்லை. அதனாலதான் நயினாரு. வீக்கா இருக்கிற  சவுத்ல கால் வச்சா மாதிரியும் ஆச்சு. அடுத்து, எடப்பாடிய சாதுர்யமா கையாள அங்கே இருந்தே வந்த ஆளுதான் சரியா இருக்கும்னுதான் இந்த முடிவு. இது எல்லாத்தையும்விட, நயினாரு லேசுபட்டவரு இல்ல. அதிரடி, அடிதடிக்கும் சளைச்சவரில்லை. ஆண்டாள் விவகாரத்துல நாக்க அறுத்துருவேனு பேசிய ஆளாச்சே. முக்கியமா நல்ல பசையுள்ள பார்ட்டி. எல்லாம் யோசிச்சிதான் களத்துல இறக்கியிருக்காங்க.”

ஆட்டிப்படைக்கும் அம்மாவின் வார்ப்புகள் !

”நயினாரு மட்டுமா? தமிழ்நாட்டுல இருக்கிற முன்னணி கட்சி எல்லாத்தையும் இப்போ ஆட்டி படைச்சிட்டு இருக்கிறது, “அம்மா”வின் வார்ப்புகள்தானே. திமுகவுல செந்தில் பாலாஜியும், சேகர்பாபுவும் சொல்றதுதானே சட்டம். அவ்வளவு நடந்தும் கடைசி வரைக்கும் செந்தில்பாலாஜிய விட்டுத்தரலையே. அப்புறம் எ.வ.வேலு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.னு பட்டியல் பெரிசா இருக்கே”

பிஜேபி - அதிமுக கூட்டணி

பிஜேபி – அதிமுக கூட்டணி

“அதுதான் விசயம். அதிமுகவ ஒன்னாக்கிடலானு மூச்ச போட்டாரு. எடப்பாடி கடைசி வரைக்கும் தம் கட்டுனாரு. தலைக்கு ஒரு சீட்டு கொடுத்தா எப்படியும் ஓ.பி.எஸ்., டி.டி.வி., சசிகலா டீம் லா வந்து சேந்துரும்னு நம்பிக்கைதான்.”

“கரெக்ட்தான். பிஜேபிதான கூட்டணிக்கு தலைமை தாங்க போகுது அதனால போலாம்னு முத ஆளா டி.டி.வி. அறிக்கை விட்டாரு. மீசையில மண் ஒட்டாத கதையா, தனிக்கட்சி ஒன்ன ரெடி பண்ணிட்டு போலானு ஓ.பி.எஸ். வெயிட்டிங். கொஞ்சம் வெயிட்டா கவனிச்சா மாம்பழம் இனிச்சிரும். அப்படியே, ஆளுக்கு ஒன்னு கொடுத்தாலும் பத்து சீட்டுக்குள்ள பல கட்சிய சேர்த்துரலானு கணக்கு.”

தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

“எடப்பாடி – அண்ணாமலையோட அலப்பறை வீடியோக்கள்தான் இணையத்த கலக்கிட்டு வருதே … இது, ரெண்டு பேருக்குமே பின்னடைவுதானே?”

”எடப்பாடிய பொருத்தவரை, இது சரியான ராஜதந்திரம்தான். கட்சிய காப்பாத்தியாகனும். சின்னத்தை எப்படியாச்சும் தக்க வச்சே ஆகனும். மகன் மேல போட்ட வழக்குகள எல்லாம் முடிவுக்கு கொண்டு வந்தாகனும். இந்திராகாந்தி பீக்ல இருந்த காலத்துல, சரிக்கு சரியா காங்கிரசுக்கு சீட்ட வாரி கொடுத்தாரே கலைஞர். அன்னைக்கு அவர் அப்படி பணிஞ்சி போகாம இருந்திருந்தா இன்னைக்கு திமுகங்கிற கட்சியே இருந்திருக்காதே? அதெல்லாம்விட, கவுண்டர்களின் தலைவனா தான் ஒருத்தன் இருக்கப்ப. தனக்கு போட்டியா, அண்ணாமலை வர்றது அவருக்கு சுத்தமா பிடிக்கல. அதுக்கும் ஒரு வாய்ப்பா போச்சு. அன்னைக்கு தவழ்ந்து காரியத்த சாதிச்சாரு. இன்னிக்கு கொஞ்சம் தவ்லத் காட்டி சாதிச்சிருக்காரு. அதான் வித்தியாசம்.”

அமிர்ஷா - எடப்பாடி
அமிர்ஷா – எடப்பாடி

“அப்போ, அண்ணாமலை கதி அதோகதிதானா?”

“அவருக்குத்தான், தேசிய பொதுக்குழு உறுப்பினர்னு பெரிய பொறுப்பு கொடுத்திட்டாங்களே?”

“எப்படி, நடுசாமத்துல பொண்டாட்டி கேட்ட ஒத்த கேள்விக்கு கட்சிய அடமானம் வச்ச சரத்குமாரு பக்கத்துல போயி உட்காருனுல ஒதுக்கி விட்ருக்காங்க.”

மறுபடியும் ராமஜெயம் கேசு…..

அண்ணாமலைக்கு அடுத்து, எதுக்கும் அசையாத மலை சீமான் இருக்காரே?

“அதானே அரசியலே … சீமான் திருச்சியில பேசுனத கவனிச்சியா? ராமஜெயம் கொலை வழக்குல ரெண்டு ரவுடிய போடப்போறாங்கனு பேசியிருக்காரு.”

”ஆமா, சம்பந்தமில்லா இப்ப எதுக்கு இத பேசுனாரு?”

”அட, நீ வேற. எல்லாமே அமித்ஷாவோட அசைன்மெண்ட்தான். அந்த அளவுக்கு தமிழ்நாட்டுல சாதிங்கிற பல்ஸ்-அ பிடிச்சிருக்காரு”

”புரியலியே”

ராமஜெயம்
ராமஜெயம்

”ராமஜெயம் கொலை வழக்குல ரவுடிகளை ட்ரேஸ் செஞ்சி உண்மை அறியும் சோதனைக்கு போலீசு போனப்ப … பிஜேபிதான் எதிர்ப்பு தெரிவிச்சிச்சு. முக்குலத்து ஆளுங்களையா குறிவைக்கிறாங்கனு நிர்மலா சீதாராமன் வரைக்கும் கொண்டு போனாங்க. இப்போ, சீமான் பேசியிருக்காரு.”

“திமுகவுக்கு செம்ம செக்-தான் போல …”

சரி, நேரமாச்சு பிறகு பேசலாம்.

 

—  அதியன். 

அங்குசம் இதழ் உங்கள் இல்லம் தேடி வர... 🤔🤔 #angusam #trichy

Leave A Reply

Your email address will not be published.