அதற்கும் எனக்கும் சம்பந்தமில்லை…

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

அதற்கும் எனக்கும் சம்பந்தமில்லை…

கடந்த ’அங்குசம்’ இதழ் ஜில்லுன்னு சினிமா பகுதியில் சினிமா பி.ஆர்.ஓ.ப்ரியா குறித்த செய்தி வெளியிட்டிருந்தோம். நமது இதழ் கடைகளுக்கு வந்த அன்றே நம்மைத் தொடர்பு கொண்டார் ப்ரியா.

திருச்சியில் டைட்டானிக் கப்பலா ? எதிர்பார்ப்பை எகிற வைக்கும் அட்டகாசமான பொருட்காட்சி !

மக்களுடன் மண்ணச்சநல்லூர் S.கதிரவன் ! நம்ம வீட்டு எம்.எல்.ஏ. !

“எனது திருமண வேலைகள் சம்பந்தமாகத்தான் கடந்த நான்கு மாதங்களாக எனது வாட்ஸ்-அப் குரூப்பிலும் சோஷியல்மீடியாவிலும் ஆக்டிவாக இல்லையே தவிர நீங்கள் குறிப்பிட்டு எழுதிய சம்பவத்திற்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

சினிமா உலகில் பெண்களின் வளர்ச்சியையும் முன்னேற்றத்தையும் சகித்துக் கொள்ள முடியாமல் வக்கிரமாக விமர்சிக்கும் போக்கு இங்கே சர்வசாதாரணமாகிவிட்டது. அதற்கு நானும் விதிவிலக்கல்ல. தனிமனுஷியாக போராடித்தான் நல்ல நிலைக்கு வந்துள்ளேன். மேலும் எனது பெற்றோர் எனக்காகவும் எனது எதிர்காலத்திற்காகவும் கோடிக்கணக்கில் சேர்த்து வைத்திருக்கும்போது நான் ஏன் வேறு வழிகளில் சம்பாரிக்க வேண்டும்? அப்படி சம்பாரிக்க வேண்டிய அவசியம் எனக்கில்லை.

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

எனது வளர்ச்சியைப் பிடிக்காத சில அனாமதேயங்கள் என்னைப் பற்றி அவதூறு கிளப்பி வருகிறார்கள். வக்கிரமனம் கொண்ட அப்படிப்பட்ட அனாமதேயங்களை என்னாலும் அடையாளம் காட்ட முடியும். ஆனால் சாக்கடையின் மீது கல்லெறிந்து, அந்த அசிங்கம் என்மீதும் தெறிக்கும் என்பதால், நான் என்னுடைய வேலையைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன்” என தனது தரப்பு  விளக்கத்தையும் கூறினார்.  நமது செய்தியால் பி.ஆர்.ஓ.ப்ரியாவின் மனம் புண்பட்டிருந்தால் அதற்காக வருந்துகிறோம்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.