துவாக்குடியில் மிரட்டி பணம் வாங்கும் பைனான்ஸ் கடை உாிமையாளா் கைது!
திருச்சி மாவட்டம், துவாக்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அண்ணாவளைவு பகுதியில் வசித்து வரும் சந்திர பிரகாஷ்(39), த.கோபால், துவாக்குடி தெற்கு மலை, என்பவர் அப்பகுதியில் பைனான்ஸ் கடை வைத்து கொண்டு, பணம் வாங்குபவர்களை அவ்வபோது மிரட்டி, பணத்தை வாங்குவதும். கடன் வாங்கிய பெண்களிடம் தவறான முறையில் நடந்து கொள்வதும், வாடிக்கையாக இருந்து வந்துள்ளது.
மேற்படி சந்திர பிரகாஷ் மீது கடந்த 2019 ம் ஆண்டு சரித்திர பதிவேடு துவாக்குடி காவல் நிலையத்தில் துவங்கபட்டுள்ளது. இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அன்பு (39), த.பெ. கிருஷ்ணமூர்த்தி. துவாக்குடி தெற்கு மலை என்பவரிடம் ஷேர் பணமாக ரூ. 5,55,000/- பெற்றுள்ளார். ஆனால், இதுநாள் வரை எந்தவிதமான ஷேர் தொகையும் கொடுக்கவில்லை. கொடுத்த தொகையை கேட்டதற்கு அருவாளை காட்டி மிரட்டியுள்ளார்.
இது சம்மந்தமாக மேற்படி அன்பு துவாக்குடி காவல் நிலையத்தில் கொடுத்த புகார் மனு மீது துவாக்குடி காவல் நிலையத்தில் குற்ற எண்.273/ 25, ச/பி 296(b), 316(2), 318 (4), 351(3) BNS கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு எதிரி சந்திர பிரகாஷ் நீதிமன்ற காவலுக்கு அனுப்ப்பட்டுள்ளார்.