மாணவிகள் கழிவறையில் கொத்து கொத்தாக பாம்புகள் – கடமையை செய்யாதவர்களை பெண் கல்வி” சுட்டெரிக்கட்டும்” ஜி வி பிரகாஷ் கண்டனம் !
கல்லூரி கழிவறையில் பாம்புகள் , அலறியடித்து ஓடிய மாணவிகள் – பெண் கல்வி” சுட்டெரிக்கட்டும்” ஜி வி பிரகாஷ் கண்டனம் ! மாணவியர் கழிப்பறையை சுற்றி முட்புதர்கள் கழிவறையில் 100- க்கும் மேற்பட்ட பாம்பு குட்டிகள் , சமூகவலைத்தளத்தில் வீடியோ வைரல் தீயணைப்பு வீரர்கள் மற்றும் பாம்புபுடி நபர்கள் கழிவறையில் இருந்த சில பாம்புகளைப் பிடித்துள்ளனர் .
திருவண்ணாமலை மாவட்டம் ஆற்காடு சாலையில், செய்யாறு அறிஞர் அண்ணா அரசுக் கலைக் கல்லூரி இயங்கி வருகிறது இந்த கல்லூரியில் , 8000 மாணவர்களுக்கு மேற்பட்டோர் படித்து வருகிறாரகள் இவர்களில் 4300 மாணவிகளுக்காக கட்டிக்கொடுக்கப்பட்ட 3 கழிவறைகளும் பராமரிக்காமல் விடப்பட்டிருக்கிறது.
கட்டியது முதல் இதுநாள் வரை கழிவறைகளில் தூய்மைப் பணியே மேற்கொள்ளப்படவில்லை என கூறப்படுகிறது கழிவறைகளைச் சுற்றிலும் அடர்ந்த செடி, கொடிகள் இருந்தாலும் வேறு வழியின்றி, இயற்கை உபாதைகளைக் கழிக்க வழியில்லாமல், அச்சப்பட்டுக்கொண்டே புதரில் மறைந்து கிடக்கும் கழிவறைக்கு சென்று வந்துள்ளனர்.
மாணவிகள் இந்த நிலையில் கடந்த 4-ந்ததேதி கழிவறைக்குச் சென்ற சில மாணவிகள் கழிவறையில் கொத்துக்கொத்தாக பாம்புக்குட்டிகள் நெளிந்துகொண்டிருந்ததை கண்டு அலறியடித்து ஓடி கல்லூரி நிர்வாகத்திடம் தெரிவித்துள்ளனர்.
உடனடியாக புதர்களை விளக்கி கொண்டு போய் கழிவறைக்கு பூட்டு போட்டு வெளிப்புறத்தில் இங்கு நிறையப் பாம்புகள் உள்ளன. உள்ளே செல்ல வேண்டாம்’ என எழுதி ஒட்டி உடனடியாக தீர்வு கண்டுள்ளது கல்லூரி நிர்வாகம்.
இந்த காட்சியை தங்களது செல்போனில் படம் பிடித்த மாணவர்கள் சமூக ஊடகங்களில் வெளியிட்டு வைரலாக்கினர் இதனையடுத்து விழித்துக் கொண்ட கல்லூரி நிர்வாகம் செய்யாறு தீயணைப்பு வீரர்கள் மற்றும், பாம்பு பிடிக்கும் நபர்களை வரவழைத்து சில பாம்புகளை மட்டுமே பிடித்துள்ளனர் , பிடிப்பட்ட பாம்புகள் கடுமையான விஷத்தன்மைகொண்டது என தெரியவந்துள்ளது.
இதுகுறித்து கல்லூரி முதல்வர் கலைவாணி கூறுகையில் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு ஏற்கனவே ஒரு பாம்பு பிடிக்கப்பட்டுவிட்டதாகவும், கழிவறையை தூய்மையாக பராமரிக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் உறுதியாக கூறினார்.
பிடிக்கப்பட்ட பாம்பு குட்டிகளின் இனப்பெருக்கத்துக்குக் காரணமான பெரிய பாம்புகளையும் கொத்து கொத்தாக காணப்பட்ட மீதி பாம்புகளையும் பிடிக்க வேண்டும்.
புதர்களில் மறைந்து கிடக்கும் கழிவறைகளை நாள்தோறும் தூய்மை செய்ய வேண்டும், சுற்றியுள்ள புதர்களை அகற்ற வேண்டும் , மேலும் பல கழிவறைகளை கட்ட வேண்டும் என மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்திருக்கின்றனர்.
இசை அமைப்பாளர் ஜி வி பிரகாஷ் கண்டனம் இந்த சம்பவம் தொடர்பாக, சமூக வலைத்தளங்களில் பேசுபொருளானதைத் தொடர்ந்து, பிரபல இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி.பிரகாஷ், அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில், தங்கள் கடமையைச் செய்யாதவர்களை “பெண் கல்வி” சுட்டெரிக்கட்டும்” என பதிவிட்டு தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.
-மணிகண்டன்