உயிலே சிறந்தது
ஒரு சொத்தை, அப்பா மகனுக்கு உயிலாக எழுதி வைப்பதுண்டு. அந்த உயில் அப்பாவின் மரணத்திற்குப் பின் புழக்கத்திற்கு வரும். ஒரு வேளை அப்பா சொத்தை அதன் பின் வேறு ஒருவருக்கு எழுதி வைக்க நினைத்தாலும், மாற்றிக் கொள்ளலாம். அல்லது துணை உயிலாக சேர்க்கலாம்.
ஆனால் சிலர் தன் சொத்தை செட்டில்மெண்ட் ஆக பிள்ளைகள் பேருக்கு எழுதி வைப்பதுண்டு. இப்படிச் செய்வதால், சொத்து உடனேயே பிள்ளைக்குப் போய் விடும். அதை விட, சொத்தை வேறு ஒருவருக்கு மாற்றி எழுத விரும்பினால், சொத்தை அளித்தவர், அதை கேன்சல் செய்து மாற்றி எழுத முடியாது. சொத்தை வாங்கிய பிள்ளைதான் அந்த செட்டில்மெண்ட்டை கேன்சல் செய்ய முடியும்.