தமிழக ஆசிரியர் கூட்டணியின் புதிய நிர்வாகிகள் தேர்வு !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

தமிழக ஆசிரியர் கூட்டணியின் புதிய நிர்வாகிகள் தேர்வு ! அரசுப்பள்ளி ஆசிரியர்களின் சம்பள உயர்வு உள்ளிட்ட உரிமைகளுக்காக போராடும் சங்கமாக வரம்பிட்டுக் கொள்ளாமல், பொதுவில் கல்வித்துறையில் நிலவும் நடைமுறைச் சிக்கல்கள் தொடங்கி, கொள்கை ரீதியிலான முரண்பாடுகளையும்கூட துணிச்சலோடு காத்திரமாக முன்வைக்கும் சங்கமாக திகழ்ந்துவருகிறது, தமிழக ஆசிரியர் கூட்டணி.

தமிழக ஆசிரியர் கூட்டணியின் 14 ஆவது மாநில தேர்தல்
தமிழக ஆசிரியர் கூட்டணியின் 14 ஆவது மாநில தேர்தல்

Frontline hospital Trichy

இவ்வமைப்பின் மூத்த தலைவரும் ஐபெட்டோ அகில இந்திய செயலாளருமான வா.அண்ணாமலையின் வழிகாட்டலில் இயங்கிவரும் இந்த சங்கம், எப்போதும் கல்வி உரிமைக்கான போராட்டத்தில் முதலில் ஒலிக்கும் குரலாகவும் இருந்து வருகிறது.

தமிழக ஆசிரியர் கூட்டணியின் 14 ஆவது மாநில தேர்தல் திருச்சி அருண் ஹோட்டல் சுமங்கலி மஹாலில் கடந்த ஜூன்-23 அன்று நடைபெற்றது. தேர்தல் ஆணையாளர்களாக மேனாள் மாநில பொதுச் செயலாளர் சேலம் கோ.முருகேசன் அவர்களும் மேனாள் துணைப் பொதுச் செயலாளர் விருதுநகர் அ.முனியாண்டி அவர்களும் தேர்தலை நடத்தினார்கள். சிறப்பு அழைப்பாளராக அண்ணன் ஐபெட்டோ அகில இந்தியச் செயலாளர் திரு வா.அண்ணாமலை அவர்கள் கலந்து கொண்டு புதிய பொறுப்பாளர்களுக்கு வாழ்த்துகள் தெரிவித்தார்.

அங்குசம் தற்போதைய இதழ்.. படிக்க..

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

1500 க்கும் மேற்பட்ட வாக்காளர்களும் பார்வையாளர்களும் கலந்து கொண்ட இந்நிகழ்வில், புதிய மாநில பொறுப்பாளர்கள் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்கள்.

புதிய நிர்வாகிகள்:
புதிய நிர்வாகிகள்:

தேர்வு செய்யப்பட்ட புதிய நிர்வாகிகள்:
1.மாநிலத் தலைவர் அ.எழிலரசன் , தஞ்சாவூர் மாவட்டம்.
2.பொதுச் செயலாளர் அ.வின்சன்ட் பால்ராஜ், திண்டுக்கல் மாவட்டம்.
3. மாநிலப் பொருளாளர் ஆ.ராஜசேகர், விழுப்புரம் மாவட்டம்.
4.மாநில மகளிரணிச் செயலாளர் கு.ரமாராணி, ஈரோடு மாவட்டம்.
5. மாநில துணைத் தலைவர் ஓ.கோ.செந்தில்குமார், கோவை மாவட்டம்.
6.மாநில துணைத் தலைவர் துரை க.சுந்தரமூர்த்தி, அரியலூர் மாவட்டம்.
7. மாநில துணைப் பொதுச் செயலாளர் கயத்தாறு செ.கணேசன், தூத்துக்குடி மாவட்டம்.
8. மாநில துணைச் செயலாளர் அ.முரளி, திருவாரூர் மாவட்டம்.
9.மாநில துணைச் செயலாளர் கு.ஜான், சேலம் மாவட்டம்.
10. மாநில துணைச் செயலாளர் ம.சாந்திசொரூபமேரி, திருச்சி மாவட்டம்.
11.மாநில அமைப்பு செயலாளர் த.ச.ரமேஷ், காஞ்சிபுரம் மாவட்டம்.
12.மாநில தலைமை நிலையச் செயலாளர் பெ.ப.முரளி, திருவள்ளூர் மாவட்டம்.
ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். அனைவரது பணி சிறக்க வாழ்த்தி பாராட்டுகிறோம்.

– அங்குசம் செய்திப்பிரிவு.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitche

Leave A Reply

Your email address will not be published.