கலைக்காவிரி நுண்கலைக்கல்லூரி – தளிர் வசந்தம் நிறைவு விழா !
திருச்சி கலைக்காவிரி நுண்கலைக்கல்லூரியில் தளிர் வசந்தம் நிறைவு விழா செப்-12 அன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக மணப்பாறை புறத்தாக்குடி பங்குந்தந்தை அருள்பணி அருண் பிரசாத் பங்கேற்றார். அவர் தன் சிறப்புரையில், ”கலைகளின் வாயிலாக மாணவர்கள் தனித்திறமையை மட்டும் அல்லாமல் தன்னம்பிக்கையையும் சகிப்புத்தன்மையையும் அன்பையும் வளர்த்து உலகளாவிய சமத்துவத்தை வளர்த்தெடுக்க வேண்டும்” என்று குறிப்பிட்டார்.
தொடர்ந்து போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். இரண்டாவது இடம் இரண்டு அணியினர் பெற்றனர். விக்னேஷ் ஸ்ரீ ரங்கா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மூன்றாவது இடத்தையும் ஏழாயிரம் ரூபாய் ரொக்கப் பரிசையும் பெற்றனர். இரண்டாவது இடத்தை ஹோலி கிராஸ் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 15 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பரிசையும் பரிசு கோப்பையும் பெற்றனர். முதல் பரிசை காட்டூர் மான்போர்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் வென்று 25,000 ரூபாய் ரொக்கப் பரிசை பெற்றனர்.
நிறைவாக நன்றி உரையை கல்லூரி முதல்வர் வழங்கினார். இந்நிகழ்வை ஒருங்கிணைப்பு குழுத் தலைவர் முனைவர் கி. சதீஷ்குமார் மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள் முனைவர் வெங்கட லட்சுமி, முனைவர் லட்சுமி முனைவர் அபர்ணா பிரீத்தா, ஜோசப் பேட்ரிக் ஆகியோர் ஒருங்கிணைத்தனர், நிகழ்வை முனைவர் புவனேஸ்வரி மற்றும் முனைவர் லிண்டா தொகுத்து வழங்கினர்.
– அங்குசம் செய்திப்பிரிவு.





Comments are closed, but trackbacks and pingbacks are open.