மிரட்டும் மாமியார் ! பிளேபாய் டாக்டர் !! வீதிக்கு வந்த மாஜி பெண் டிஜிபியின் குடும்ப விவகாரம் !
மிரட்டும் மாமியார்!பிளேபாய் டாக்டர் !! வீதிக்கு வந்த மாஜி பெண் டிஜிபியின் குடும்ப விவகாரம்!
பல பெண்களுடன் தொடர்பு வைத்துக் கொண்டிருப்பதை கண்டித்ததால் அடித்து சித்ரவதை செய்வதாக முன்னாள் பெண் டிஜிபி திலகவதியின் மகனும், பிரபல மருத்துவருமான பிரபுதிலக் மீது அவருடைய மனைவி பரபரப்பு புகார் அளித்துள்ளார்.
தமிழக காவல்துறையில் டிஜிபி ஆக பணியாற்றி ஓய்வு பெற்றவர், திலகவதி (70). இவருடைய மகன், பிரபு திலக் (48). மயக்கவியல் மருத்துவர். இவருடைய மனைவி ஸ்ருதி (42). இவர்களுக்கு 14 வயதில் ஒரு மகள், 7 வயதில் ஒரு மகன் இருக்கின்றனர். இவருடைய பெற்றோர் வீடு, சேலம் அழகாபுரம் பிருந்தாவன் சாலையில் உள்ளது.
இந்நிலையில், ஸ்ருதி திலக் தன் தந்தை கண்ணுசாமியுடன் சேலம் மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புதன்கிழமை (செப். 28) ஒரு புகார் அளித்தார். அவரிடம் பேசினோம்.
”எனக்கும், முன்னாள் டிஜிபி திலகவதியின் மகன் மருத்துவர் பிரபு திலக்கிற்கும் கடந்த 2007ம் ஆண்டு திருமணம் நடந்தது. சேலம் விநாயகா மிஷன் மருத்துவக்கல்லூரியில் என் கணவர் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். திருமணம் நடந்தது முதலே அவருடைய நடவடிக்கைகள் எனக்குப் பிடிக்கவில்லை. இருவருக்கும் கருத்து வேறுபாடு இருந்து வந்தது. ஆனாலும் குழந்தைகளுக்காக எல்லாவற்றையும் சகித்துக் கண்டிருந்தேன்.
பிரபு திலக்குடன் பணியாற்றி வந்த பெண் மருத்துவர் ஒருவருடன் அவருக்கு தவறான தொடர்பு இருந்து வருகிறது. அந்த பெண் மருத்துவர், குடும்ப நண்பர் என்பதால், எனக்கு ஆரம்பத்தில் எந்த சந்தேகமும் ஏற்படவில்லை. ஒரு நாள், கணவருடன் வீட்டுக்கு வந்த அந்த பெண் மருத்துவர் மது போதையில் இருந்தார்.
நள்ளிரவில் பார்த்தபோது அந்த பெண் மருத்துவரும், என் கணவரும் ஒரே படுக்கையில் தவறான உறவில் இருந்தனர். இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தேன்.
இதை வெளியே சொன்னால், எங்களின் குடும்ப மானம் போய் விடும் என இருவரும் என்னிடம் மன்னிப்பு கேட்டனர். இதுகுறித்து எனது மாமியார் திலகவதியிடம் கூறினேன். எனது மகனுக்கு எது சந்தோஷம் தருமோ, அவன் அப்படியே இருப்பான். அதை அனுசரித்துச் செல்ல வேண்டும் என அவர் கூறினார்.
இதையடுத்து நாங்கள் சென்னைக்கு சென்று வசித்து வந்தோம். அங்கும் ஒரு பெண்ணுடன் என் கணவர் தொடர்பு வைத்துக் கொண்டுள்ளார். அந்தப் பெண் ஆஸ்திரேலியாவில் 6 மாதமும், தமிழகத்தில் 6 மாதமும் இருப்பார். அந்தப் பெண், எங்கள் வீட்டின் மாடியில் உள்ள வீட்டில் வாடகைக்கு வசித்து வந்தார்.
அவருடன் என் கணவர் நட்பாக பழகி வருவதாகத்தான் ஆரம்பத்தில் நினைத்து இருந்தேன். அந்த பெண்ணுடனும் தவறான தொடர்பு வைத்து இருந்தது பின்னர் தெரிய வந்தது. இதைக் கண்டித்த என்னை அடித்து துன்புறுத்தினார். கடந்த டிசம்பர் மாதம் அவர் என்னை தாக்கியதில் முகம் வீங்கிப் போனது.
இதுகுறித்து, சென்னை மாநகர காவல்துறையில் புகார் அளித்தேன். அதன்பேரில், காவல்துறையினர் நேரில் வந்து விசாரித்தனர். மனைவியை தெரியாமல் அடித்து விட்டேன் என்று பிரபு திலக் மன்னிப்பு கேட்டதால் அவர்களும் வழக்குப்பதிவு செய்யாமல் விட்டு விட்டனர்.
மீண்டும் அவர் மதுப்பழக்கத்திற்கு அடிமையானதோடு, சேலத்தைச் சேர்ந்த பெண் மருத்துவருடன் பழையபடி தவறான தொடர்பை தொடர்ந்து வருகிறார். அவர் சொல்லிக் கொடுத்ததன் பேரில், வீட்டுக்கு வந்து என்னை அடித்து சித்ரவதை செய்தார்.
நான் சட்டம் பயின்றுள்ளதால் அண்மைக் காலமாக சென்னை உயர்நீதிமன்றத்தில் பிராக்டீஸ் செய்து வருகிறேன். என்னுடன் பணியாற்றி வரும் சக வழக்கறிஞர் நண்பர்களை எனக்கு சப்போர்ட் செய்யக்கூடாது என்று அவர்களை செல்போனில் மிரட்டுகிறார். அவருடைய கொடுமை தாங்க முடியாமல் குழந்தைகளுடன் சேலத்தில் உள்ள என் பெற்றோர் வீட்டுக்கு வந்துவிட்டேன்.
இதற்கிடையே அவர் லெவன்:லெவன் என்ற சினிமா தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கினார். நடிகர் சிபிராஜை வைத்து ‘வால்டர்’ என்ற சினிமா படத்தை தயாரித்தார். அப்போது படம் தயாரிப்பதற்காக அவர் பணம் கேட்டதன் பேரில், என் தந்தை சேலத்தில் உள்ள வீட்டை அடமானம் வைத்து ஒரு கோடி ரூபாய் கொடுத்தார்.
என் கணவராலும், ஓய்வு பெற்ற டிஜிபி ஆன என் மாமியார் திலகவதியாலும் என்னுடைய உயிருக்கும், குழந்தைகளின் உயிருக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வரும் அதிகாரிகளையும் மிரட்டி விடுகின்றனர். எங்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும்.
இதற்கு முன்பு கடந்த 2021ம் ஆண்டு டிசம்பர் மாதம் என்னை அடித்து கொடுமைபடுத்தினார். உடனே 100 கால்பண்ணி புகார் செய்தேன்.. உடனே அவர் இனிமே நான் பண்ணமாட்டேன் என்று மன்னிப்பு கேட்டு அழுதார்.. நானும் குழந்தைகளுக்காக பொறுத்துக்கொண்டேன், டிசம்பர் 2021 சென்னை கமிஷனர் அலுவலகத்தில் என் உயிருக்கு ஆபத்து என்று புகார் கொடுத்தேன் அப்போதும் நடவடிக்கை எடுக்கவில்லை, விசாரிக்கும் அதிகாரிகளை மிரட்டுவதால் யாரும் நடவடிக்கை இருக்கிறார்கள்..
2016ஆம் ஆண்டு மது கடத்தல் வழக்கில் முதல்குற்றவாளியாக சேர்க்கப்பட்டு முன்ஜாமீன் எல்லாம் வாங்கினார். கடைசியில் தனக்கு இருக்கும் அதிகாரத்தை பயன்படுத்தி அந்த வழக்கே இல்லாமல் செய்து விட்டார்.
அந்த அளவிற்கு செல்வாக்கு மிகுந்தவர். நாங்கள் சாதாரண நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்கள் எங்கள் உயிருக்கு எந்த பாதுகாப்பும் கிடையாது…
இப்போதும் சேலத்தில் புகார் கொடுத்து 18 நாட்கள் ஆகிவிட்டது… இது வரை எந்த விசாரணையும்… நடக்கவில்லை.. என்றார்.
திருமணத்தின்போது வரதட்சணையாக கொடுத்த 170 பவுன் நகைகள், ஒரு கோடி ரூபாய் ரொக்கம் ஆகியவற்றையும் திருப்பித்தர வேண்டும். என்னை அடித்துக் கொடுமைப்படுத்திய அவர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என கண்ணீர் மல்கக் கூறினார் ஸ்ருதி திலக்.
மருத்துவர் பிரபு திலக், ஸ்ருதி ஆகிய இருவருக்குமே அவர்களின் முதல் திருமணம் தோல்வியில் முடிந்து போயிருக்கிறது. இருவருமே இரண்டாவது திருமணம் செய்து கொண்டவர்கள்தான். ஆனாலும், மருத்துவர் பிரபு திலக், ஸ்ருதியை கரம் பற்றிய பிறகும் தனது ‘பிளேபாய்’ நடவடிக்கைகளை தொடர்ந்து வந்துள்ளதாக சொல்லப்படுகிறது. இரண்டாவது வாழ்க்கையும் நாசமாகி விடக்கூடாது என்பதாலேயே ஸ்ருதியும் கூடுமான வரை அவரை அனுசரித்துப் போயிருக்கிறார். ஒருகட்டத்தில் எல்லாமே தன் கையைவிட்டுப் போகவே, அவர் தற்போது காவல்துறையின் கதவுகளை தட்டியிருக்கிறார் என்கிறார்கள்.
இது தொடர்பாக சேலம் அம்மாபேட்டை மகளிர் காவல் ஆய்வாளர் சிவகாமி விசாரித்து வருகிறார் என்கிறார்கள். புகார் மனு கொடுத்து 18 நாட்கள் ஆகியும் இன்னும் சிஎஸ்ஆர் ரசீது போடப்படவில்லை.
அதேநேரம், விசாரணைக்கு ஆஜராகும்படி டாக்டர் பிரபுதிலக், மாஜி டிஜிபி திலகவதி ஆகியோருக்கு காவல்துறை தரப்பில் தகவல் அளித்து இருக்கிறோம் என்கிறார்கள்.
ஸ்ருதியின் குற்றச்சாட்டு குறித்து மருத்துவர் பிரபுவிடம் கேட்ட போது .. எனக்கு இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள் அந்த குழந்தைகளின் நன்மையை கருதி, நானும் அவர்கள் மீது சரிக்கு சரியா குற்றச்சாட்டுகளை சுமத்துவதுவதில் எனக்கு விருப்பம் இல்லை, என் மீது சொல்லும் குற்றச்சாட்டுகளை அவர்கள் நிறுபிக்க வேண்டும், அதை சட்டப்படி எதிர்கொள்கிறேன், , நானும் என் தரப்பு நியாயத்தை காவல்துறையினர் இடம் சொல்லியிக்கிறேன். நான் சினிமா ஸ்டாரோ , அரசியல்வாதியோ இல்லை, இது எல்லா குடும்பத்துக்குள் நடக்கும் பிரச்சனைகள் தான், பத்திரிகைகளில் எழுதுகிற அளவிற்கு இது ஒன்றும் முக்கியமான செய்தி இல்லை.. இந்த பிரச்சினை குறித்து எழுதுவதை தவிர்க்கலாம் என்றார்..
பெண்ணுக்கான சமூகநீதி பேசும் திராவிட மாடல் ஆட்சியில், ஆளைச்சொல்லு ரூலைச் சொல்கிறேன் பாணியிலான நடவடிக்கையால், நீதி கேட்டு வீதியில் நிற்கிறார் இரண்டு குழந்தைகளின் தாய்.
– செங்கழுநீர்