அங்குசம் சேனலில் இணைய

பூட்டிய வீட்டில் திருடா்கள் கைவரிசை ! 12 நேரத்தில் கைது செய்த போலீசார்!

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

பூட்டிய வீட்டில் சுமார் ரூ.10,15,000/- மதிப்பிலான 21 பவுன் தங்க நகைகளை திருடிய நான்கு நபர்களை 12 மணி நேரத்தில் கைது செய்து, தங்க நகைகள் முழுவதும் மீட்கப்பட்டது.

29.05.25 பாலக்கரை காவல்நிலைய எல்லைக்குட்பட்ட கூனிபஜார் மெயின் ரோடு, பீமநகரில் உள்ள வீட்டினை அதன் உரிமையாளர் பூட்டிவிட்டு வெளியூர் சென்றும், பின்னர் 30.05.25-ந்தேதி இரவு தனது வீட்டிற்கு வந்து பார்த்த போது பூட்டிய நிலையில் இருந்த வீட்டினுள் நான்கு நபர்கள் மொட்டை மாடி கதவு வழியாக வீட்டினுள் சென்றும், பீரோவிலிருந்த சுமார் ரூ.10,15,000/- மதிப்புள்ள 21 பவுன் தங்க நகைகளை பீரோவை உடைத்து திருடி சென்றது தெரியவந்துள்ளது. இது குறித்து மேற்படி வீட்டின் உரிமையாளர் பாலக்கரை காவல்நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

Angusam Cinema - அங்குசம் சினிமா சேனல்

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

கமிஷனர் காமினி
கமிஷனர் காமினி

இச்சம்பவம் தொடர்பாக திருச்சி மாநகர காவல் ஆணையர் திருமதி.ந.காமினி, இ.கா.ப., அவர்களின் உத்தரவின்பேரில் துரித நடவடிக்கை மேற்கொண்டும், இத்திருட்டு சம்பவம் தொடர்பாக கூனிபஜார் பகுதியை சேர்ந்த எதிரிகளான 1. சதிஷ் (எ) பங்கி சதிஷ் வயது 20, த.பெ.பரமசிவம், 2. ராகுல் வயது 25, த.பெ.ரவி 3..வெற்றிசெல்வன் வயது 20, த.பெ.சொக்கலிங்கம், 4.ரவுடியான கௌரி (எ) நவநீதகிருஷ்ணன் வயது 28, த.பெ.கோவிந்தராஜ் ஆகியோர்களை சம்பவம் நடந்து 12 மணி நேரத்திற்குள் கைது செய்தும், மேற்படி எதிரிகளிடமிருந்து வழக்கின் சொத்தான சுமார் ரூ.10,15,000/- மதிப்பிலான, 21 பவுன் தங்க நகைகள் மீட்டும், எதிரிகளை நீதிமன்ற காவலுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்பட்டது

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

இத்திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட எதிரிகளை 12 மணி நேரத்திற்குள் விரைந்து கைது செய்தும், வழக்கின் சொத்துகளை மீட்ட காவல் அதிகாரிகள், மற்றும் காவல் ஆளிநர்களை திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்கள் வெகுவாக பாரட்டினார்கள்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

Leave A Reply

Your email address will not be published.