நாட்டின் சொத்துக்களை தனியாருக்கு தாரைவார்க்கும் திட்டமா?

இந்த வார அங்குசம் இதழ் படிக்க..

இந்தியாவில் மத்திய பொதுதுறை நிறுவனங்கள் மற்றும் அரசு துறை நிறுவனங்களின் வசமுள்ள சுமார் 5000 கோடி  மதிப்பிலான ஆயிரக்கணக்கான நிலங்கள், கட்டிடங்கள்  ஆகியவற்றை விற்று அதன்மூலம் நிதியை திரட்டி நாட்டின் உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கு செலவிடப்போவதாக, அரசின்தேசிய நிலப் பணமாக்கல் கழகம் (NLMC) அறிவித்திருப்பது, அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

கடந்த 18 ஆம் தேதி நடைபெற்ற, NLMC அமைப்பின் 21-ஆவது இயக்குநர் குழுவின் கூட்டத்தில், இம்முடிவு செயல்வடிவம் பெற்றுள்ளது. எனினும், இதனை நடைமுறைப்படுத்துவதில் உள்ள பல்வேறு நடைமுறை சிக்கல்களை வல்லுநர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.

திருச்சியிலிருந்து முதல் இன்டர்நேஷனல் ரோட்டரி இயக்குநர்…

நிலஉரிமை நில ஆவணங்கள் முழுமையாக கணினி தரவு மயமாக்கப்படவில்லை. நீதிமன்ற வழக்கில் சிக்கி இறுதித் தீர்ப்பை பெறாத சொத்துக்கள் நிறைய உள்ளன. மாநில அரசுடனான எல்லை பிரச்சனைகள். பொதுப்பயன்பாடு என்ற வகைப்பாட்டில் உள்ள சொத்துக்களை விற்பணைக்கு கொண்டு வர வேண்டுமெனில், அந்தந்த ஊராட்சி அமைப்புகளிடமிருந்து முறையான அனுமதியை பெறுவதில் உள்ள சிக்கல். மிக முக்கியமாக, நிலம் தொடர்பான உரிமை மாநில பட்டியலில் வருவதால், நிலத்தை மதிப்பீடு செய்வது; முத்திரைத்தாள் கட்டணம்; தடையின்மை சான்று உள்ளிட்ட அனுமதிகளை வழங்கும் இடத்தில் உள்ள மாநில அரசுகள் இதற்கு சம்மதிக்குமா? என்பது உள்ளிட்டு பல்வேறு சிக்கல்களை இந்த திட்டம் எதிர்கொண்டிருக்கிறது.

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

இப்போது வரையில் மர்மங்களை நிறைந்த பாஜகவின் நட்சத்திர திட்டமான பி.எம். கேர் நிதி திட்டம் போன்ற திட்டமா? நீட் தகுதித்தேர்வு என்ற அறிவிப்புக்குப் பிறகு, கோச்சிங் சென்டர்கள் கொழிக்கும் வகையில் மாறியதே அதுபோன்றதொரு திட்டமா?

உலக தரத்திலான விமான நிலையங்கள் மேம்பாடு, மின் உற்பத்தித் திட்டங்களுக்காக, அதானி – அம்பானிகளுக்காக இந்தியாவின் சொத்துக்களை தாரை வார்க்கப்பட்டதே அதுபோன்றதொரு திட்டமா? மக்களுக்கு தெளிவுபடுத்துமா, பாஜகவின் ஒன்றிய அரசு?

தேவராஜன் தனசேகர்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.