வாரிசு வேலை கேட்டு பெட்ரோல் பாட்டிலுடன் வந்த பெண் !
வாரிசு வேலை கேட்டு பெட்ரோல் நிரப்பப்பட்ட பாட்டிலுடன் பெண் தீ குளிக்க முயற்சி
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி முத்தாலம்மன் கோவில் பகுதியை சேர்ந்தவர் மாரியம்மாள்.இவரது தாய் ராஜேஸ்வரி காரைக்குடி நகராட்சியில் துப்புரவு பணியாளராக வேலை பார்த்து வந்தவர் கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார்.
இந்நிலையில் ராஜேஸ்வரியின் மகள் மாரியம்மாள் தனக்கு வாரிசு அடிப்படையில் வேலை தர வேண்டும் என்று காரைக்குடி நகராட்சி நிர்வாகத்தினரிடம் ஏழு வருடங்களாக கோரிக்கை வைத்து வந்துள்ளார்.

இது குறித்து நகராட்சி நிர்வாகம் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படும் நிலையில்,இன்று பெட்ரோல் நிரப்பிய பாட்டிலுடன் நகராட்சி அலுவலகம் முன்பு அமர்ந்து தீக்குளிக்க முயன்றார்.தகவல் அறிந்த நகராட்சி அலுவலர்கள் மாரியம்மாளுடன் சமரச பேச்சுவார்த்தை நடத்தி அனுப்பி வைத்தனர்.
-பாலாஜி