உயர் அதிகாரிகளுக்கு மாதந்தோறும் மாமூல் ! உண்மையை போட்டு உடைத்த டாஸ்மாக் ஊழியர் !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு பத்து ரூபாய் வசூல் ! உயர் அதிகாரிகளுக்கு மாதந்தோறும் மாமூல் ! உண்மையை போட்டு உடைத்த டாஸ்மாக் ஊழியர் ! சேலம் மண்டலத்தில் செயல்படும் சுமார் 500 டாஸ்மாக் கடைகளில் இருந்தும் மாதந்தோறும் தலா மூவாயிரம் ரூபாய் வசூலிக்கப்படுகிறது என்றும், கூட்டிக் கழித்துப்பார்த்தாலும்கூட சுளையாக 1.5 கோடி ரூபாய் ஒரு குறிப்பிட்ட அதிகாரிக்கு போய்ச்சேருகிறது என்றும் டாஸ்மாக்கில் மேற்பார்வையாளராக பணியாற்றும் ராகவன் என்வர் பேசி வெளியாகியிருக்கும் ஆடியோ பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

அந்த டாஸ்மாக் கடை
அந்த டாஸ்மாக் கடை

உடனுக்குடன் அங்குசம் வாட்சப் சேனலில்.. சேர.....

தமிழ்நாட்டில் , சுமார் 4,300 டாஸ்மாக் மதுக்கடைகள் செயல்படுகின்றன. அதில் 3 ஆயிரம் கடைகளுக்கு அருகிலேயே மது அருந்தி செல்வதற்கான பார் வசதிகள் உள்ளன. மதுபாட்டில்களின் அதிகபட்ச விலை, வரிகள் உட்பட எவ்வளவு என்பது மது பாட்டில்களிலேயே பிரின்ட் செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டுவருகின்றன.

பொதுவாகவே டாஸ்மாக் கடைகளில் விற்பனை விலையை விட கூடுதலாக 10 ரூபாய் வரை வசூலிப்பதாக வரும் புகார்கள் டாஸ்மாக் தோற்றத்தில் இருந்தே கடைபிடிக்கப்பட்டு வருகின்றது. அரசு இந்த விவகாரத்தில் ஊழியர்களை சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை எடுத்தாலும் 10 ரூபாய் கூடுதலாக வாங்குவது என்னும் புகார்கள் குறையவே இல்லை.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

மேற்பார்வையாளர் ராகவன்
மேற்பார்வையாளர் ராகவன்

அந்த வகையில், திருப்பத்தூர் மாவட்டத்தில் 70 -க்கும் மேற்பட்ட கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில் ஜோலார்பேட்டை அருகே சோமநாயக்கன்பட்டி கிராமத்தில் உள்ள டாஸ்மாக் கடையில் ஒரு பாட்டிலுக்கு ₹5 முதல் ₹10 வரை கூடுதல் கட்டணம் வசூலிப்பது குறித்து, அந்த கடையின் மேற்பார்வையாளர் ராகவன் என்பவர், வாடிக்கையாளர் ஒருவர் செல்போனில் வீடியோ எடுத்தபடி கேட்ட கேள்விக்கு மேற்பார்வையாளர் ராகவன் அளித்த விளக்கம் தான் தற்போது தமிழ்நாடு டாஸ்மாக் நிறுவனத்தையே தள்ளாட வைத்துள்ளது

”வாடிக்கையாளர்: எதற்காக கூடுதலாக பத்து வசூலிக்கிறீர்கள்?

ராகவன் : யார் நீ, எங்கே வேலை செய்கிறாய்? எதற்காக வீடியோ எடுக்கிறிங்க? என்னை கேட்பதற்கு நீ யார்?
வாடிக்கையாளர் : நான் பொதுமக்களில் ஒருவன், இதனை நான் தான் கேட்பேன்.” என்பதாக தொடங்கும் அந்த உரையாடலின் வழியே பல இரகசியங்களை போட்டு உடைத்திருக்கிறார், மேற்பார்வையாளர் ராகவன்.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

கூடுதலாக வசூலிக்கப்படும் 10 ரூபாய் பணத்தில் டாஸ்மாக் அதிகாரிகளுக்கு மாதம் மாதம் மாமூல் தரப்படுகிறது. அதில் , சேலம் SRM (மண்டல அதிகாரி) நர்மதா தேவிக்கு தொழிற்சங்கம் மூலம் மாசம் 3000 தரப்படுகிறது. எஸ்ஆர்எம் நிறுவனத்தில் 500 கடைகள் உள்ளன. நாங்கள் பணத்தை நேரடியாக கையாள்வதில்லை.எங்கள் தொழிற்சங்கம் வேலூரில் உள்ளது. நாங்கள் கணக்கு மூலம் பணத்தை மாற்றுகிறோம். அங்கிருந்து சேலம் சென்றடைகிறது. அந்த அதிகாரி கட்டுப்பாட்டில் 500 டாஸ்மாக் கடைகள் உள்ளது. ன்றும் ஒரு கடைக்கு மாதம் 3000 வீதம் என்றால், 500 கடைக்கு எவ்வளவு என்பதை நீங்களே கணக்கு போட்டுக்கொள்ளுங்கள்” என்று துல்லியமாக அந்த வீடியோ பதிவில் பேசியிருக்கிறார், ராகவன்.

மண்டல அதிகாரி, நர்மதா தேவி
மண்டல அதிகாரி, நர்மதா தேவி

மேலும், “இதுதவிர ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம் உள்ளிட்ட மாவட்டங்கள் அந்த அதிகாரியின் கட்டுப்பாட்டில் வரும் டிரான்ஸ்பர் மற்றும் பணியில் ஒருவரை நியமிப்பதற்கு தனியாக பெரும் தொகையை தர வேண்டும். இப்போது உள்ள அதிகாரி நர்மதா தேவி ஒருமுறை கூட எங்கள் கடை பக்கமும் வந்தது இல்லை. ஆனாலும், அவர் பெயரை சொல்லி வரும் நபர்கள் வசூலித்து சென்று விடுகிறார்கள்.

இதுபோக ஆடிட் வருவோருக்கு பணம் தர வேண்டும். ” அதிகாரிகளுக்கும் இதில் தொடர்பிருப்பதை வெட்டவெளிச்சமாக்கியிருக்கிறார்.இந்த விவகாரம் குறித்து அங்கிருந்த ஒரு வாடிக்கையாளர் ஒருவர், 130 ரூபாய் குவாட்டர் மது பாட்டிலுக்கு, பத்து ரூபாய் கூடுதலாக கொடுத்து டாஸ்மாக் கடையில் 140 ரூபாய்க்கு வாங்குவதாக தகவலை உறுதிபடுத்துகிறார்.

இதுகுறித்து விளக்கம் அறிய சேலம் மண்டல அதிகாரி நர்மதா தேவியை ‪ பலமுறை தொடர்பு கொண்டும் நமது அழைப்பை எடுக்கவில்லை. அவருடைய எண்ணுக்கு குறுஞ்செய்தி வாயிலாக கேள்விகளை முன்வைத்தோம். சில நிமிடங்களில் நமது லைனில் வந்த வேலூர் டாஸ்மாக் மேலாளர் ஒருவர், ”சம்மந்தப்பட்ட ராகவன் கூறிய சர்ச்சைகளுக்கு அவரிடம் விளக்கம் கேட்டிருக்கிறோம்” என்றார். உயர் அதிகாரிகளுக்கும் இதில் தொடர்பிருப்பதாக அவர் குறிப்பிட்டிருப்பது குறித்து கேட்டதற்கு, அவரது விளக்கத்தையடுத்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்பதாகக்கூறி இணைப்பைத் துண்டித்தார்.

ஜோலார்பேட்டை
ஜோலார்பேட்டை

மேற்பார்வையாளர் ராகவன் கூறிய குற்றச்சாட்டு குறித்த விசாரணை எதையும் முன்னெடுக்காத நிலையில், அவசரம் அவசரமாக, “திருப்பத்தூர் மாவட்டத்தில் அரசு டாஸ்மாக் கடையில் மதுபானங்களை அதிக விலைக்கு விற்றதாக ஊழியர்கள் 6 பேரை தற்காலிக பணியிடை நீக்கம் செய்திருப்பதாக அறிவித்திருக்கிறது, டாஸ்மாக் நிர்வாகம்.

– மணிகண்டன்

அங்குசம் இதழ் - இலவசமாக படிக்க -

Leave A Reply

Your email address will not be published.