திருமணம் ஆகாமல் குழந்தையை பெற்றெடுத்த சிறுமி மரணம் !

0

அங்குசம் இதழ் இணையதளத்தில் E-Book வாசிக்க... இந்த லிங்கை பயன்படுத்துங்கள் - அங்குசம் அச்சு இதழ்.. உங்கள் இல்லம் தேடி வர ஆண்டு சந்தா ரூபாய் 500 மட்டுமே - தொடர்பு எண் - 9488842025

வாழப்பாடியில் திருமணம் ஆகாமல் பெண் குழந்தையை பெற்றெடுத்த சிறுமி பிரசவத்திற்குப் பின் சிறுமி இறந்துவிட்டதால் போலீசார் விசாரணை பிறந்த பச்சிளம் பெண் குழந்தையை பிளாஸ்டிக் குப்பைத் தொட்டியில் இருந்து போலீசார் மீட்டு விசாரணை.

கருக்கலைப்பு செய்த போது பெண் இறந்தாரா? என மகளிர் போலீசார் விசாரணை சேலம் மாவட்டம் வாழப்பாடியில் 17 வயது சிறுமி,அழகான பெண் குழந்தையை பெற்றெடுத்தார்.

அடகு - ஏல நகையை மீட்டு மறு அடகு வைக்க - விற்க

பின்னர் அவர் உடல் நிலை மோசமாகி இறந்துவிட்டார்.மருத்துவமனையில் பிளாஸ்டிக் பக்கெட்டில் உயிருடன் இருந்த பெண் குழந்தையை வாழப்பாடி மகளிர் போலீசார் மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

நீங்கள் வேலை பெறுவது எளிது...

சிறுமி கருக்கலைப்பின் போது இறந்தாரா என்றும் தற்போது விசாரணை நடக்கிறது.சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகில் உள்ளது இந்திரா நகர் . இந்த பகுதியைச் சேர்ந்தவர் ஜெகதீசன். கூலி தொழிலாளி.
இவர் சில வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார் .

3

இவரது 17வயது (ஐஸ்வர்யா) மகள் அவரது தாயாருடன் இந்திரா நகரில் வசித்து வந்தார்.சிறுமி பத்தாம் வகுப்பு வரை படித்துவிட்டு மேற்படிப்பு படிக்காமல் வீட்டிலேயே இருந்து வந்தார்.இந்த நிலையில் சிறுமிக்கும் உறவினர் ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டதாக தெரிகிறது.

இருவரும் நெருங்கி பழகியதால் சிறுமி கர்ப்பமானார் .8 மாத கர்ப்பமாக இருந்த அவருக்கு திடீரென நேற்று மாலை வயிற்று வலி ஏற்பட்டது .இதனால் உறவினர்கள் அவரை அழைத்து சென்று வாழப்பாடியில் உள்ள செல்வாம்பா ராஜ்குமார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

4

இங்கு இரவு 7.30மணி அளவில் அழகான பெண் குழந்தையை சிறுமி பெற்றெடுத்தார்.பின்னர் சிறுமிக்கு திடீரென உடல்நிலை பாதித்தது. இதனால் மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் செல்வாம்பாள் உடனடியாக , சேலம் அரசு மருத்துவமனைக்கு சிறுமியை அழைத்து செல்ல தெரிவித்தார்.

Girl who gave birth to baby dies
Girl who gave birth to baby dies

உடனே அவர் ஆம்புலன்ஸ் மூலம் அழைத்து வந்து சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.அங்கு நேற்று 06.04.2023  இரவு 11 மணி அளவில் சிறுமியை பரிசோதித்து பார்த்த மருத்துவர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார் .

பின்னர் சிறுமியின் சடலம் உடற்கூறு ஆய்வு செய்ய பிரேத பரிசோதனை கூட்டத்தில் வைக்கப்பட்டது .இதன் பிறகு மருத்துவமனை மருத்துவர்கள் வாழப்பாடி காவல் நிலையத்திற்கு சிறுமி இறந்தது குறித்த தகவல் தெரிவித்தனர் .

இதன் பேரில் வாழப்பாடி டிஎஸ்பி ஹரி சங்கரி மற்றும் காவல் ஆய்வாளர்கள் உமா சங்கர், தனலட்சுமி மற்றும் போலீசார் சேலம் அரசு மருத்துவமனைக்கு வந்து விசாரித்தனர் ,

இதன்பின்னர் வாழப்பாடிக்கு அதிகாலை 4 மணி அளவில் வந்து தனியார் மருத்துவமனை முழுவதும் போலீசார் சோதனை செய்தனர்,அப்போது பிளாஸ்டிக் பக்கெட் ஒன்றில் பெண் குழந்தை ஒன்று இருந்தது .

இதை எடுத்த போலீசார் பெண் குழந்தைக்கு உயிர் இருப்பது தெரியவந்தது .உடனே அந்த பெண் குழந்தையை ஆம்புலன்ஸில் சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு பெண் குழந்தைக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து தற்போது வாழப்பாடி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இது தவிர சிறுமி கர்ப்பமானதற்கு காரணமானது யார் என்றும் விசாரணை நடக்கிறது. இளம் பெண்ணின் உறவினர் பாரதி என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

சிறுமி கர்ப்பமாகி மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் பலியான சம்பவம் சேலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

– சோழன் தேவ்

Furry genius pet hospital

Leave A Reply

Your email address will not be published.