மனநோயாளிகளை உருவாக்கும் இன்டர்நெட்  மருத்துவம் !😱😡😳

0

அங்குசம் இதழ் இணையதளத்தில் E-Book வாசிக்க... இந்த லிங்கை பயன்படுத்துங்கள் - அங்குசம் அச்சு இதழ்.. உங்கள் இல்லம் தேடி வர ஆண்டு சந்தா ரூபாய் 500 மட்டுமே - தொடர்பு எண் - 9488842025

இன்டர்நெட்டில் மருத்துவம் சரியா? தவறா? மனநோயாளிகளை உருவாக்கும் இன்டர்நெட்  மருத்துவம்

 

இன்டர்நெட்  டாக்டர் எப்படி பிரச்சனையை உருவாக்குகிறார் என்று பார்ப்போமா? ஒருவருக்கு ஒரு நோய்க்கான ஆரம்ப அறிகுறிகள் தென்படுகின்றன.அவருக்கு தொண்டை வலி மற்றும் சளியோடு கொஞ்சம் ரத்தம் வெளியேறுகிறது ..

அடகு - ஏல நகையை மீட்டு மறு அடகு வைக்க - விற்க

இது தான் பிரச்சனை . அவர் உடனே செய்ய வேண்டியது என்ன?  தான் காண்பிக்கும் குடும்ப மருத்துவரிடம் சென்று காண்பித்து அந்த நோயை பற்றி கூறி அந்த நோயில் இருந்து விடுதலை பெற முயற்சிக்க வேண்டும்

நீங்கள் வேலை பெறுவது எளிது...

ஆனால் நடப்பது என்ன? “I am suffering from throat pain with blood while coughing. what is the diagnosis ?” (எனக்கு தொண்டை வலி இருக்கிறது. இருமும் போது சளியுடன் ரத்தம் வருகிறது) என்று இன்டர்நெட்டில்  தட்டச்சுகிறார்..  அதுவும் கேளுங்கள் தரப்படும். தட்டுங்கள் திறக்கப்படும் எனும் விவிலியத்தின் வசனங்கள் போல..  நூற்றுக்கணக்கான சம வார்த்தைகள் கொண்ட தகவல்களை கொட்டும்.  அதில் இருந்து முதல் செய்தியை அன்னார் திறந்து பார்ப்பார்.

3

அதில் ” blood during cough may be the symptom of throat cancer . it can be tuberculosis also. kindly consult a pulmonary physician ” என்று பதில் வருகிறது  (இருமும் போது சளியுடன் ரத்தம் வந்தால் அது காச நோயாகவோ அல்லது தொண்டையில் வரும் புற்று நோயாகவோ இருக்கலாம். எதற்கும் மருத்துவரிடம் சீக்கிரம் காட்டுங்கள்”)  இதை படித்து நம்மாளுக்கு உடனே அடி வயிறு கலக்கி பேதியாகும். ஆகா.. நமக்கு கேன்சர் வந்துருச் சாம்லப்பா?  வசூல் ராஜா படத்தில் வரும் ஜாகிர் போல  ” இன்னும் வாழ்க்கைல எதுவுமே பாக்கலையே இறைவா.. அதுக்குள்ள எனக்கு கேன்சரா? இறைவா ஏன்  இப்படி சோதிக்குற?” என்று உள்ளுக்குள்ளேயே அழுது புலம்புவார்.

அடுத்து அதே இன்டர்நெட்  டாக்டரிடம் “what are all the investigation to be done for throat cancer?”  (தொண்டை புற்று நோய்க்கு செய்ய வேண்டிய பரிசோதனைகள் யாவை?)” என்று அடிப்பார் .அதுவும் நிறைய ரத்தப்பரிசோதனைகள் ஒரு சிடி ஸ்கேன் என்று தட்டிவிடும்.

4

அருகில் இருக்கும் பெரிய ரத்த பரிசோதனை கூடத்திற்கு கால் செய்து அந்த பரிசோதனைகளை உடனே செய்வார். அந்த பரிசோதனைகளில்  30 டெஸ்ட் இருந்தால் ஒரு 5 டெஸ்ட் நார்மலை விட கூடவோ குறைவாகவோ இருக்கும். உதாரணம்  அதில் ஹீமோகுளோபின் 12.5 g/dl என்று வரும். நார்மலாக 14&-16 இருக்க வேண்டும்.

உடனே நம்மவர் “my haemoglobin is 12.5 . what is the disease I am suffering from ?” ( எனக்கு ஹீமோகுளோபின் 12.5 இருக்கிறது. எனக்கு என்ன நோய் என்று கூற இயலுமா?)” என்று இன்டர்நெட்டில் கேட்பார்.  உடனே இண்டர்நெட் கிளியும் பல சீட்டுகளை எடுத்துப்போடும் அதில் நல்ல சீட்டை நம்மவர் எடுப்பார். அதில் “low haemoglobin in a male patient may be due to presence of carcinoma”  (ஆண்களுக்கு ஹீமோகுளோபின் குறைவாக இருப்பது புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம்)

என்று கடைசி பத்தியாக இருக்கும்.  முதலில் இருக்கும்  ” உணவு சார்ந்த ஊட்டச்சத்து குறைபாடு.. பைல்ஸ் வியாதி.. நாள்பட்ட இன்பெக்சன்.. வயிற்றில் குடல்புழு இருப்பது ” போன்ற காரணங்கள் அனைத்தையும் விட்டுவிட்டு கடைசி வரியாக இருக்கும் அந்த கேன்சரை கெட்டியாகப் பிடித்துக்கொள்வார்.

இப்போது தனக்கு கேன்சர் வந்துவிட்டதாக 90 சதவிகிதம் உறுதி செய்து கொண்ட நம்மவர்  அடுத்து சிடி ஸ்கேன் எடுக்க வேண்டும்.  சிடி ஸ்கேன் எடுக்க ஒரு அப்பாவி மருத்துவரின் பரிந்துரை வேண்டுமல்லவா?  அன்று மாலையே மருத்துவருக்கு அப்பாய்ண்ட்மெண்ட ஃபிக்ஸ் செய்வார்.  மருத்துவரிடம் சென்று  அங்கு நடக்கும் சம்பாசனையைக் காண்போம்

மருத்துவர் கேட்கிறார்  ” சார்.. உங்களுக்கு என்ன செய்கிறது?”

நம்மவர் எதுவும் பேசாமல்  தன்னகத்தே வைத்திருக்கும் கத்தையான அந்த லேப் ரிபோர்ட்டை மருத்துவரிடம் காட்டி  ” “இதைப்பாருங்க சார்” என்கிறார் மருத்துவர் முழுவதும் பார்த்து விட்டு  “எல்லாம்  ஓகே தான்.  சாப்பாட்டுல சரி பண்ணலாம் . கொஞ்ச நாள் சப்ளிமெண்ட் எடுத்தா போதும்  . மத்தபடி பிரச்சினையில்லை. உங்களுக்கு இருக்குற சிம்ப்டம்ஸ் சொல்லுங்க சார்”

நம்மவர்  ” சார்… நல்லா பாருங்க சார்.. எதுவும் பிரச்சனையில்லையா?”

மருத்துவர் ” ரத்த டெஸ்ட்ல ஒரு பிரச்சனையும் இல்லை சார். உங்களுக்கு என்ன செய்யுதுனு சொல்லுங்க ப்ளீஸ்” “ஒரு மாசமா தொண்டை வலி சார். கடந்த ஒரு வாரமா இருமுனா சளியோட ரத்தம் ஒட்டிக்கிட்டு வருது”.  மருத்துவர் தொண்டையில் டார்ச் அடித்து பார்த்து விட்டு

“நல்லா இன்ஃபெக்சன் ஆகிருக்கு சார். நான் ஒரு கோர்ஸ் ஆண்ட்டிபயாடிக் மாத்திரை தரேன் எடுங்க. கூடவே பீடாடைன் கார்க்லிங் பண்ணுங்க. சரியாகும். திரும்ப வாங்க பாக்கலாம்”

“சார்ர்ர்ர்ர்… Naso pharyngeal carcinomaனு படிச்சேனே சார்..” “எந்த மெடிக்கல் காலேஜ்ல சார் நீங்க  படிச்சீங்க? எந்த பேட்ச் ?” “சார்..  ப்ரவுஸ் பண்ணும் போது எனக்கு கேன்சர் இருக்குற மாதிரி சொல்லுச்சு சார். நீங்க ஒரு பிரச்சனையும் இல்லனு சொல்றீங்க. ஒரே கன்ஃப்யூசனா இருக்கு சார்.”

” ஹா ஹா.. naso pharyngeal carcinomaலாம் இல்ல சார். அது இந்த வயசுல வராது. அது போக உங்களுக்கு அதுக்கான எந்த ரிஸ்க் ஃபேக்டரும் இல்ல. உங்கள செக்  பண்ணிப்பாத்ததுல இது ஜஸ்ட் கிருமித்தொற்று தான். சரியாகிடும். பயப்படாம போய்ட்டு வாங்க”

” சார்.. சாரி.. இப்டி கேக்குறதுக்கு..எதுக்கும் ஒரு CT scan எழுதித்தர்றீங்களா? பாத்துடுவோம் சார் .. நீங்க எழுதிக்கொடுத்தா எனக்கு இன்சூரன்ஸ்ல கவராகிடும் . ப்ளீஸ் சார்”

“சார்.. விளையாடாதீங்க.. உங்களுக்கு இன்சூரன்ஸ்ல ஃப்ரீயா எடுக்குறாங்கங்குறதுக்காக சிடி ஸ்கேன தேவையில்லாம எடுக்க முடியாது. தேவையில்லாத ரேடியேசன் சார்.. அத தேவையில்லாம எப்படி எழுதித்தர்றது”

“சார்.. இஃப் யூ டோண்ட் மைண்ட்.. எனக்கு நெட்ல படிச்சதுல இருந்தே ஒரே ஸ்ட்ரஸ் டிப்ரசனா இருக்கு.. தயவு செய்து அத எழுதிக் கொடுத்தா சிடி ஸ்கேன் பாத்துட்டு நான் அந்த ஸ்ட்ரெஸ்ல இருந்து வெளிய வந்துடுவேன்.. ப்ளீஸ் சார்.. ப்ளீஸ்”

“என்ன சார் உங்க கூட இப்டி .. என்று சலித்துக்கொண்டு சிடி ஸ்கேன் எழுதிக் கொடுத்தார் டாக்டர்

இப்போது ரிப்போர்ட் வந்தது. அதில் mild deviated nasal septum maxillary sinusitis (மூக்கு தண்டுவடம் லேசாக வளைந்திருப்பது/சைனஸ் பிரச்சனை)  என்று இருந்தது உடனே நம்மவர் “”can deviated nasal septum can be the cause of throat cancer?” (மூக்கு தண்டுவடம் வளைந்திருப்பது தொண்டை புற்று நோயை உண்டாக்குமா?) என்று டைப் செய்து எண்டர் பட்டனை தட்டினார்.

அதில் ஒரு செய்தியை தட்டினால்

“there may be a rare chance of people with deviated nasal septum to develop sino nasal polyposis which may very rarely change to carcinoma”

(மூக்கு தண்டுவடம் வளைந்திருப்பவர்களுக்கு மிக அரிதாக தொண்டை புற்று நோய் வந்திருக் கிறது)  என்று இருந்தது…  இப்படியாக அடுத்த நாள் அந்த ரிப்போர்ட்டை தூக்கிக்கொண்டு அதே மருத்துவரிடம் ஓடுகிறார்..

இப்படியாக இன்டர்நெட்டுக்கும் மருத்துவ ருக்கும் ஓடி ஓடி ஒருநாள் மனநல மருத்துவரிடம் செல்லும் நிலைக்கு ஆளாகி  வாழ்நாள் முழுவதும் நோய்கள் குறித்த அச்சத்துடனே வாழ்கிறார் நம்மவர்.

இன்டர்நெட்டில் விடை கேட்பது மனநோய்க்கு வழிவகுக்கும்.  இதுபோன்ற மனநோயில் தாங்கள் சிக்கியிருந்தால்  இப்போதே வெளிவந்து விடுங்கள்.  உங்களுக்கென ஒரு மருத்துவரை குடும்ப மருத்துவராக வைத்துக்கொள்ளுங்கள்

ஆரம்ப கட்ட சிகிச்சை களை அவர் வழங்குவார்.  பிறகு அவர் தேவைப்பட்டால் அடிப்படை பரிசோதனைகளை செய்வார்.  அதிலும் தேவைப்படும் போது சிறப்பு மருத்துவர்களுக்கு பரிந்துரை செய்வார்.  இதுவே அந்த மனநோயில் இருந்து வெளிவர உதவும் சிகிச்சையாகும்

ஆயிரம் புத்தகம் பேசாத அறிவை  ஒரு அனுபவம் பேசி விடும்.  நூறு கூகுள் பத்திகள் தராத உண்மையை மருத்துவனின் ஒரு சொல் கூறி விடும்.  உங்களுக்கான மருத்துவரை எத்தனை அளவு கோல் வைத்து வேண்டுமானாலும் தேர்ந்தெடுங்கள். ஆனால் அவ்வாறு தேர்ந் தெடுத்த பிறகு அந்த  மருத்துவரை நம்புங்கள்.

உங்களது மருத்துவம் சம்பந்தமான  உடல்நலம் தொடர்பான விஷயங்களில் அவரது ஆலோசனை மற்றும் கருத்தைக் கேட்டுப் பெறுங்கள்  அதுவே சிறந்தது.  அறிவுப்பூர்வமானது மன அமைதி தரக்கூடியது. சைபர்காண்ட்ரியாவுக்கு ஆளாகிவிட வேண்டாம் அன்பர்களே ..!

Dr.A.B.ஃபரூக் அப்துல்லா,

பொது நல மருத்துவர், சிவகங்கை

Furry genius pet hospital

Leave A Reply

Your email address will not be published.