ஏற்காட்டில் 14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர்

0

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

சேலம் மாவட்டம் ஏற்காட்டில் 14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது

மேலும் ஒருவருக்கு போலீசார் வலை சேலம் மாவட்டம் ஏற்காடு அடுத்த மேல் கொளகூர் அருகில் உள்ள கரடியூர் பகுதியை சேர்ந்தவர் 14 வயது சிறுமி .

இந்த வார அங்குசம் வார இதழில்…

இவர் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த சக்தி என்கின்ற வாலிபர் ஆசை வார்த்தை கூறி சிறுமியைக் கடத்திச் சென்று பாலியல் தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது.

இதனையடுத்து சக்தியின் நண்பரான சித்தையன் என்பவரிடம் சிறுமியின் தந்தை இந்த சம்பவம் குறித்து கேட்கும் போது இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.

திருச்சி உறையூரில் புதிய உதயம்...

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

சித்தையன் சிறுமியின் தந்தையை தாக்கி உள்ளார். இதனால் படுகாயம் அடைந்த சிறுமியின் தந்தை ஏற்காடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் .

இந்த நிலையில் சிறுமி நடந்த சம்பவம் குறித்து தனது தாயிடம் தெரிவித்துள்ளார் . இதனையடுத்து கொண்டலாம்பட்டி மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் சேலம் ஊரக டிஎஸ்பி தையல்நாயகி தலைமையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் சம்பவம் உண்மை என்று தெரியவே வாலிபர் சக்தியை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர் . அவருக்கு உடந்தையாக இருந்த சித்தையனை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

சேலம் மாவட்டம் ஏற்காட்டில் 14 வயது சிறுமியை கடத்தி பாலியல் தொந்தரவு செய்த விவகாரத்தில் வாலிபர் கைது கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது .

-சோழன் தேவ்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.