ஏலக்காயில் பல ஆயிரம் கோடி “சி” பார்ம் ஊழல்!! வருமானவரித்துறை அதிகாரி மனைவியும் உடந்தை

0

ஏலக்காயில் பல ஆயிரம் கோடி “சி” பார்ம் ஊழல்!! வருமானவரித்துறை அதிகாரி மனைவியும் உடந்தை

 

தேனி மாவட்டம், போடியில் ஏலக்காய் வாசனையும் அது சார்ந்த வியாபாரமும் கொடி கட்டி பறந்து வருகிறது. கேரளாவில் 2 லட்சம் ஏக்கரில் விளையும் ஏலக்காய் தமிழக எல்லையில் அமைந்துள்ள போடியில் நறுமண வாரியத்தால், ஏலக்காயினை விவசாயிகளிடம் வாங்கி, வியாபாரிகளுக்கு விற்கப்பட்டு, அவை வெளிமாநிலத்திற்கும், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

தேனி மாவட்டம் போடி பகுதியில் 1985ஆம் ஆண்டு முதல் சம்பத் (எ) ஆறுமுகம் பல்வேறு பெயர்களில் வணிகவரி உரிமங்களை பினாமி பெயர்களில் பெற்று கோடிக்கணக்கான ரூபாய் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

SAMPATH
- Advertisement -

- Advertisement -

சம்பத், ‘கார்டமம் குரோவர்ஸ் ஃபார்எவர் பிரைவேட் லிமிடெட்’ என்ற பெயரில் ஏல மையம் வைத்து நடத்தி வருகிறார். இதில் ஆளுங்கட்சியை சேர்ந்த ஒன்றிய பிரதிநிதி சக்கரவர்த்தி மற்றும் வருமானவரித்துறை அதிகாரி அம்பேத்கர் மனைவி உள்ளிட்டவர்கள் பங்குதாரர்களாக உள்ளனர். பங்குதாரர்களாக பலரை சேர்த்து அவர்களிடம் பல கோடிகளை முதலீடாக பெற்று கொண்டு அவர்களுக்கு உரிய பங்கு தொகை, லாபம் தராமல் ஏமாற்றியுள்ளதாக சம்பத் மீது புகார்கள் குவிந்துள்ளது. சமீபத்தில் மத்திய அமலாக்கத் துறை சம்பவத்திற்கு சொந்தமான இடங்களில் நடத்திய சோதனையில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகள், பினாமி பெயர்களில் வாங்கி வைக்கப் பட்டுள்ள சொத்து பத்திரங்கள், பண குவியல்கள் கிடைத்ததாக தகவல்கள் தெரிவிக்கப்படுகிறது. பினாமி பெயர்களில் பல உரிமம் பெற்று பல கோடி ரூபாய் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்துவதில் கில்லாடியாக சம்பத் திகழ்ந்து வருகிறார்.

SHANTHI

மேலும் வணிகவரித்துறையில் ‘சி’ பார்ம் பயன்படுத்தி மானியம் பெற்று அரசுக்கு பல்லாயிரம் கோடி ரூபாய் வருவாய் இழப்பை ஏற்படுத்தியுள்ளார். சம்பத் பினாமி பெயர்களில் லைசென்ஸ் பெற்று சிவகாசியில் போலி “சி” பார்ம் அச்சடித்து கேரளாவில் ஏலக்காய் வாங்கி பல ஆயிரம் கோடி வருவாய் ஈட்டி உள்ளார். இது குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு பல மாதங்களாக விசாரணை செய்யாமல் மதுரை கோட்ட இணை ஆணையர் குட்கா குறிஞ்சி செல்வன் கிடப்பில் போட்டு வைத்து சம்பத்திற்கு சாதகமாக செயல்பட பல லட்சங்களை லஞ்சமாக பெற்றுக்கொண்டு சம்பத்தை தப்பிக்க வைக்க அனைத்து முயற்சிகளும் செய்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சம்பத்தின் பதிவு பெறாத மூன்று குடோன் களில் இருந்து ஆயிரக்கணக்கான ஏலக்காய் மூட்டைகளை கைப்பற்றி வழக்கு பதிவு செய்யாமலும், அரசுக்கு வரவேண்டிய பல கோடி ரூபாய் வருவாய் ஈட்டாமலும் தகவலை தொடர்புடைய அதிகாரிக்கு தெரிவிக்காமல் குறிஞ்சிசெல்வன் அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

4 bismi svs
KURINIJI SELVAN

சம்பத்தின் சகோதர் ரவிக்குமார் தனது மனைவி. மாமனார், சகோதரர், டிரைவர், மகள், நண்பர் பெயர்களில் சுமார் ரூ.890 கோடிக்கு ஏலக்காய் வாங்கி விற்பனை டர்னோவர் செய்து, பினாமி லைசென்ஸ் மூலமாக ரூ.44.85 கோடி ஜி.எஸ்.டி வரி முறைகேடு செய்த வழக்கில் கோவை மண்டல அலுவலக அதிகாரிகள் ரவிக்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதே ரவிக்குமார் வாட் சட்டத்தில் ரூ.131 கோடி “சி” பார்ம் பெற்று வரி ஏய்ப்பு செய்த தை கண்டுகொள்ளாமல் இருக்க ஒரு பெரிய தொகையை குறிஞ்சி செல்வன் லஞ்சமாக பெற்று கொண்டு, ரவிக்கு உதவி செய்துள்ளதாக கூறப்படுகிறது. முறைகேடாக ஏலக்காய் வாங்கி பிளாமி லைசென்ஸ் மூலமாக “சி” பார்ம் பயன்படுத்தி பல ஆயிரம் கோடி மோசடி செய்து, அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தும் நபர்களுக்கு குறிஞ்சி செல்வன் ஆதரவாக செயல்பட்டு வருவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. திண்டுக்கலில் பணிபுரியும் வணிகவரித்துறை ஊழியரை 3 மாதங்களில் 5 முறை பணி இடமாறுதல் செய்ததை மதுரை உயர்நீதிமன்றம் தடை விதித்து தீர்ப்பு வழங்கிய பின்னரும், ஊழியர் மீது விசாரணை நடத்த குட்கா குறிஞ்சி செல்வன் 11 அதிகாரிகளை நியமித்து பணித் திறன் ஆய்வு கமிட்டி அமைத்து 88பக்கத்தில் 17(b) என்ற குற்றச்சாட்டு குறிப்பாணை வழங்கி சட்டத்திற்கு முரணான போக்கினை கடைப்பிடித்து வருகிறார்.

வரி பாக்கி நிறுவனங்கள் :
விமல் டிரேடர்ஸ் (33725081477),
ரூ.34 கோடி
(உரிமையாளர் முருகேசன் இறந்து விட்டார்),
ஜெய ஸ்ரீ டிரேடர்ஸ் (33775081401)
ரூ.42 கோடி
(உரிமையாளர் மனோகரன்) இறந்து விட்டார்.
பூர்ணா ஸ்ரீ பைசஸ் 33256397999,
ரூ.31 கோடி (பினாமி லைசென்ஸ்)

சென்னை மாதவரத்தில் குட்கா ஊழல் முறைகேடு வழக்கு 2018-ல் தாக்கல் செய்யப்பட்டது. தமிழக முன்னாள் அமைச்சர்கள் உட்பட அரசு அதிகாரிகள் 12 பேர் மீது சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசு கேட்டது. இன்று 23.7.2022 அரசு அதிகாரிகள் 12 பேர் மீது சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.

இந்த வழக்கில் அப்போது வணிகவரித் துறையின் துணை ஆணையராக இருந்த குறிஞ்சிசெல்வன் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். குறிஞ்சிசெல்வன் 2013 காலகட்டத்தில் சென்னை, சென்ட்ரலில் செயலாக்கப் பிரிவில் துணை ஆணையராக இருந்தபோது இவரது கட்டுப்பாட்டிலிருந்த திருத்தணி, ஊத்துக்கோட்டை, கான்கார்டு மற்றும் ஏர்போ ர்ட் செக்போஸ்ட் வழியாக குட்காவை ஆந்திரா மற்றும் கர்நாடகா போன்ற பிற மாநிலங்களுக்கு விற்பனை செய்ய குறிஞ்சிசெல்வன் லஞ்சம் பெற்றுள்ளதை குட்கா இண்டஸ்ட்ரி வைத்து நடத்திய மாதவராவ் தனது டைரியில் குறிப்பிட்டுள்ளார். குறிஞ்சிசெல்வன் அலுவலர் ஒன்றிய சங்க மாநிலத்தலைவர் சூரிய மூர்த்தியின் மருமகன் என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல் மதுரை மேற்கு துணை ஆணையர் சாந்தி என்பவர் தனக்கு கீழ் இருந்த இண்டர்னல் ஆடிட் டீமை பயன்படுத்தி ரவிக்குமார் மற்றும் விமல் டிரேடர்ஸ் போன்ற வணிக நிறுவனங்களை ஆடிட் செய்யாமல் பல லட்சம் லஞ்சம் வாங்கிக்கொண்டு கண்டுகொள்ளாமல் இருந்துள்ளார் என்றும் கூறப்படுகிறது.

துணை ஆணையர் சாந்தி 2014 முதல் 2020 வரை இளநிலை உதவியாளர்களுக்கு, உதவியாளர்களுக்கு மற்றும் அலுவலகத்திற்கு தேவையான பேப்பர், பேனா, பென்சில், கவர் உள்ளிட்டவைகளை அரசு அச்சகத்தில் இருந்து வாங்கித் தரவில்லை என்று தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் தந்துள்ளார். அதாவது வெளிமார்க்கெட்டிலிருந்து வாங்கியதால் அரசிற்கு கூடுதல் செலவு ஏற்படுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

-ஜெயபால்

5 national kavi
Leave A Reply

Your email address will not be published.