இலங்கை கடற்படையால் 3-விசைப்படகு களுடன் 22-தமிழக மீனவர்கள் கைது !

0

இலங்கை கடற்படையால் 3-விசைப்படகு களுடன் 22-தமிழக மீனவர்கள் கைது ! பாரம்பரிய மீன்பிடி பகுதிகளில் மீன்பிடித்த தமிழக மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படைக்கு கண்டனம்!விசைப்படகு களுடன் சிறை பிடிக்கப்பட்ட 22-தமிழக மீனவர்களை மீட்க மத்திய-மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க நெய்தல் மக்கள் கட்சி கோரிக்கை!

இராமநாதபுரம் மாவட்டம், இராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர்கள் கடலில் நெடுந்தீவு அருகே,இன்று அதிகாலை பாரம்பரியமாக மீன்பிடித்தொழில் செய்யும் இடங்களில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, இலங்கை கடற்படையினர்,
3-விசைப்படகு களுடன் 22-தமிழக மீனவர்களை சிறைபிடித்து, காங்கேசன்துறை கடற்படை தளத்திற்கு கொண்டு சென்றனர்.

https://businesstrichy.com/the-royal-mahal/

Tamil Nadu fishermen arrested
Tamil Nadu fishermen arrested

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

தமிழக மீனவர்கள் பாரம்பரியமாக மீன்பிடித் தொழில் செய்யும் இடங்களில் மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது,இலங்கை கடற்படையினர், விசைப்படகுகளுடன் தமிழக மீனவர்களை தொடர்ந்து கைது செய்வதை நெய்தல் மக்கள் கட்சி சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம்.

பல் கட்டும் சிகிச்சையில் நவீனம் காட்டும் KM DENTAL CLINIC

மத்திய-மாநில அரசுகள்,தமிழக மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளையும், வாழ்வாதாரத்தையும் பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.3-விசைப் படகுகளுடன் சிறைபிடிக்கப்பட்ட 22-இராமேஸ்வரம் மீனவர்களை உடனடியாக விடுவிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழக மீனவர்களை விடுவிக்க கோரி, இராமேஸ்வரம் மீனவர்கள் முன்னெடுக்கும் வேலை நிறுத்த போராட்டத்திற்கு நெய்தல் மக்கள் கட்சி முழுஒத்துழைப்பும் ஆதரவும் வழங்கும் என்பதை கொள்கிறேன்.

இவண்,
புரட்சிக்கயல் கு.பாரதி,தலைவர், நெய்தல் மக்கள் கட்சி,

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.