அங்குசம் சேனலில் இணைய

ராஜாவின் இசை திருக்குறள் போல …

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

ஒரு மனிதரின் ஒளிவட்டத்தை மட்டுமே பார்க்க விரும்புகிறவர்களுக்கு அவரின் காலடிகளை பார்க்க யாருமே விரும்புவதில்லை.

ராஜா திரையுலகில் நுழையும் போதே இசைஞானியாக வரவில்லை. பயிற்சி செய்து செய்து வேலையே பயிற்சியாகி இந்த நிலையை அடைந்திருக்கிறார். அவரே தன் சாதனையாக தமிழ்த்திரைப்பாடல்களை சொல்வதை விட சிம்ஃபனி இசைப்பதை தான் சொல்கிறார். துரதிர்ஷ்டவசமாக அதை யாருமே பெரிதாக எடுத்துக்கொள்ள வில்லை. ராஜாவின் பாடல்கள் இசைக்கப்பட்ட காலங்களில் காதுகளுக்கு மட்டுமே வேலை இருந்தது. கண்கள் வேறு வேலைகளை செய்து கொண்டிருக்கும். அந்தநேரத்தில் காதுகள் தூரத்தில் எங்கோ ஒலிக்கும் ‘செந்தூரப்பூவே’வை ‘கேட்டு’க்கொண்டிருக்கும். ஆனால் இன்று முழுவதும் நம் கண்கள் ‘பார்த்து’க்கொண்டிருக்கின்றன. காதுகள் எங்கோ ஒலிப்பதை கேட்பதில்லை. ஒலி உலகத்திலிருந்து ஒளி உலகத்துக்கு வந்து விட்டோம். அதிசயம் என்னவென்றால் ஒளி உலகத்திலும் ராஜாவின் பாடல்களை திருட்டுத்தனமாக பயன்படுத்துகிறார்கள். இதற்கு ராஜாவையே இசைக்க வைத்து பாடல்களை பயன்படுத்திக்கொள்ளலாம் என நினைப்பதில்லை.

Angusam Cinema - அங்குசம் சினிமா சேனல்

ராஜா
ராஜா

ராஜாவின் ஒரு திரைப்படம் திரையரங்கில் ஒலிக்கும் போது அடுத்துள்ள காட்டு யானைகள் ஒரு குறிப்பிட்ட பாடலுக்கு மட்டும் கூட்டமாக வந்து கேட்டுவிட்டு பாடல் முடிந்ததும் திரும்பவும் காட்டுக்கு போய்விடுவதாக நிகழ்வு இருக்கிறது. அண்மையில் நடிகை கஸ்தூரி ஒரு விழாவில் சொல்லி இருந்தார். ‘சின்னவர்’ பட படப்பிடிப்பு கேரளக்கடற்கரையில் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. ‘அந்தியில வானம்’ பாடல் நாகாராவில் ஒலிக்கும் போதெல்லாம் டால்பின்கள் ஓடி வந்து கரையில் துள்ளிக்குதிக்குமாம். படப்பிடிப்பில் இருந்த பலரும் இதற்கு சாட்சி. விலங்குகளுக்குக்கூட அன்று காதுகளும், அதற்கான பிரிய இசையும் இருந்தன. அது ராஜாவினுடையதாகவும் இருந்தன. ஒரு நிமிடத்துக்குப்பிறகு வேறொரு காணொளியை விரும்பும் Attitude நமக்கு வந்து விட்டது. இப்படி ஒரு மனஓட்டத்தில் மெல்லிய இழையாக ‘தென்பாண்டி சீமையிலே…தேரோடும் வீதியிலே…’ என மெல்லிய நீரோடையாக ஓடும் இசையை கேட்கவோ, பார்க்கவோ யாருக்கும் பொறுமை இருப்பதில்லை.

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

ராஜாவின் வெற்றிக்கு முக்கிய காரணியாக காலகட்டமும் இருந்திருக்கிறது. இன்று Gen-z கிட்டாக ராஜா வந்திருந்தால் ஜெயித்திருப்பார் என்பதெல்லாம் சந்தேகமே. இப்போது வைப் என்றெல்லாம் சொல்கிறார்கள். பெரிய ஸ்பீக்கர்களில் ஒலிக்கவிட்டு கூட்டம் கூட்டமாக ஆடும் கலாச்சாரம் இங்கு வந்து விட்டது. எமோஷன்களுக்கு இப்போது வேலையே இல்லை. மனதை உற்சாகப்படுத்துவது துள்ளலிசை மட்டுமே என நினைக்கிற காலமாகி விட்டது. ஹம்மிங் என்கிற ஒன்றும், கோரஸ் என்கிற ஒன்றும் ராஜாவின் காலத்தில் இருந்தது. கிழக்கு வாசல் படத்தில் காதலிக்கு வேறு ஒருவனோடு திருமணம். நாயகன் அங்கு பாட வேண்டும். அப்போது தன் மனதின் அடியிலிருந்து ஒரு ஹம்மிங்கை குரலின் உச்சத்துக்கு கொண்டு வருவான். பின் ‘பாடி பறந்தக்கிளி’ எனப்பாடுவான். அந்த ஆஆ என்று அவன் கொடுக்கும் ஹம்மிங் அவன் மனதை வெளிப்படுத்தும். கோரஸ்ஸில் ராஜாவை அடிக்க முடியாது.  ‘அழகியநதியினில் அதில் வரும் அலையினில்’ பாடலில் ‘ஜிமுக்கு ஜிமுக்கு சக்க ஜிமுக்குஜா’ என்கிற கோரஸ் பாடலை விட நம் மனதில் ஆழமாக பதிந்து விடுகிறது. திரையுலகில் இசையமைப்பாளர்களுக்கு ஒருபேட்டர்ன் உண்டு. இலங்கையில் டூயட் என்றால் பாய்லா மெட்டில் போட்டு விட்டால் போதும். Spagetti western ஸ்டைலில் குதிரையில் ஹீரோ வருகிறாரென்றால்  Cowboy படங்களின் பின்னணி இசையை சேர்த்து விட்டால் போதும். சிங்கப்பூர், மலேஷியப்பாடல்களென்றால் அதற்குரிய இசை இருக்கிறது. கோவில் திருவிழாப்பாடல் என்றால் டப்பாங்குத்து இப்படி முன்னோர் வகுத்த பெட்டர்ன் உண்டு. ராஜாவும் அதில் பயணித்தவரே. அதை உடைத்ததும் ராஜா தான்.

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

ராஜா
ராஜா

‘அக்கரைச்சீமை அழகினிலே’ பாடலைக்கேட்பவர் கண்முன்னே சிங்கப்பூர் வந்து விடும். அந்த பேட்டர்னை உடைத்ததும் ராஜாவே தான். ‘சொர்க்கமே என்றாலும் அது நம் ஊரு போல வருமா?’ இதில் நம் கண்களுக்கு எந்த நாடு எனத்தெரியாது. பாடல் ஊட்டியென்றால் நிச்சயம் ரயில் ஓசையை சேர்த்து விடுவார். நிச்சயம் மலைரயிலை வைத்து எடுப்பார்களென தெரிந்து விடும்.இந்த பேட்டர்ன் திரையிசையிலிருந்து ராஜா வெளிவந்து உலக அங்கீகாரம் பெற எடுத்த முயற்சி தான் சிம்ஃபனி. அதற்கான நேரமே இல்லாத போதும் சிறுக சிறுக முயன்று இன்று அதை சாத்தியமாக்கி இருக்கிறார்.

ராஜாவின் இசை திருக்குறள் போல. திருக்குறள் அந்தக்காலகட்டத்துக்கு எழுப்பட்டாலும் அதன் தத்துவங்கள் இன்றும் பொருத்திப்பார்க்க உகந்தது. அது போல இன்னும் 50 வருடங்கள் கழித்தும் ராஜாவின் பாடல் ஒலித்துக்கொண்டே இருக்கும்.  ஒரு சாதாரண நிலையிலிருந்து இந்த மேன்மையை அடைந்திருப்பது போற்ற வேண்டிய விஷயம். இனி அது நிகழும், வேறொருவர் நிகழ்த்துவார்  என்றெல்லாம் தோன்றவில்லை. அது தான் ராஜாவின் Dedication. அதற்கு வயதில்லை. மூப்பில்லை.

 

(இன்னும் நிறைய எழுதலாம்…)

 

 —     செல்வன் அன்பு

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

Comments are closed, but trackbacks and pingbacks are open.