சமந்தாவை சரித்த சாபமும் கோபமும்!
சமந்தாவை சரித்த சாபமும் கோபமும்!
‘சாகுந்தலம்’ ரீலீஸ்:
ஐந்து மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு கடந்த ஏப்ரல் 14—ஆம் தேதி ரிலீசானது சமந்தா நடித்த தெலுங்குப் படமான ‘சாகுந்தலம்’.
தெலுங்கு சினிமாவின் பிரபலமான இயக்குனர் குணசேகரன் டைரக்ட் பண்ணிய இந்த ‘சாகுந்தலம்’ கிட்டத்தட்ட 60 கோடியில் தயாரானது.
மிகவும் எதிர்பார்ப்புடன் இந்தப் படத்தை வாங்கி வெளியிட்டவர், விஜய்யை வைத்து ‘வாரிசு’ படத்தைத் தயாரித்த ‘தில்’ ராஜூ.
ஆனால் படமோ அனைத்து மொழிகளிலும் டப்பா டான்ஸாடி, வாங்கி ரிலீஸ் பண்ணியவர்களின் டங்குவாரை அத்துவிட்டது.
தமிழ்நாட்டில் குறிப்பிட்ட சில மாநகரங்களில் மட்டும் தான் ‘சாகுந்தலம்’ ரீலீசானது. அதுவும் 14—ஆம் தேதி ரிலீசான படத்தை, 16—ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை பகல் காட்சியுடன் பல தியேட்டர்களில் தூக்கிவிட்டார்கள்.
இதே கதை தான் ஆந்திரா உட்பட பல மாநிலங்களில். எப்படிப் பார்த்தாலும் ‘சாகுந்தல’த்தால் 55 கோடி ரூபாய் ”கோவிந்தா” தான்.
இதனால் பலத்த மனசேதாரத்திற்குள்ளாகியிருக்கார் சமந்தா. அவரது கைவசம் இருக்கும் ஒரே படம் ‘குஷி’ என்ற தெலுங்குப்படம் மட்டும் தான்.
சமந்தாவுக்கு ஏற்பட்ட இந்த பரிதாப நிலை குறித்து தயாரிப்பாளர் ‘தில்’ ராஜூவுக்கு நெருக்கமான தமிழ்த் தயாரிப்பாளர் ஒருவரிடம் பேசினோம். “இது பரிதாபப்படக்கூடிய விசயம் இல்லங்க, சந்தோஷப்பட வேண்டிய விசயம்.
சாபமும் கோபமும்:
இதே ‘சாகுந்தலம்’ படத்தில் துர்வாச முனிவர், சகுந்தலையாக நடித்த சமந்தாவுக்கு சாபம் விடுவார். ஆனால் நிஜத்தில் அப்பாவி இளைஞன் –கணவன் நாகசைதன்யா விட்ட சாபமும் அவனின் கோபமும் தான் சமந்தாவை இந்த நிலைக்கு கொண்டு வந்திருக்கு.
தெலுங்கு சினிமாவில் நாகார்ஜூனா குடும்பம் மிகப் பெரிய பாரம்பரியமும் செல்வாக்கும் கொண்டது. அப்படிப்பட்ட நாகார்ஜுனாவின் மகன் நாகசைதன்யா, சமந்தாவை மனப்பூர்வமாக காதலித்து கல்யாணம் செய்து கொண்டார்.
ஆந்திரா பஞ்சராஹில்ஸில் தனி மாளிகை, கோவாவில் வீடு, மும்பை ஹைடெக் ஃப்ளாட், சென்னையில் சமந்தாவின் பெற்றோர் வசிக்க ஆடம்பர பங்களா என எல்லாமே சமந்தாவின் மீதுள்ள தூய காதலால் அள்ளி வழங்கினார் சைதன்யா.
பொதுவாகவே நடிகைகள் கல்யாணத்திற்கு முன்னால் ‘அப்படி—இப்படி’ இருந்தாலும், கல்யாணத்திற்குப் பிறகு அடக்க ஒடுக்கமாகிவிடுவார்கள்.
பத்து பதினைந்து ஆண்டுகள் கழித்து, “எனது பிள்ளைகள் வளர்ந்துவிட்டார்கள். நான் நடிக்கிறதுக்கு என் ஹஸ்பெண்ட் ஓகே சொல்லிட்டார்” என்ற ரெடிமேட் ஸ்டேட்மெண்ட் விடுவார்கள்.
ஆனால் சமந்தாவோ சைதன்யாவின் மனைவியான பிறகு தான் ஓவர் ஆபாசமாக நடித்தார். சில ஹீரோக்களுடன் ‘பெட்ரூம்’ சீன்களில் படுமோசமாக நடித்தார்.
அதுமட்டுமல்ல சில ஆல் இண்டியா ‘கனெக்டர்கள்’ மூலம் பல நாடுகளுக்கும் பறக்க ஆரம்பித்தார்.
இந்தக் கொடுமைகளையெல்லாம் மனசை கல்லாக்கிக் கொண்டு சைதன்யா சகித்துக் கொண்டாலும் ‘அது’க்குக் கூட சமந்தாவின் ‘பெர்மிஷன்’ வாங்க வேண்டிய நிலைமை.
இதைவிட பெரிய கேவலம் தாலி கட்டிய புருஷனுக்கு இருக்க முடியுமாங்க?
சமந்தாவின் இந்த சண்டி ராணித்தனம் நாகார்ஜுனா குடும்பத்தையே நிலைகுலைய வைத்தது.
இனிமேல் சமந்தா சமத்துப் பிள்ளையாக இருக்கவே மாட்டார் என்ற முடிவுக்கு வந்து, கல்யாணமாகி நாலே வருடங்களில் சமந்தாவை விவாகரத்து செய்துவிட்டார் சைதன்யா.
நல்ல வேளை அந்தப் பையன் நாலு வருசத்துலேயே தப்பிச்சுட்டான். இல்லேன்னா வாழ்க்கை முழுவதும் ரணகளப்பட்டிருப்பான்.
அந்த அப்பாவி இளைஞனுக்கு செய்த பெரும் துரோகம் தான் சமந்தாவுக்கு மயோசிடீஸ்ங்கிற வியாதி, அப்புறம் என்னென்னமோ வியாதி வந்து சினிமாவுலேயே நடிக்க முடியாத அளவுக்கு ஆகிப்போச்சு.
ஒருவனோ—ஒருத்தியோ செய்த கெட்ட வினை, அவர்களின் சந்ததியைத் தாக்கும் என்று சொல்வார்கள்.
ஆனால் இந்த டிஜிட்டல் யுகத்தில் அவரவர்கள் செய்த தீவினை, உடனுக்குடன் அவர்களுக்கே பெரும் தீவினையாக மாறிவிடும். இதற்கு சமந்தாவே சாட்சி” என்றார்.
அட ஆமால்ல, இதுவும் சரியாத்தான் இருக்குல்ல.
–மதுரைமாறன்
மேலும் சினிமா செய்திகள் படிக்க:
https://angusam.com/vishal-joins-with-hari-for-the-3rd-time/
அங்குசம் யூடியூப்