முதல்வருக்காக அப்புறப்படுத்தப்படும் பூக் கடைகள் !

0
dear movie banner

முதல்வருக்காக  அப்புறப்படுத்தப்படும் பூக் கடைகள் !

200 க்கும் மேற்பட்ட கடைகளை 48 மணி நேரத்தில் காலி செய்ய வலியுறுத்தி மாநகராட்சி அதிகாரிகள் மிரட்டல் விடுத்ததாக புகார் சேலம் பழைய பேருந்து நிலையத்தில் வ.உ.சி. பூ மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இந்த மார்க்கெட்டில் பூ , பழம் , வாழை இலை உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்யும் 200 க்கும் மேற்பட்ட கடைகள் செயல்பட்டு வருகிறது.

Happy homes
அப்புறப்படுத்தப்படும் பூக் கடைகள்
அப்புறப்படுத்தப்படும் பூக் கடைகள்
- Advertisement -

- Advertisement -

இந்த நிலையில் தமிழக முதலமைச்சர் மு‌.க. ஸ்டாலின் , வருகின்ற 11 மற்றும் 12 ஆகிய தினங்களில் சேலம் மாவட்டத்திற்கு வருகை புரிகிறார் . சேலம் பழைய பேருந்து நிலையத்தில் கட்டப்பட்டுள்ள ஈரடுக்கு பேருந்து நிலையம், அண்ணா பூங்கா வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் சிலை ஆகியவற்றை திறப்பதற்காக ஸ்டாலின் வருகை புரிகிறார் .

இந்த நிலையில் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள வ.உ.சி . பூ மார்க்கெட்டில் செயல்பட்டு வரும் கடைகளை உடனடியாக அகற்ற வேண்டும் என்று கூறி , இன்று காலை முதலே மாநகராட்சி அதிகாரிகள் ஜேசிபி வாகனங்களைக் கொண்டு கடைகளை அப்புறப்படுத்தி வருகின்றனர் .

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நூற்றுக்கும் மேற்பட்ட கடை வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

3 kavi national
அப்புறப்படுத்தப்படும் பூக் கடைகள்
அப்புறப்படுத்தப்படும் பூக் கடைகள்
7 bismi bise almathina

முதலமைச்சர் வருகைக்காக எங்களின் கடையை அப்புறப்படுத்துவது வேதனை அளிக்கிறது .மாற்று இடத்தில் இதுவரை பணிகள் முழுமையாக நிறைவு பெறாமல் அந்த பகுதியில் கடைகள் அமைத்தால் எங்களுக்கு எந்த ஒரு பாதுகாப்பும் இல்லாத சூழல் உள்ளது .

எனவே முழுமையாக அந்த இடத்தில் பணிகள் நிறைவடைந்த உடன் கடைகளை நாங்கள் மாற்றிக் கொள்கிறோம். வேண்டுமென்றால் முதலமைச்சர் வருகைக்காக இரண்டு தினங்கள் அனைத்து கடைகளை விடுமுறை கூட விட்டு விடுகிறோம் .

ஆனால் உடனடியாக கடைகளை காலி செய்ய முடியாது என்று கூறி வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் என ஆயிரக்கணக்கானோர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் . எந்த ஒரு முன்னறிவிப்பும் இன்றி உடனடியாக அப்புறப்படுத்துவது வேதனை இருப்பதாக கூறி பூ வியாபாரிகள் கவலை தெரிவித்து வருகின்றனர்.

– சோழன்தேவ்

3 kavi national
Leave A Reply

Your email address will not be published.