மலைக்கோட்டை மாவட்ட எழுத்தாளர்கள் அறிமுகம்.. தொடர் -5
நமது திருச்சியின் நவீன கவி மொழிக்கும், கவிதை மொழிதலுக்கும் சொந்தக்காரர் கவிஞர் சாய் வைஷ்ணவி. இவரின் முதல் கவிதைத் தொகுப்பு ‘வலசை போகும் விமானங்கள்’.
உயிர்த் தொழில்நுட்பவியல் பட்டப்படிப்பு முடித்துவிட்டு, பெருநகரங்களில் மருத்துவக் குறியீட்டெழுதித் (மெடிக்கல் கோடிங்) துறையில் பணியாற்றியவர். திருமணமாகி இரண்டு குழந்தைகளுடன் தற்போது திருச்சியில் வசித்து வருகிறார்.
ஆழ்ந்த கவி மொழி கொண்ட நூதனமான காட்சிப் படுத்தல்கள் மூலம் அனுபவங்கள் செறிந்த கவிதைகள் இவருடையது. வள வளவென சாரமின்றி சவமாய் வெளுத்துப் போன கவிதைகளுக்கு மத்தியில் கச்சிதமான, காத்திரம் குறையாத கவிதை மொழிதல் இவரின் தனித்துவச் சிறப்பு.
தொடரும் கவியாடல்களால் மேலும் மேலுமாய் உச்சம் தொட வாழ்த்துவோம்.