மாந்திரீகம் பூஜைகள் செய்வதாக 65 லட்சம் மோசடி செய்த மூன்று பேர் கைது !
மாமனார், மாமியார், கணவரிடம் மாந்திரீகம் பூஜைகள் செய்வதாக 65 லட்சம் மோசடி செய்த மூன்று பேர் மீது மருமகள் பரபரப்பு குற்றச்சாட்டு. 24 மணி நேரத்தில் கைது செய்து மூன்று பேர் சிறையில் அடைப்பு !
தேனி மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரிடம் திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டை சேர்ந்த மாமனார் ஐய்யப்பன், மாமியார் மீரா பாய் இவர்களுடைய மகன் அருள்மணிகண்டன் மருமாள் இந்திரா பிரியதர்ஷினி, (35) தனது கணவர் அருள்மணிகண்டனுக்கு 2009ம் வருடம் முதல் மனநிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததார்.
அப்போது தேவதானப்பட்டியை சேர்ந்த ஜோதிடர் சந்திரசேகரன் மற்றும் அவரது மனைவி விஜி அறிமுகமாகி பிரியதர்ஷினியிடம் உங்கள் கணவர் அருள்மணிகண்டனுக்கு தற்போது நேரம் சரியில்லை. அதனால் தேவதானப்பட்டியில் நான் கட்டி வரும் கோவிலில் வைத்து பூஜை செய்தால் சரியாகிவிடும் என்று ஜோதிடர் சந்திரசேகரனின் வீட்டில் வைத்து பில்லி சூனியம், நடுநிசி பூஜை, மற்றும் மலையாளகுருஜி பூஜை, பரிகாரம் செய்தால் உடல்நிலை மற்றும் மனநிலை சரியாகிவிடும் என்று நம்பிக்கை ஏற்படுத்தினார்.

இதனை நம்பி ஜோதிட பரிகாரத்திற்கும் மற்றும் மாந்திரிக பூஜைக்கு பணம் வேண்டும் என்று பிரியதர்ஷினியின் குடும்பத்தாரிடம் இருந்து சந்திரசேகர் பலமுறை பல தவணை முறையில் சுமார் ரூ.65 லட்சம் வரை பணத்தை ஏமாற்றி பெற்றுக்கொண்டார். அருள்மணிகண்டனுக்கு மனநல பாதிப்பு ஒரு முன்னேற்றமும் இல்லாமல் இருந்ததால் பிரியதர்ஷினி, ஜோதிடர் சந்திரசேகரன்.அவரது மனைவி விஜி மற்றும் அவர்களது கார் டிரைவர் ஆனந்தன் ஆகிய மூன்று பேரிடம் இன்னும் தனது கணவரின் உடல்நிலை சரியாகவில்லை என கேட்டார்.
அப்போது பூஜாரி அசிங்கமாக பேசி கொலைமிரட்டல் விடுத்தார். உடனே அருள்மணிகண்டன் மனைவி இந்திரா பிரியதர்ஷினி கொடுத்த புகாரின் பேரில் தேனிமாவட்ட குற்றப்பிரிவில், கூடுதல் கண்காணிப்பாளர் சுரேஷ், ஆய்வாளர் அரங்கநாயகி, வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார். பின்னர் சந்திரசேரன் அவரது மனைவி விஜி மற்றும் கார் டிரைவர் ஆனந்தன் ஆகிய மூன்று பேரை கைது செய்தனர்.
மேலும் விசாரணை செய்த போது மூன்று பேரும் ஒன்று சேர்ந்து கூட்டுசதி செய்து நம்பவைத்து ஏமாற்றி பணத்தை பெற்றுக்கொண்டு மோசடி செய்த உண்மையை ஒப்புக்கொண்டனர். பின்னர் மூன்று பேரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
ஜெ.ஜெ.