திருவாசகம் பாடியபடி திருவாசகர் நடந்து வந்த பாதை ! ஆக்கிரமிப்பு சர்ச்சை !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

திருவாசகம் பாடியபடி திருவாசகர் நடந்து வந்த பாதை ! ஆக்கிரமிப்பு சர்ச்சை ! – மதுரை மாவட்டம் சிவகங்கை செல்லும் வழியில் கிழக்கு வட்டம் இராஜாக்கூர் ஊராட்சி முண்ட நாயக்கன் கிராமத்தில் ஆதி சிவன் திருத்தலம் அமைந்துள்ளது. அருகிலுள்ள திருவாதவூரில் இருந்து சிவனை வழிபடுவதற்காக பக்தர்கள் வந்து செல்கின்றனர். ஒரு காலத்தில் திருவாசகம் புகழ் பாடியபடி மணிவாசகர் நடந்து வந்த பாதையை தற்போது ஆக்கிரமித்துவிட்டனர் என்று குற்றஞ்சாட்டுகின்றனர், பக்தர்கள்.

பழனிசாமி
பழனிசாமி

உடனுக்குடன் அங்குசம் வாட்சப் சேனலில்.. சேர.....

நாம் களத்திற்கு சென்றோம். அங்கே வரலட்சுமி விரதம் நிகழ்ச்சியின் பூஜையில் இருந்த கிராமத்தார்களை சந்தித்தோம். ”ஒரு காலத்தில் மக்கள் வாழ்ந்த ஊர் இது. பின்னர் அவர்கள் இங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டனர். பல்வேறு பகுதிகளிலிருந்தும் அன்றாடம் இந்த திருத்தலத்திற்கு பக்தர்கள் பலர் வந்து செல்கிறார்கள்.

கேசவன், சிங்கத்துறை, பாலு அம்பலக்காரர்
கேசவன், சிங்கத்துறை, பாலு அம்பலக்காரர்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

பல்வேறு தினசரிகளில் எங்களுடைய இந்த திருத்தலத்தின் பழம்பெருமைகள் பற்றிய கட்டுரைகள் வெளியாகியிருக்கிறது. முக்கியத்துவம் வாய்ந்த இத்திருத்தலத்திற்கு பக்தர்கள் எளிதாக வந்து செல்ல அடிப்படை வசதிகள் செய்து தரும்படி மாவட்ட ஆட்சியரிடத்தில் முறையிட்டும் எந்த பயனுமில்லை. ” என்கிறார்கள் அங்கிருந்த கேசவன், சிங்கத்துறை, பாலு அம்பலக்காரர் ஆகியோர்.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

”இங்கு 1850 ஆம் ஆண்டு சிவகங்கை மன்னர்களின் பராமரிப்பில் இக்கோயில் இருந்துள்ளது. திருவாசகர் நடந்து வந்த பாதையை இன்று தனியார் நிறுவனங்கள் சில ஆக்கிரமித்து குறுக்கே வேலிகள் அமைத்து தடுத்திருக்கின்றனர்.” என்கிறார், 78 வயதான பழனிச்சாமி.

கிராம நிர்வாக அதிகாரி
கிராம நிர்வாக அதிகாரி

ஊர் பொதுமக்கள் முன்வைக்கும் ஆக்கிரமிப்பு புகார் குறித்து கிராம நிர்வாக அதிகாரி நிவேதாவிடம் பேசினோம். “நான் இந்த ஊரின் கிராம நிர்வாக அதிகாரியாக சேர்ந்து இரண்டு வருடங்கள் தான் ஆகிறது. என்ன பிரச்சினை என்று தெரியவில்லை. அங்கேயே இருங்கள்” என்றவர், கொஞ்ச நேரத்தில் உதவியாளர் ராஜேந்திரனோடு வந்து சேர்ந்தார்.

கையோடு கொண்டு வந்திருந்த கிராம வரைபடத்தை காட்டி பேசியவர், “எங்களது கிராம பதிவேடுகளில் திருவாசகர் நடந்து வந்த பாதை என்று ஒன்று இருந்ததாக எந்த பதிவும் இல்லை. இருந்தாலும், இவர்கள் தொடர்ந்து அனைத்து துறைகளுக்கும் புகார் அனுப்பி வருகிறார்கள். வருவாய்த்துறை அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து என்ன ஏதென்று விசாரிக்கிறேன்.” என்கிறார்.

ஷாகுல், படங்கள்: ஆனந்தன்.

அங்குசம் இதழ் - இலவசமாக படிக்க -

Leave A Reply

Your email address will not be published.