மக்கள் நீதி மய்யம் சுவர் விளம்பரங்களை அழித்த அதிமுகவினர் !
மக்கள் நீதி மய்யம் சுவர் விளம்பரங்களை அழித்த அதிமுகவினர் !
சுவர் விளம்பரம் என்பது அரசியல்கட்சியின் மிகமுக்கியமான பலமாக கருதப்பட்டு வருகிறது. ஆன்லைன், இணைதளம், என விளம்பரங்களின் முகங்கள் மாறினாலும் சுவர் விளம்பரங்களினால் அவர் சுய மரியாதையை பெரிய பலமாக கருதுகின்றனர்.
திருச்சியில் மக்கள் நீதி மய்யம் கட்சியினர் எழுதிய சுவர் விளம்பரங்களை ஆளும் கட்சியினர் அழித்தது இரு கட்சியினர் இடையே மோதலை உருவாக்கி வருகிறது..
இது குறித்து திருச்சி மக்கள் நீதி மய்யம் கட்சியின் வழக்கறிஞர் கிஷோர் குமார் நம்மிடம் பேசுகையில்
முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதா பிறந்தநாள் 2021 பிப்ரவரி மாதம் 24ந் தேதி கொண்டாடப்படயிருக்கிறது. இதற்காக திருச்சி மாவட்டத்தில் உள்ள பிரதான சுவர்கள், மேம்பாலங்கள் முழுவதும் கடந்த 2020-ஆகஸ்ட் மாதமே அதிமுகவினர் சுவர் விளம்பரங்கள் எழுதினர். இதனை தொடர்ந்து மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசனின் பிறந்த நாளான நவம்பரம் 7ந் தேதியை முன்னிட்டு ம.நீ.ம சார்பில் சுவர் விளம்பரம் திருச்சியில் எழுதப்பட்டது. ம.நீ.ம சுவர் விளம்பரங்கள் உள்ளூர் ஆளும் கட்சி புறநகர் மாவட்ட பிரமுகருக்கு கலக்கத்தை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து மேற்படி ம.நீ.ம சுவர் விளம்பரங்களை அகற்ற ஆளும் கட்சி பிரமுகர் பெரும் முயற்சி எடுத்தனர்.
இந்நிலையில் மேற்படி மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் கமல்ஹாசன் பிறந்தநாளை தொடர்ந்து எழுதிய சுவர் விளம்பரங்களில் மேல் புறத்தில் 2021 பிப்ரவரி மாதம் 21ந் தேதி கட்சியின் நான்காமாண்டு விழாவிற்காக சுவர் விளம்பரங்கள் அக்கட்சியினரால் எழுதப்பட்டு வருகின்றனர். இதில் மேலும் உஷ்ணமான அதிமுகவினர் நேற்று (10.11.2020)ந் தேதி திருச்சி, ஜி கார்னரில் மக்கள் நீதி மய்யம் சார்பில் எழுதியுள்ள விளம்பரத்தை அழித்து அராஜகத்தில் ஈடுபட்டுள்ளனர். இன்று (11.11.2020) ந் தேதி அரியமங்கலம் பகுதியில் ம.நீ.ம எழுதிய சுவர் விளம்பரத்தையும் அழிக்க முயற்சித்ததை கேள்விபட்டு நிகழ்விடத்தில் குவிந்த ம.நீ.ம தொண்டர்கள் இதனை தடுத்து நிறுத்தினர்.
மேலும் தொடர்ந்து இது போல் சம்பவம் திருச்சியில் ஏற்பட வாய்ப்புள்ளதால் அதிமுகவினர் மற்றும் ம.நீ.ம தொண்டர்களிடையே பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சியினர் காவல்நிலையத்தில் புகார் செய்திருக்கிறார்கள்.