அங்குசம் பார்வையில் ‘தண்டேல்’  

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

தயாரிப்பு நிறுவனம் : ‘கீதா ஆர்ட்ஸ்’ அல்லு அரவிந்த், தயாரிப்பாளர் : பன்னிவாஸ். டைரக்‌ஷன் : சந்து மொண்டேட்டி. கதை : கார்த்திக் தீடா.  நடிகர்-நடிகைகள் : நாகசைதன்யா, சாய்பல்லவி, பிரகாஷ் பெலவாடி, ஆடுகளம் நரேன், கருணாகரன், திவ்யா பிள்ளை, பப்லு பிருத்விராஜ், மைம்கோபி, கல்பா லதா, கல்யாணி நடராஜன், மகேஷ் அச்சந்தா, கிஷோர் ராஜு, வசிஷ்டா. ஒளிப்பதிவு : ஷாம்தத், இசை : தேவி ஸ்ரீ பிரசாத், எடிட்டிங் : நவீன் நூலி . தமிழ்நாடு ரிலீஸ் : ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் எஸ்.ஆர்.பிரபு. பி.ஆர்.ஓ. : யுவராஜ்.

ஆந்திர மநிலம் ஸ்ரீகாகுளம் கடல் பகுதி கிராமம் தான் கதைக்களம். [ பக்கா தெலுங்குப் படம் தான். அதை அச்சுஅசல் தமிழ்ப்படம் போல தந்துள்ளார்கள்]  அங்குள்ள மீனவர்கள் வருடத்தில் ஒன்பது மாதங்கள் ஆயிரம் கி.மீ.க்கு அப்பால் உள்ள குஜராத் கடல் பகுதிக்கு  மீன் பிடிக்கச் செல்வார்கள். மூன்று மாதங்கள்தான் ஊரில் இருப்பார்கள். இயற்கைச் சீற்றம், கடல் கொள்ளையர்களின் அட்டகாசம் இதையெல்லாம் சமாளித்து, பிடித்த மீன்களை குஜராத் மார்வாடியிடம் கொடுத்து, காசு வாங்கிவிட்டு ஊர் திரும்புவதற்குள் உயிர் போய் உயிர் வந்துவிடும் அந்த மீனவர்களுக்கு.

இனிய ரமலான் வாழ்த்துகள்

‘தண்டேல்’ திரைப்படம் அப்படிப்பட்ட மீனவ இளைஞன் தான் ராஜு [ நாகசைதன்யா ]. சிறுவயதிலிருந்தே இவனுக்கு சத்யா [ சாய்பல்லவி ] மீது அளவுகடந்த பிரியம். அந்தப் பிரியம் தான் வாலிப வயதில் காதலாகிறது. ராஜு ஊர் திரும்பி வரும் வரை ஒன்பது மாதமும் அசைவம் சாப்பிடாத அளவுக்கு சத்யாவின் காதல் தூய்மையாகவும் உண்மையாகவும் இருக்கிறது. இந்த உண்மைக் காதல் தான், ராஜு ஒன்பது மாதங்கள் கடலுக்குள் செல்வதை சத்யா மனசு ஏற்க மறுக்கிறது. அவன் கடலில் இருக்கும் காலங்களில் எல்லாம் மனசு தவியாய் தவிக்கிறது.

சந்திரா அக்கா [ திவ்யா பிள்ளை ]வின் அண்ணன் மைம் கோபி கடலில் படகு விபத்து ஒன்றில் இறந்துவிட, அதிலிருந்து ராஜு கடலுக்குப் போவதை அடியோடு வெறுத்து, கடலுக்கு போகக்கூடாது என ராஜுவிடம் சத்தியம் வாங்குகிறார் சத்யா. அதையும் மீறி கடலுக்குப் போகிறான் ராஜு.  இதனால் கோபமாகும் சத்யா, கருணாகரனை கல்யாணம் பண்ண சம்மதிக்கிறார். கல்யாண வேலைகள் நடந்து கொண்டிருக்கும் போது, புயல் சீற்றத்தால் படகு உடைந்து, திசைமாறி பாகிஸ்தான் கடல் எல்லைக்குள் போய் அந்நாட்டு ராணுவத்திடம் சிக்கி, கராச்சி சிறையில் அடைக்கப்படுகிறார்கள் ராஜுவும் அவனுடன் போன 21 பேரும்.

அங்குசம் தற்போதைய இதழ்.. படிக்க..

ராஜு விடுதலை ஆனானா? சத்யாவின் கல்யாணம் நடந்ததா? இதன் க்ளைமாக்ஸ் தான் ‘தண்டேல்’.

‘தண்டேல்’ திரைப்படம் இரண்டரை மணி நேரப்படத்திலும் நம் நெஞ்சமெல்லாம் நீக்கமற நிறைந்திருப்பவர் நம்ம சாய்பல்லவி தான். அடி ஆத்தீ… ஒவ்வொரு சீனிலும் நொடிக்கு நொடி நடிப்பில் வெரைட்டியான எக்ஸ்பிரஸன் காட்டி, மனம் முழுவதும் வியாபித்துவிட்டார். நாகசைதன்யாவுடனான காதல் நெருக்கம், அவர் பிரிவிற்குப் பின் காதல் மீது வெறுப்பு, ராஜு கராச்சி சிறையில் சிக்கிக் கொண்ட தகவல் கேட்டதும்  ஆற்றாமையுடனான தவிப்பு, குஜராத் மார்வாடியிடம் பணம் கேட்டு, அங்குள்ள துறைமுகத்தில் நடத்தும் போராட்டம், ராஜுவை மீட்க ஒன்றிய பெண் அமைச்சரிடம் மன்றாடும் இடம் என படம் முழுக்க சாய்பல்லவியின் அசுர நடிப்பு வலையில் விரும்பிச்  சிக்காதவர்கள் யாருமே இருக்க முடியாது.

உங்கள் விளம்பரம் இலட்சக்கணக்கான வாசகர்களை சென்றடைய....

ஒரு சீனில் ராஜுவை நினைத்து சிவலிங்கத்தைக் கும்பிடும் போது, அவரது கைவளையலையும் இடது தோள்பட்டையையும் கூட நடிக்க வைத்து, நம்மை அசரடித்துவிட்டார் சாய்பல்லவி. அதனால் தான் இவரது பெயரை டைட்டில் கார்ட்டில் முதலில் போட்டிருக்கிறார் டைரக்டர். இதற்காகவே டைரக்டர் சந்து மொண்டேட்டிக்கு சல்யூட் அடிக்கலாம். தாயீ… சாய்பல்லவி நீ நீடுழி வாழணும்த்தா…

தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

மீனவ இளைஞன் ராஜுவாக நாகசைதன்யா. இதற்கு முன் நாம் பார்த்த நாகசைதன்யா படம் ‘கஸ்டடி’. நம்ம ஊரு டைரக்டர் வெங்கட் பிரபு தெலுங்கில் டைரக்ட் பண்ணி, தமிழிலும் டப் செய்யப்பட்டு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வந்தது. இப்படத்தில் நீண்ட தாடி, கொஞ்சம் செம்பட்டை தலைமுடியுடன் கேரக்டருக்கு நன்றாகவே பொருந்தியிருக்கிறார். “புஜ்ஜு குட்டி..புஜ்ஜு குட்டி” என சாய்பல்லவியை கூப்பிடும் லவ் எபிசோடிலும் கடல் கொள்ளையர்கள், மணல் கொள்ளையர்கள், கராச்சி சிறையில் தீவிராதிகளுடன் மோதும் ஆக்‌ஷன் சீக்வென்ஸிலும் பையன்  நல்லாத்தான் பண்ணிருக்கான்.

தண்டேல்நம்ம ஊரு கருணாகரனுக்கு இதுல கெளரவமான கெளரவ வேடம். சாய்ப்பல்லவியை பெண் பார்க்க வந்து, அவரது காதல் கதையைக் கேட்டு, அதன் பின் நாகசைதன்யா விடுதலையாகும் வரை உதவியாக இருந்து, உயர்ந்து நிற்கிறார் கருணாகரன். அதே போல் மீன்வர்களில் ஒருவராக வரும் நம்ம  ஆடுகளம் நரேனும் சித்தா கேரக்டரில் அசத்திவிட்டார். சந்திரா அக்காவாக வரும்  திவ்யா பிள்ளையும் சாய்பல்லவிக்கு சப்போர்ட்டாக இருந்து, கதைக்கும் பெரிய சப்போர்ட்டாக இருக்கிறார்.

கேமராமேன் ஷாம்தத்தின் கடின உழைப்பும் தேவிஸ்ரீபிரசாத்தின் பாடல்களும் பின்னணி இசையும் படத்தின் உயிர்ப்பாக இருக்கிறது.இடைவேளைக்கு முன்பு சிவன் வழிபாடு, மாடு வழிபாடு என சங்கி மேக்கப் போட்டுவிட்டு,  இடைவேளைக்குப் பின் பாகிஸ்தான் கராச்சிக்கு கதையைக் கொண்டு போய் நம்ம தேசியக் கொடி, ஆர்ட்டிக்கிள் 370, “ நாங்க ஒட்டு மொத்தமா வடக்குப் பக்கம்  திரும்பி ஒண்ணுக்கு அடிச்சா உலக வரைபடத்துல பாகிஸ்தானே இருக்காது” போன்ற வசனங்களை திரைக்கதையில் புகுத்தி தேசபக்தி பாடம் எடுத்திருக்கிறார் டைரக்டர் சந்து மொண்டேட்டி.

 

               — மதுரை மாறன்  .

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitche

Leave A Reply

Your email address will not be published.