அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

வழக்கம் போலவே வந்துவிட்டுப் போகட்டும் இந்த ஆண்டும்…

அங்குசம் வார இதழின் உறுதுணையாளர்கள்...

பெரும் மழை

புயல்

இந்த வார JUNE 3 அங்குசம் இதழில்…

வறட்சி

போர்

யாவரும் கேளீர் 2026 மே மாத இதழ்

அரசியல்வாதிகளின்

அண்டபுளுகு

எதை

உங்களால்

தடு்த்துவிடமுடியும்…

பரிணாம வளர்ச்சியில்

தாங்கிக் கொள்ளவும்

தப்பிப் பிழைக்கவுமான

தகுதி படைத்த

உயிர்கள்

நாம்

அதனால்தான்

வாழ்கிறோம்

அப்படியே

நகரட்டும் வாழ்க்கை…

ட்ரம் வாழ்ந்த காலத்தில்

ஜெகத்குரு ஜி வாழ்ந்த

காலத்தில்

நாமெல்லாம்

உயிரோடு வாழ்ந்ததே

அவமானத்தின்

அடையாளம் என்றுதான்

வரலாறு

எம்மைப் பதிவு

செய்ய போகிறது…

எருமையைவிடவும்

நாம்

எந்த வகையிலும்

உயர்ந்தவர்கள் இல்லை

காலமாற்றத்தில்

கை கால்கள் முளைத்திருக்கிறன

அவ்வளவுதான்…

அணுவைப் பகுத்த

எம்மால் தீண்டாமைத்தீட்டை

இன்னும்

உடைக்கவே முடியவில்லையே…

என்ன வளர்ச்சி

அடைந்திருக்கிறோம்

பழைய கற்காலத்திலிருந்து

புதிய கற்காலம்

குத்தீட்டிகளைக் கூர்த்தீட்ட பழகியிருக்கிறோம்

விலங்கை வேட்டையாடிய நாம்

பசுவுக்காக

மனிதனை வேட்டையாடுகிறோம்…

எல்லா நோயிக்கும்

ஒரே மருந்து கோமியம்

எல்லா துயருக்கும்

ஒரே தீர்வு

ஜெய் ஸ்ரீராம்

எல்லா வீழ்ச்சிக்கும்

ஒருவரே காரணம்

நேரு

இந்த நூற்றாண்டின்

எளிய கண்டுபிடிப்பு

இவைகளாகத்தான்

தமிழக முதல்வர் விஜய் பிறந்தநாள் வாழ்த்து

இருக்க முடியும்…

சிக்கி முக்கிக் கல்லில்

வெளிபட்ட தீயைக்

கல் தூணில்தான்

ஏற்றுவோம் என்கிறோமே

இது என்ன

அறிவியல்…

மது

வீட்டுக்கும்

நாட்டுக்கும் கேடு

அரசுக்கு இல்லை என்பதுதான்

இந்த நூற்றாண்டின் அயோக்கியத்தனம்…

சனநாயகத்தின்

உட்பட்சத் தகுதி்

வாக்களிப்பது

அதையே திருடி

அதிகாரம் பெருவோம்

என்பதை

எந்தத் தொழிலில் அடக்குவது…

மனிதம்

சுவாசிப்பதற்கான

எல்லா

துவாரங்களையும்

மதம் அடைத்துவிட்டு

ஆகாயம்

வழியாக அணுகுண்டு

தாக்குதல் நடத்திக் கொண்டிருக்கிறது…

பூமியைத்

தண்ணீரைக்

காற்றைக்

கடலை மாசாக்கிவிட்டு

விண்வெளியில்

ஆராய்ச்சி நடத்துகிறோம்…

வளரவேகூடாதா?

தேசப்பக்தரின்

கொந்தளிப்புப் புரிகிறது

மூளை வளர்ந்தால்

பரவாயில்லை

முடிவளர்ந்து எதற்காகப் போகிறது…

ஏற்பது

விடுவது

கற்பது

புதிபிப்பது

முழங்குவது

முழக்குவது

என்ற புதிய உறுதிமொழிகள் எல்லாம்

ஒன்றுமே இல்லை

எல்லாமே இங்கே இருப்பதுதான்

குப்பை மேடுகள்

கடந்து

மனிதனும்

மனிதமும் வாழ்வதற்கு

ஏதாவது செய்யுங்கள்…

வழக்கம் போலவே

வந்துவிட்டுப் போகட்டும்

இந்த ஆண்டும்…

2026

 

மகா.இராஜராஜசோழன்,

குழந்தைகளுக்கான தமிழ் பயிற்றுநர், இயக்குநர்,

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.