தமிழ்நாட்டில் அதிமுக , திமுக ஆட்சியில் கள்ளச்சாராய மரணம் தொடர்கிறது – வேல்முருகன் தடாலடி
தமிழ்நாட்டில் அதிமுக , திமுக ஆட்சியில் கள்ளச்சாராய மரணம் தொடர்கிறது – வேல்முருகன் தடாலடி – தமிழக மக்களின் வாழ்வாதாரப் போராட்டங்களில் முன்நிற்பவர். ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம், நெய்வேலி நிலக்கரி நிறுவனத்துக்கு இடம் கொடுத்தவர்களுக்கான போராட்டம் என எப்போதும் களத்தில் பம்பரம் போல் சூழல்பவர் சுற்றுப்பயணம், போராட்டம், பொதுக்கூட்டங்கள் கட்சி கூட்டம் என எப்போதும் பரபரப்பாக இயங்கும் வேல்முருகன் இன்று நடைப்பெற்ற தவாக கட்சியின் மாநில செயற்குழு கூட்டத்தில் திமுக கூட்டணியில் அங்கம் வகித்த போதிலும் ஆளும் கட்சிக்கு எதிராக பல தீர்மானங்கள் தவாக மாநில செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.
தமிழக வாழ்வுரிமை கட்சியின் மாநில செயற்குழுக்கூட்டம் திருப்பத்தூர் மாவட்டம், ஏலகிரி மலையில் ஜூன் 23 அன்று நடைப்பெற்றது , பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் , தமிழகத்தில் அதிமுக, திமுக ஆட்சிகளில் கள்ளச்சாராய மரணம் தொடர்கிறது. இதை தடுக்க காவல் துறை, வருவாய் துறையினர் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கள்ளச்சாராய மரணமடைந்தால் அதற்கு அந்தந்த பகுதியில் உள்ள உள்ளளாட்சி பிரநிதிகள் தொடங்கி, சட்டப்பேரவை உறுப்பினர், மக்களவை உறுப்பினர், மாவட்ட அமைச்சர் ,காவல் துறை மற்றும் வருவாய் துறையினரும் என அனைவரும் பொறுப்பேற்க வேண்டும். அதற்காக புதிய சட்ட திருத்தத்தை தமிழ்நாடு அரசு கொண்டு வர வேண்டும்.
அப்போது தான் கள்ளச்சாராயம் இல்லாத மாநிலமாக தமிழகம் மாறும். தமிழகத்தில் சமூக நீதியை நிலை நாட்ட வேண்டும். அதற்கு உடனடியாக ஜாதி வாரி கணக்கெடுப்பை அரசு தொடங்க வேண்டும். , பீஹார், கேரளா, கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் ஜாதிவாரி கணக்கெடுப்பு பணி நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆனால், தமிழ்நாட்டில் அதற்கான அறிவிப்பு இதுவரை இல்லை.
எனவே சட்டப்பேரவையில் தற்போது மானிய கோரிக்கை நடந்து வருகிறது. இதில், காவல் துறையினர் மானியக்கோரியின் போது ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிக்க வேண்டும் என எதிர்பார்க்கிறோம்.
மேலும் , தமிழக அரசு போக்குவரத்து கழகத்தில் ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணிக்கான ஆட்களை தேர்வு செய்யும்போது தகுதியுள்ளவர்களுக்கு நிரந்தரப்பணி வழங்க வேண்டும்.
வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளது படி முன்னுரிமை அடிப்படையில் வேலை வழங்கி சமூக நீதியை இந்த அரசு நிலை நாட்ட வேண்டும்.
பரந்தூர் மக்கள் வேறு மாநிலத்துக்கு குடியேறுவதாக அறிவித்துள்ளனர். எனவே, அங்கு விமானம் நிலையம் அமைப்பதற்கான முயற்சிகளை மத்திய அரசு கைவிட வேண்டும்.
தமிழகத்தில் மணல் திருட்டு அதிகரித்து வருகிறது. இங்கிருந்து ஆந்திரா, கர்நாடகா, கேரளா போன்ற மாநிலங்களுக்கு மணல் கடத்தப்படுகிறது. இதை அரசு இரும்பு கரம் கொண்டு தடுக்க வேண்டும்’’ என ஆவேசமாகப் பேசினார்.
-மணிகண்டன்