“சூடாகி”ப் போன “சுழலும் சொல்லரங்கம்…!!!”

0

 

“சூடாகி”ப் போன “சுழலும் சொல்லரங்கம்.!!!”

 

2 dhanalakshmi joseph

திருச்சி நகைச்சுவை மன்றமும்
சோழ மண்டலத் தமிழிலக்கியக்
கூட்டமைப்பும்
இணைந்து…

திருச்சியில் (14.08.2022) அன்று
“விடுதலையின் வேர்கள்” என்கிற தலைப்பில் “சுழலும் சொல்லரங்கம்” சொற்போர் நிகழ்ச்சியினை
நடத்தியது.

- Advertisement -

- Advertisement -

“வெற்றிக் கொடி நாட்டியவர்கள்” என்கிற தலைப்பில், “தண்ணீர் விட்டா வளர்த்தோம்
கண்ணீரால் காத்தோம்
இந்திய தேச விடுதலை உணர்வினை. அதில் முதன்முதலாக வெற்றிக் கொடி நாட்டியவன் வீரன் வாஞ்சிநாதன்.
மணியாச்சி ரயில் நிலையத்தில் ஆஷ்துரையை துப்பாக்கியால் சுட்டுக் கொல்கிறான் வாஞ்சிநாதன்.
பின்னர் அதே துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டுக்கொண்டு உயிர்ப் பலி ஆகிறான் வீரன் வாஞ்சிநாதன். அதன் பின்னரே இந்தியா முழுதுமாகப் பரவலாகிறது

தேச விடுதலைப் போராட்டம்.” எனக் குறிப்பிட்டார் முனைவர் சாத்தம்மைப்பிரியா.

“சுதேசிக் கப்பல் ஓட்டியவர்” என்கிற தலைப்பில், “அடிமைப்பட்டுக் கிடந்த இந்தியாவிலேயே முதன்முதலாகச் சொந்தமாக இரண்டு கப்பல்கள் வாங்கி, சுதேசி வணிகத்துக்கு வழி காட்டியவர் வ.உ.சிதம்பரம் பிள்ளை.

4 bismi svs

சுதந்திரப் போரில் சிறை சென்று, சிறைக்குள் செக்கிழுத்தார்.
நான் வெறும் செக்கினை இழுக்கவில்லை. அதனுள்ளே எனது பாரத மாதாவை அமர வைத்து இழுக்கிறேன் என்றார் வ.உ.சி.
அவருக்கு இரட்டை ஆயுள் தண்டனைப் பெற்றுத் தரக் காரணமாக இருந்தவர் ஆஷ்துரை. இப்போது ஆஷ்துரை நினைவிட மண்டபத்தைத்
புதுப்பித்துக் கொண்டிருக்கிறார்கள். இது சரி தானா?” எனக் கேள்வி எழுப்பினார்
முனைவர் நீலகண்டன்.

திருச்சி நகைச்சுவை பட்டிமன்றம்

“சுதந்திரக் கவிதை மீட்டியவர்” என்கிற தலைப்பில், “அப்போதெல்லாம் சமயம் சார்ந்து மன்னர்கள் சார்ந்து கவிஞர்கள் பாடல்கள் புனைந்து கொண்டிருந்த காலத்தில், தேச மக்கள் குறித்தும் தேச விடுதலை குறித்தும் கவிதைகள் பாடியவன் பாரதி.
அதனால் தான் அவன் இன்றைக்கும் தேசியக் கவியாகப் போற்றப்படுகிறான்.
இந்தியா அடிமைப்பட்டுக் கிடந்த காலத்திலேயே, சுதந்திரம் அடைவதற்கு முப்பது ஆண்டுகளுக்கு முன்னரே, மகாகவி பாரதி தான், “ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே
ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம் என்று” கவிக்குரல்
எழுப்பியவன் பாரதி.” என்றுரைத்தார்
திருச்சி நகைச்சுவை மன்றச் செயலாளர் சிவகுருநாதன்.

“வீரப் பால் ஊட்டியவர்கள்” என்கிற தலைப்பில், “இந்திய விடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்கு மகத்தானது.
ஜான்சி ராணி, லெட்சுமி பாய், கேப்டன் லெட்சுமி, தில்லையாடி வள்ளியம்மை போன்றோரின்
தியாகங்கள்
மறுக்க முடியாது.
அவ்வளவு ஏன்?? சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்ற ஒவ்வொரு ஆணின் பின்னாலும் ஒரு தாயாகவோ ஒரு மனைவியாகவோ ஒவ்வொரு பெண்ணின் பங்களிப்பும் மறைந்துள்ளது.
நிறைந்துள்ளது.” என்று முழக்கமிட்டார் முனைவர்
விஜயசுந்தரி.

திருச்சி நகைச்சுவை பட்டிமன்றம்

“சுழலும் சொல்லரங்கம் சுவையாகவும்
சூடாகவும்
போய்க் கொண்டுள்ளது.
ஆஷ்துரை குறித்தும் வீரவாஞ்சி நாதன் குறித்தும் அமர்க்களமாக இங்கே பேசப்பட்டது. 1911ஆம் ஆண்டு. ஜூன் மாதம் 17 ஆம் தேதி காலை 10.30 மணி. மணியாச்சி ரயில் நிலையம். ரயிலில் பயணம் செய்த ஆங்கிலேய கலெக்டர் ஆஷ்துரையை அடையாளம் கண்டு, துப்பாக்கியால் சுட்டுக் கொல்கிறான் வாஞ்சிநாதன். பின்னர் அதே வாஞ்சிநாதன் தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு வீர மரணம் அடைகிறான்.
இதெல்லாம் அழிக்க முடியாத வரலாற்று நிகழ்வுகள்.
ஆனால் இதே நேரத்தில் தூத்துக்குடி வ.உ.சி. சாலையில் அமைந்துள்ள ஆஷ்துரை நினைவிடத்தைப் புதுப்பித்துக் கொண்டிருக்கிறார்கள். அதே நேரத்தில் வாஞ்சிநாதனுக்கு என்ன செய்துள்ளோம் என்கிற கேள்வி எழுகிறது அல்லவா??
அதுவும் பல கட்ட அறப்போராட்டங்களுக்குப் பின்னரே, அந்த ரயில் நிலையத்துக்கு “வாஞ்சி மணியாச்சி” என்கிற பெயர் மாற்றம் ஏற்பட்டது. அது தவிர வாஞ்சிநாதன் நினைவாக அங்கு வேறு எதுவுமே நிறுவப்படவில்லை. ஆஷ்துரைக்கு இந்த அரசு அவரது நினைவிடத்தை மறு சீரமைப்பு செய்யும் முன்பாக வீரன் வாஞ்சிநாதனுக்கு உரிய சிறப்புகள் செய்து மரியாதை பண்ணட்டும்.” என்றுரைத்தார் சுழலும் சொல்லரங்கத்தினை வழி நடத்திய பேராசிரியர் த. இராஜாராம்.

 

தொகுப்பு –

ஸ்ரீரங்கம் திருநாவுக்கரசு

5 national kavi
Leave A Reply

Your email address will not be published.