பிளாஸ்டிக்கின் முடிவே இனிய வாழ்வின் தொடக்கம் ! கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சி
பிளாஸ்டிக்கின் முடிவே இனிய வாழ்வின் தொடக்கம் ! கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சி – செயிண்ட் ஜோசப் தன்னாட்சி கல்லூரியின் விரிவாக்கத்துறை செப்பர்டு மற்றும் வணிகவியல் துறை சார்பாக பிளாஸ்டிக்கின் முடிவே இனிய வாழ்வின் தொடக்கம் என்கிற தலைப்பில் நெகிழியை உபயோகிக்காதீர்கள் துணி பைகளை இனி உபயோகிங்கள் என்கிற நோக்கில் விழிப்புணர்வு நிகழ்ச்சி திருச்சி மல்லிகைபுரத்தில் உள்ள கீரைத்தோட்டத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சி நடைபெறுவதற்கு முன்பாக கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கல்லூரியின் முதல்வர் அருள் முனைவர் மரியதாஸ் சே ச நெகிழிகள் இல்ல உலகம் படைபோம் மண் வளத்தை பாதுகாப்போம் என்று கூறி துணி பைகளை வெளியிட்டார்.
விரிவாக்கத்துறையின் இயக்குநர் அருள்முனைவர் சகாயராஜ் சே ச கல்லூரியின் துணை முதல்வர் முனைவர் அலெக்சாண்டர் பிரவின்துரை தேர்வு நெறியாளர் முனைவர் அலெக்ஸ் வணிவியல் துறைத்தலைவர் முனைவர் ஜான் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சுற்றுபுற சூழல் சீர்கேடு மற்றும் மண்ணை மலடக்கும் நெகிழியை பற்றியும் தற்போதைய இயற்கை மாற்றங்களை பற்றியும் வணிகவியல் மாணாக்கர்களுக்கு எடுத்துக்கூறினார்கள்.
இதன் பின்பு மல்லிகைபுரம் கீரைத்தோட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கீரைத்தோட்டத்தின் தலைவர் சவரியராஜ் செயலர் செல்வேந்திரன் பொருளர் செபாஸ்டின் மற்றும் அமிர்தராஜ் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்கள்.
முன்னதாக மாணவி பிரதிக்ஷா லெஷ்மி வந்தவர்களை வரவேற்றார் முடிவில் மாணவர் பிரவின் துறைராஜ் நன்றி கூறினார் மாணவி காவ்யா இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார் கீரைத்தோட்டத்தில் உள்ள மக்கள் அனைவருக்கும் துணி பைகள் வழங்கப்பட்டன. முதுகலை வணிகவியல் துறை மாணாக்கர்கள் இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தார்கள்.