குறி வச்சா இரை விழனும் ! – கதவில் அருவாள் ! துப்பாக்கி – கொத்து கொத்தாக சிக்கும் ரவுடிகள் ! ”ஆபரேஷன் அகழி”

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

குறி வச்சா இரை விழனும் … ஆனா கொத்து கொத்தாக சிக்கும் ரவுடிகள் ! ”ஆபரேஷன் அகழி” ”குறி வச்சா இரை விழனும்” வேட்டையன் திரைப்படத்தில் இடம்பெற்ற வசனக் காட்சியைப் போலவே, ”ஆபரேஷன் அகழி” என்ற பெயரில் திருச்சி மாவட்ட எஸ்.பி.வருண்குமார், திருச்சி மாநகர கமிஷனர் காமினி, புதுக்கோட்டை மாவட்ட எஸ்.பி.வந்திதாபாண்டே ஆகியோர் ஒருங்கிணைந்து நடத்தி வரும் அதிரடி வேட்டையில் கொத்துக்கொத்தாக ரவுடிகள் சிக்கி வருகிறார்கள்.

சோதனையில் போலீசார்
சோதனையில் போலீசார்

அஸ்வீன் சுவீட்ஸ் ஆர்டர் செய்ய..

”ஆபரேஷன் அகழி” – ஆபரேஷனை கொட்டப்பட்டு செந்திலை அதிரடியாக கைது செய்து காலில் மாவுக்கட்டு போட்டு தொடங்கி வைத்திருந்தார் எஸ்.பி. வருண்குமார். சாத்தனூர் சுற்றுவட்டாரத்தில் அந்த சகோதரர்கள் பெயரை சத்தமாக உச்சரிப்பதற்கே சுற்றும் முற்றும் பார்த்தாக வேண்டும் என்ற அச்சத்தின்பிடியில் இருத்தப்பட்டிருந்த நிலையில்தான் சாத்தனூர் அண்ணாமலை மீது பாய்ந்தது வழக்கு. அவரது வீட்டில் ரெய்டும் நடத்தப்பட்டது. இப்போது வரையில், அண்ணாமலை தலைமறைவாகவே இருந்து வருகிறார்.

இதனையடுத்து, கூலிக்கு தலை, கால்களை தனியே எடுத்து தரும் தொழிலை மேற்கொண்டு வரும் வழக்கமான ரவுடிகளைப் போல அல்லாமல், ஏரியாவில் நானும் ரவுடிதான்னு கெத்துக் காட்டிக் கொண்டே, பொதுமக்களை ரியல்எஸ்டேட் தொழிலதிபர்களை மிரட்டி நிலஅபகரிப்பு, கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபடும் தனிவகை ரவுடிகளின் பட்டியலை தயார் செய்திருந்தார், திருச்சி மாவட்ட எஸ்.பி. வருண்குமார்.

அங்குசம் சேனல் வீடியோ பார்க்க...

திருச்சி ரவுடிகள்
திருச்சி ரவுடிகள்

பட்டியலோடு, சம்பந்தபட்ட ரவுடிகளின் வீடுகளுக்கு போலீசு படையை அனுப்பி கொத்துக் கொத்தாக பாண்டு பத்திரங்களையும், புரோ நோட்டுகளையும் அள்ளி வந்தனர் போலீசார். ரவுடிகளிடமிருந்து வீச்சரிவாள்களும் கையெறிக்குண்டுகளும் கள்ளத்துப்பாக்கிகளும் கைப்பற்றப்பட்டதாக வழக்கமாக செய்திக்குறிப்பை அனுப்பி வைக்கும் போலீசார், ”வரலாற்றில் முதன் முறையாக” கட்டப்பஞ்சாயத்து செய்து பிடுங்கி வைத்திருந்த சொத்து ஆவணங்களை கைப்பற்றியதாக அறிவித்தார்கள்.

போலீசாரின் முதல் பட்டியலில் இடம்பெற்றிருந்த 1. பிரபு என்ற பப்லு, 2) ஜெயக்குமார் என்ற கொட்டப்பட்டு ஜெய், 3) மைக்கேல் சுரேஷ் என்ற பட்டரை சுரேஷ், 4) டேவிட் சகாயராஜ், 5) பாலு என்ற பாலமுத்து, 6) பிரதாப் என்ற சிங்கம் பிரதாப், 7) ராஜகுமார், 8) கருப்பையா, 9) பாதுஷா என்ற பல்பு பாட்ஷா, 10) கரிகாலன், 11) கோபாலகிருஷ்ணன் என்ற தாடி கோபால், 12) சந்திரமௌலி, 13) குருமூர்த்தி மற்றும் 14) டி.டி.கிருஷ்ணன் ஆகிய 14 ரவுடிகளின் வீடுகளில் அதிரடி வேட்டை நடத்தப்பட்டது.

இதில் கவனிக்கத்தக்க விசயம், குறி சம்பந்தபட்ட ரவுடிகளுக்கு அல்ல. அவர்கள் வசம் இருந்த முறைகேடான முறையில் பொதுமக்களிடமிருந்து பிடுங்கி வைத்திருந்த ஆவணங்கள்தான் போலீசாரின் இலக்காகவே அமைந்திருந்தது.

வீடுகளில் சோதனை...
வீடுகளில் சோதனை…

ரவுடிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்களிலிருந்து, சம்பந்தபட்டவர்களை அழைத்து, சொத்து பத்திரம் எப்படி ரவுடியின் வசம் போனது? என்பது குறித்த ஜாதகத்தை சரி பார்ப்பதெற்கென்றே ஒரு தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை தொடர்ந்து வருவதாக ஒரு தகவல்.

இந்நிலையில்தான், யாரும் சற்றும் எதிர்பாராத வகையில் அக்-07 அன்று அதிரடியாக 16 ரவுடிகளின் வீடுகளில் சோதனையை நடத்தி முடித்திருக்கிறார்கள். இந்த சோதனையில் 290 சொத்து ஆவணங்களும், 45 வங்கிக்கணக்கு புத்தகங்களும், 60 புரோ நோட்டுகளும், 22 நிரப்பப்படாத  காசோலைகளும், 5 செல்போன்களும், 13 பிற ஆவணங்கள் உள்ளிட்டவற்றை கைப்பற்றியிருக்கிறார்கள்.

திருச்சி ரவுடிகள்
திருச்சி ரவுடிகள்

1.பால்ராஜ், 2. விமல் (எ) செல்வகுமார் 3.ஸ்டீபன்ராஜ், 4.ராமு 5.நாகேந்திரன் (எ) பாம்புக்குட்டி நாகேந்திரன் 6.நவீன்குமார் 7.ராஜா 8.பெரியசாமி (எ) கருவாடு பெரியசாமி 9.ரமேஷ் 10.சன்னாசி (எ) செந்தில் 11.ஆனந்த் 12.காத்தான் (எ) காத்தப்பிள்ளை 13.கங்கா (எ) திலீப் குமார் 14.விசு (எ) விசுவநாதன் 15.முருகானந்தம் 16.மணிமாறன் – ஆகிய ரவுடிகள்தான் ஆபரேஷன் அகழியின் இரண்டாவது வேட்டையில் சிக்கியிருக்கிறார்கள்.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

ஆபரேஷன் அகழியில் இலக்கு வைக்கப்பட்டு தட்டித்தூக்கப்படும் ரவுடிகளின் பட்டியலே கன கச்சிதமாக தயார் செய்யப்பட்டிருப்பதாக பிரமித்து போய் கிடக்கிறார்கள். ஒருகாலத்தில் ரவுடியாக வலம் வந்து இப்போது திருந்தி வாழும் அப்பாவிகளோ, தவறு செய்யாதவர்களோ இந்தப்பட்டியலில் இடம்பெறவில்லை என்பதுதான் ஹைலைட்.

காத்தான் (எ) காத்தப்பிள்ளை
காத்தான் (எ) காத்தப்பிள்ளை

சோசியல் மீடியாவில் ரவுசு செய்து கொண்டே, ஃபீல்டிலும் கலக்கி வந்த ரவுடிகள் போலீசாரின் கண்காணிப்பு வளையத்திற்குள் வந்திருக்கிறார்கள். அடுத்து, ஆபரேஷன் அகழி என்ற பெயரில் எஸ்.பி.வருண்குமார் வேட்டையை தொடங்கியதிலிருந்தே, நிலஅபகரிப்பு, கட்டப்பஞ்சாயத்து தொடர்பான புகார்களும் குவியத் தொடங்கியிருப்பதாகவும் போலீசாரின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கிறார்கள்.

குறிப்பாக இந்த இரண்டாவது பட்டியலில், இலால்குடி வட்டாரத்தில் அலப்பறை செய்து வந்த ரவுடிகள் அத்தனை பேரையும் கொத்தாக தூக்கியிருக்கிறார்கள் என்கிறார்கள்.  அந்த ஏரியாவில், பலரிடமும் கொடுக்கல் வாங்கல் பிசினஸில் ஈடுபட்டு வந்த ”பைனான்சியர்” ஒருவரும் இப்போது போலீசாரின் சோதனைக்கு ஆட்பட்டிருக்கிறார்.

கடந்த 8 மாதங்களுக்கு முன்பாக பண விவகாரம் தொடர்பான வழக்கு ஒன்றில் சிக்கி சிறைக்கு சென்று திரும்பியிருந்த நிலையில் தற்போது போலீசாரின் சோதனைக்குள்ளாகியிருக்கிறார், அந்த பைனான்சியர் – ரவுடி. சறுக்குப்பாறை என்ற அடைமொழி கொண்ட ரவுடி தொடங்கி, தமிழரின் வீர விளையாட்டின் நாயகனாக ஏரியாவில் கெத்து காட்டி வந்த ரவுடி ஒருவரையும் டார்கெட் செய்து தூக்கியதை பிரமிப்பாகவே பார்க்கிறார்கள் போலீசு வட்டாரத்தில். போலீசில் நல்ல பதவியில் வகித்து வரும் ஒருவரின் உடன்பிறந்த சகோதரரான அந்த ரவுடியின் வீட்டிலிருந்து கைத்துப்பாக்கி ஒன்று கைப்பற்றப்பட்டிருந்த நிலையில், பையன் ரைபிள் பயிற்சிக்கு பயன்படுத்தும் துப்பாக்கி என்று வலிய சென்று விளக்கம் கொடுத்து கொண்டிருக்கிறார்கள் என்கிறார்கள்.

கைப்பற்றப்பட்ட பத்திரங்கள்
கைப்பற்றப்பட்ட பத்திரங்கள்

ஆபரேஷன் அகழி என்று அறிவித்தவுடனேயே அலெர்ட்டான ரவுடிகள் பலரும் தற்போது தலைமறைவாகிவிட்டதாக சொல்கிறார்கள். கூடவே, சொத்து பத்திரங்களையும், ப்ரோ நோட்டுகளையும்கூட கைப்பற்றிவிடுகிறார்கள் என்ற நிலையில் அவற்றையெல்லாம் தங்களது விசுவாசிகளின் வீட்டில் பதுக்கிவிட்டார்கள் என்கிறார்கள்.

இலால்குடி ரவுடி ஒருவரின் விவகாரத்திலும் அப்படித்தான் சொல்கிறார்கள். போலீசார் வருவதை முன்கூட்டியே அறிந்து, ஆவணங்களையெல்லாம் பாதுகாப்பாக பதுக்கிவிட்டார் என்கிறார்கள். இதில் கூடுதல் சுவாரஸ்யமே, அறுவாளையும் கள்ளத்துப்பாக்கிகளையும் பதுக்குவதற்கு காட்டும் ஆர்வத்தைவிட, நாம்தமிழர் கட்சியுடன் தொடர்பு இருப்பதாக எந்த ஒரு அடையாளத்தையும் வீட்டில் வைத்திருக்கக்கூடாது என்றே ரவுடிகள் பலரும் அஞ்சுவதாக சொல்கிறார்கள்.

கதவில் அருவாள் ! துப்பாக்கி
கதவில் அருவாள் ! துப்பாக்கி

”குறி வச்சா இரை விழனும்” என்ற டயலாக்கை போல”ஆபரேஷன் அகழி” குறி மட்டும் வைக்கவில்லை, குற்றவாளிகளின் ஒட்டுமொத்த ஜாதகத்தையே அலசி ஆராய்ந்து ”பொறி” வைத்துக் கொண்டிருக்கிறார்கள் கொத்துக் கொத்தாக இரைகள் வந்து விழுந்து கொண்டேயிருக்கின்றன. வேட்டை தொடரும் என்று அறிவித்திருக்கிறார், ஆபரேஷன் அகழியை தலைமையேற்று நடத்திவரும் எஸ்.பி.வருண்குமார்.

லாஸ்ட் புல்லட் :

இலால்குடி வட்டாரத்தை சேர்ந்த கட்டப்பஞ்சாயத்து, ஜாதி அரசியல் பண்ணும் அந்த பெரும்புள்ளி பெரிய அளவுக்கு சேதாரம் இல்லாமல் தப்புவதற்கு ரொம்பவே மெனக்கெட்டிருக்கிறார் என்கிறார்கள். அவருக்கு நெருக்கமான நண்பர் ஒருவர், திருச்சியில் பாரம்பரியமான அடையாளத்தை கொண்ட அந்த தொழிலதிபர் அதற்கான பொறுப்பை ஏற்றுக்கொண்டாராம். சொந்த சாதி பாசத்தில், ”ஐ.ஜி. நம்ம ஆளுதான், எஸ்.பி. நம்ம ஆளுதான்”னு காய் நகர்த்தியிருக்கிறார் அந்த தொழிலதிபர். எந்தப் பருப்பும் எஸ்.பி. வருண்குமாரிடம் வேகாது என்ற நிலையில், ”நடந்த விசயத்தை” வெளியில் சொல்ல முடியாத சோகத்தோடு இருக்கிறாராம் அந்த தொழிலதிபர்.

– அங்குசம் புலனாய்வுக்குழு.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.