வாரிசு அரசியல் அரங்கேறியது இனி மதிமுக…?

- ஆதவன்

0

கடந்த மார்ச் 23ஆம் தேதி சென்னையில் மதிமுக பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு அவைத்தலைவர் திருப்பூர் துரைசாமி வராத காரணத்தினால் பொதுச் செயலாளர் வைகோ தலைமையில் பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது.

கட்சியின் மாவட்ட செயலாளர்கள் செவந்தியப்பன், செங்குட்டுவன், சண்முகசுந்தரம், உயர்நிலைக்குழு உறுப்பினர் அழகுசுந்தரம், வழக்கறிஞர் அணி செயலாளர் பாரதிமணி, மயிலாடுதுறை முன்னாள் மாவட்டச் செயலாளர் மோகன் போன்ற முக்கிய நிர்வாகிகள் மற்றும் 10க்கும் மேற்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் கூட்டத் தைப் புறக்கணித்துள்ள னர்.  பொதுக்குழுக் கூட்டம் தொடங்கிய அரைமணி நேரம் கழித்தே அரங்கிற்கு மதிமுக பொருளாளர் கணேசமூர்த்தி வந்தார்.

2 dhanalakshmi joseph

வந்தவுடன் முதல் வரிசையில் அமர்ந்து கொண்டார். வைகோ சைகை காட்ட, துரைவைகோ மேடையிலிருந்து கீழே வந்து, கணேசமூர்த்தியை மேடைக்கு அழைத்தார். அவர் வரமறுத்தார். வைகோ மேடைக்கு வாருங்கள் என்று அழைத்தவுடன் மேடைக்குச் சென்றார். புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுடன் கணேசமூர்த்தியும் பெரிய ரோஜா மாலையை அணிந்து கொண்டு போட்டோவுக்குப் போஸ் கொடுத்துவிட்டு, மேடையை விட்டு கீழே இறங்கி முதல் வரிசையில் அமர்ந்து கொண்டார்.

பொதுக்குழுக் கூட்டத்தில் தலைமை கழக செயலாளர் துரை வைகோ, மற்றும் ஆடுதுறை முருகன், தி.மு.ராஜேந்திரன் ஆகிய இரண்டு துணை பொதுச் செயலாளர்கள் தேர்வு செய்ததற்கும், தணிக்கைக் குழு உறுப்பினராக மதுரை சுப்பையா தேர்வு செய்யப்பட்டதற்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டது. துரை வைகோ தலைமைக் கழக செயலாளர் பொறுப்பிற்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்று அறிவிக்கப்பட்டபோது, எழுந்த பலத்த கைதட்டலுக்கிடையில் பொதுக்குழு உறுப்பினர்கள் 5 பேர் எதிர்ப்பு தெரிவித்து முழக்கமிட்டனர்.

- Advertisement -

- Advertisement -

அவர்களை அப்புறப்படுத்துமாறு வைகோ கேட்டுக் கொண்டதின் பேரில் அவர்கள் வெளியேற்றப்பட்டார்கள். பொதுக் குழுக் கூட்டம் குறித்து, மதிமுகவின் முன்னாள் கொள்கை பரப்புச் செயலாளர், தற்போதைய உயர்மட்டக் குழு உறுப்பினர் வழக்கறிஞர் அழகுசுந்தரம் அங்குசம் செய்தி இதழுக்காக நம் சிறப்பு செய்தியாளர் ஆதவனிடம் பேசினார்.

“நடந்து முடிந்த பொதுக்குழுவில் நான் பெரிதும் மதிக்கின்ற தலைவர் வைகோ, வாரிசு அரசியலைக் கட்சியில் திணித்து அதற்குப் பொதுக்குழு ஒப்புதல் தந்துவிட்டது என்ற அப்பட்டமான பொய்யைக் கூறியுள்ளார். பொதுக்குழுக் கூட்டத்தில் அவைத்தலைவர் கலந்து கொள்ளவில்லை.

பொருளாளர் கணேசமூர்த்தி, பொருளாளர் மற்றும் கட்சி உறுப்பினர் பொறுப்பிலிருந்து முற்றிலும் விலகி 2019 நாடாளுமன்றத் தேர்தலின்போது திமுகவில் சேர்ந்துவிட்டார். எனவே பொருளாளர் பதவி காலியாக உள்ளது.  கட்சியில் அரசியல் ஆலோசனைக் குழு உள்ளது. உயர்மட்டக் குழு உள்ளது. இவற்றையெல்லாம் கலந்து ஆலோசிக்காமல் வைகோ தானே பொதுக்குழுவைக் கூட்டுகிறார். தலைமை தாங்குகிறார். எல்லாம் சரி.

அவைத்தலைவர் இல்லாமல் பொருளாளர் இல்லாமல் எப்படி பொதுக்குழு முடிவு எடுக்கமுடியும்? பொதுக்குழு எடுத்த முடிவு சட்டப்படியானது அல்ல. இதை எதிர்த்து திருப்பூர் துரைசாமி உட்பட பல முன்னணியினர் இணைந்து சட்டத்தின் வழியாக எதிர்கொள்வோம்.

4 bismi svs

கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது மதிமுகவின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் விலகிய மல்லை சத்யா திமுகவில் இணைந்து, மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதியில் திமுகவின் சின்னமான உதயசூரியனில் நின்றார். யாரும் எதிர்பார்க்காத வகையில் தோல்வி அடைந்தார். மல்லை சத்யா எப்போது திமுகவில் இணைந்தார்? யாருக்கும் தெரியாது.

அவர் விலகி சென்ற துணைப் பொதுச்செயலாளர் பொறுப்பு காலியாக இருந்த நிலையில் எப்போது அவருக்குத் தேர்தல் நடத்தப்பட்டு மீண்டும் துணைப் பொதுச்செயலாளர் பொறுப்புக்கு வந்தார். ஏ.கே.மணி மட்டும்தான் துணைப் பொதுச்செயலாளர் என்ற நிலையில் உள்ளார். தலைவர்கள் இல்லாமல் இந்தப் பொதுக்குழு நடந்துள்ளது என்பதைக் குறிப்பிட விரும்புகிறேன்.

திமுகவில் வாரிசு அரசியலை கலைஞர் நுழைக்கிறார் என்று சொல்லித்தானே எங்களைப் போன்ற இளைஞர்களை ஈர்த்து கட்சியைத் தொடங்கினார். வாரிசு அரசியலை எதிர்த்த வைகோ அவர்களே வாரிசு அரசியலைத் தூக்கிப் பிடிக்கிறார் என்பதை எப்படி ஏற்றுக்கொள்ளமுடியும். பொறுப்பு ஏற்றவுடன் துரை வைகோ, “கட்சி என்னும் பயிர் வளர்வதற்குக் கட்சிக்கு எதிராகச் செயல்படும் களைகளை அகற்றவேண்டும்” என்று பேசியுள்ளார். அவருக்குப் பயிர் எது? களை எது? என்று அறியாத நிலையில் அவர் பேசியிருக்கிறார்.

கூட்டத்திற்குக் கூட்டம் துரை வைகோ பேசும்போது, ‘எனக்குக் கடவுள் நம்பிக்கை உண்டு. என்னைப் பொறுத்தவரை பெரியாரும் ஒன்றுதான். பெருமாளும் ஒன்றுதான்’ என்று பேசி வருகிறார். மதிமுக என்பது திராவிட சிந்தனையை அடிப்படையாகக் கொண்ட இயக்கம். இதில் தனிமனிதர்களுக்குக் கடவுள் நம்பிக்கை இருக்கலாம். ஆனால் தலைமை பொறுப்பிற்கு வருவோர்க்கு கடவுள் நம்பிக்கை, மூடநம்பிக்கை இருக்கக்கூடாது. அவைத்தலைவர் திருப்பூர் துரைசாமிக்கும், விவசாய அணிச் செயலாளர் புலவர் முருகேசன், கணேசமூர்த்தி போன்ற பல தலைவர்கள் கடவுள் மீது நம்பிக்கை கொண்டவர்கள் இல்லை.

எல்லாம் சுயமரியாதை உணர்வு கொண்டவர்கள். எனக்குத் தமிழ்க் கடவுள் முருகன் என்ற எண்ணம் உண்டு. அதற்காக நான் பட்டை போட்டுக் கொண்டு பொட்டு வைத்துக்கொண்டு இருப்பதில்லை. கடவுள் நம்பிக்கை உண்டு என்பதைத் தொடர்ந்து கூறிவரும் துரை வைகோ கட்சியை எப்படி திராவிட இயக்கச் சிந்தனையோடு நடத்தமுடியும் என்ற கேள்வியை முன்வைக்கின்றோம்.

பொதுக்குழு முடிந்தவுடன் வைகோ புதிய பொறுப்பாளர்களை அழைத்துக்கொண்டு, திமுக தலைவர் ஸ்டாலினிடம் வாழ்த்துப்பெற அறிவாலயம் செல்கிறார். மதசார்ப்பற்ற ஜனநாயகக் கூட்டணிக்குத் தலைமை தாங்குகிற திமுக விடம் மதிமுகவின் புதிய பொறுப் பாளர்கள் ஏன் வாழ்த்துப் பெற வேண்டும்? அதற்குத்தான் நாங்கள் மதிமுகவை திமுகவில் இணைத்துவிடுங்கள் என்று சொல்கிறோம்.

மக்களவைத் தேர்லில் மதிமுக, திமுகவின் உதயசூரியனில் போட்டியிடுகின்றது. நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் மதிமுக 6 இடங்களில் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகின்றது. தேர்தல் செலவுகளை கூட்டணி மற்றும் கட்சிப் பார்த்துக் கொள்கிறது.

ஆனால் தொண்டர்கள் போட்டியிடுகின்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் என்று வருகிறபோது மதிமுகவின் பம்பரம் சின்னத்தில் போட்டியிடுங்கள் என்று கட்சி ஆணையிடுகின்றது. தேர்தல் செலவுகளைத் தொண்டர்களே செய்து கொள்ள வேண்டும் என்று செலவு செய்ய காசு கொடுக்காமல் கையை விரிக்கிறது. கட்சியில் தலைவர்களுக்கு ஒரு நீதி. தொண்டர்களுக்கு ஒரு நீதியா? இந்த அநீதியை எதிர்த்துதான் நாங்கள் தற்போது போராடிக் கொண்டிருக்கிறோம்

5 national kavi
Leave A Reply

Your email address will not be published.