ஆக்கிரமிப்பவர்களின் கோரப்பிடியில் சிக்கித் தவிக்கும் வனத்துறை!
ஆக்கிரமிப்பவர்களின் கோரப்பிடியில் சிக்கித் தவிக்கும் வனத்துறை!
தேனி புதிய பேருந்து நிலையம் முதல் அன்னஞ்சி விளக்கு வரை உள்ள சாலையின் இருபுறமும் வனப்பகுதி உள்ளது. இந்த வனப்பகுதி முழுவதும் தினந் தோறும் பல்வேறு இடங்களில் தனிநபர்கள் ஆக்கிரமிப்பு செய்து வருகின்றன.
வனத்துறை பணியாளர்கள் அந்த பகுதிகளில் ரோந்து செய்வதில்லை அதனால் வனப்பகுதி முழுவதும் குப்பை கொட்டும் காடாக காணப்படுகிறது. பிளாஸ்டிக் கவர்கள், நேப்கின்கள், கட்டிட கழிவுகள், பனை நொங்கு கழிவுகள், சீட் கவர் கழிவுகள், மருத்துவ கழிவுகள் என பல்வேறு வகையான கழிவுகள் வனப்பகுதியை சீரழித்து வருகின்றது. குப்பைகள் தீயிடப்படுவதால் குப்பைகளோடு சேர்ந்து மரங்களும் எரிந்து சாம்பல் ஆகின்றது.
மேலும் செப்டிக் டேங் கழிவுகளும் வனப்பகுதியில் திறந்து விடப்படுகிறது. மண் மாசாகி பாழாய் போகிறது, சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவித்தாலும் அங்கே பணி செய்யும் வனத்துறை அலுவலர் உங்களுடைய வேலையை பாருங்கள் என்று கூறுகிறார்கள். குற்ற செயலில் ஈடுபடும் நபர்கள் மீது சிறு சிறு வழக்குகள் மட்டும் சொற்ப பணம் வாங்கி கொண்டு பதிகின்றனர். மண் மீது நேசம் கொண்ட இயற்கை ஆர்வலர்கள் இதனால் மனம் நொந்து போயுள்ளனர்.
உயர் வன அதிகாரியான மாவட்ட வன அலுவலர் இது பற்றி துளியும் கண்டுகொள்வதாக தெரியவில்லை. இதனால் தேனி புது பேருந்து நிலையம் முதல் அன்னஞ்சி வரை வனம் சீரழிந்து வருகிறது. எனவே ஆக்கிரமிப்பவர்களின் கோரப்பிடியில் சிக்கித் தவிக்கும் வனத்துறையை மீட்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
-ஜெ.ஜெ