திருச்சி மாநகராட்சி வார்டு 24-ல் ரவுண்ட்அப் !

நம்ம கவுன்சிலரு வார்டுக்கு என்ன தான் செஞ்சாரு?

0

அங்குசம் இதழ் இணையதளத்தில் E-Book வாசிக்க... இந்த லிங்கை பயன்படுத்துங்கள் - அங்குசம் அச்சு இதழ்.. உங்கள் இல்லம் தேடி வர ஆண்டு சந்தா ரூபாய் 500 மட்டுமே - தொடர்பு எண் - 9488842025

திருச்சி மாநகராட்சியில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று ஓர் ஆண்டு காலம் நிறைவடைந்ததை தொடர்ந்து மக்கள் பிரதிநிதிகளால் நலத்திட்டப்பணிகள் என்ன நடைபெற்றுள்ளது என்பதை கண்டறிய “அங்குசம் செய்திக்குழு” திட்டமிட்டது.

புத்தூர் அக்ரஹாரம், இராமலிங்க நகர் (விரிவாக்க பகுதியும் உள்ளடக்கிய), சீனிவாச நகர் முழுவதும், கனரா வங்கி காலனி, சிண்டிகேட் வங்கி காலனி, வடக்கு, தெற்கு முத்துராஜா தெரு, ராமன் நகர், தெரசாள் காலனி, ரிவைவல் நகர், சிவா நகர், அம்மன் நகர், வார்னஸ் காம்பவுண்ட் உள்ளிட்ட மிகப் பெரிய வார்டும் சுமார் 20 ஆயிரம் மக்கள் தொகை கொண்ட திருச்சி மாநகராட்சியின 24ம் வார்டின் கவுன்சிலர் சோபியா விமலாராணி.

அடகு - ஏல நகையை மீட்டு மறு அடகு வைக்க - விற்க

35 ஆண்டுகளுக்கு பின் வெற்றிக்கனியை பறித்து தந்த வேட்பாளர்!
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில சிறுபான்மை பிரிவு துணைத்தலைவராக இருக்கும் பேட்ரிக் ராஜ்குமாரின் மனைவியான இவர் தனது முதல் தேர்தலிலே பெரும் சாதனையை நிகழ்த்தி வெற்றி பெற்றுள்ளார். கடந்த 35 ஆண்டுகளாக 4 முறை காங்கிரஸ், 2 முறை திமுக என தோல்வியை தழுவிய இவ்வார்டில் முதல்முறையாக இக்கூட்டணி சார்பில் வெற்றியை பெற்று தந்த வேட்பாளர்.

நீங்கள் வேலை பெறுவது எளிது...

சோபியா விமலாராணிமாமன்ற உறுப்பினர் 24- வது வார்டு
சோபியா விமலாராணி மாமன்ற உறுப்பினர் 24- வது வார்டு
3

ஓராண்டு சாதனைகள்

இவரின் ஓராண்டு சாதனைகள் குறித்து அங்குசம் செய்தி குழு நேரில் கேட்ட போது, அவர் கூறுகையில், தேர்தல் நேரத்தில் பெரியதாக வாக்குறுதிகள் எதுவும் அளிக்கவில்லை. சுகாதாரம், குடிநீர், உள்ளிட்ட அடிப்படை தேவைகளை குறைவில்லாமல் நிறைவேற்றி தருவேன் என்று கூறி வெற்றி பெற்றேன். தேர்தலுக்கு பின்னர், மக்களுக்கான தேவைகள் அதிகம் இருப்பதை உணர்ந்தேன்.

4
 • முதற்கட்டமாக, துப்புரவு பணியாளர்கள் வசிக்கும் தெரசாள் காலனி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான சாலை வசதி, மின் விளக்கு, குடிநீர், கழிவுநீர் வெளியேற்றம் உள்ளிட்ட பணிகளை 3 மாத காலத்திற்குள் நிறைவு செய்தேன்.
 • தொடர்ந்து, குளத்தான் மேடு பகுதியின் பின்புறம் உள்ள திறந்தவெளி பெரிய சாக்கடை அமைச்சர் கே.என்.நேரு தனது தேர்தல் வாக்குறுதியாக சீரமைத்து தருவதாக அறிவித்திருந்தார். அதன்படி ரூ.90 லட்சம் மதிப்பில் திட்ட ஒப்புதல் பெறப்பட்டு பணிகள் தொடங்காமல் இருந்தது. இதனை நான் பதவியேற்றவுடன் கான்கிரிட் சுவர் அமைக்கும் பணியை துரிதப்படுத்தி அமைச்சரின் வாக்குறுதியை நிறைவேற்ற உதவியுள்ளேன்.
 • கடந்த நிர்வாகத்தின் போது பாதாள சாக்கடை பணிகள் துவங்கிய போது சேதமடைந்திருந்த சாலைகளை வார்டு குழு நிதி மூலம் தற்காலிகமாக சீரமைத்து கொடுத்தது போக்குவரத்திற்கு பெரும் உதவியாக இருந்தது. தற்போது பாதாள சாக்கடை பணிகள் 100% நிறைவுபெற்றது.

24 மணி நேரத்தில் குறை தீரும்

 •  மக்களை ஒருங்கிணைத்து குறைகளை கேட்க உதவியாக 24வது வார்டு கவுன்சிலர் என்ற வாட்ஸ்அப் குரூப்பை நிறுவி தொடர்ந்து நிர்வகித்து வருகிறேன். இதில், பதியப்படும் குறைகளை 24 மணி முதல் 48 மணி நேரத்திற்குள் நிறைவேற்றி தருகிறேன்.
 • தொடர்ந்து புத்தூர் அக்ரஹாரம் மற்றும் பிரதான சாலைகள் ரூ.1 கோடி மதிப்பில் புதிதாக அமைத்தது,
 •  ரூ.55 இலட்சம் மதிப்பில் இராமலிங்க நகர் 5வது மெயின்ரோட்டில் சாலை அமைத்தது,
 •  மாநகராட்சி கூட்டங்களில் தவறாமல் பங்கேற்று கோரிக்கைகளை எடுத்துக்கூறி விடுப்பட்ட பணிகளை தொடர முயற்சி மேற்கொண்டு வருகிறேன்.

சொந்த செலவில் தனி செயலாளர்

 •  மேலும், சிவாநகர், இராஜரத்தினம் பிள்ளை ரோடு, கனரா வங்கி குடியிருப்பு, சிண்டிகேட் வங்கி குடியிருப்பு உள்ளிட்ட பகுதிகளில் அனைத்து சாலைகள் மற்றும் திறந்த வெளி சாக்கடை முழுமையாக அமைத்து கொடுத்துள்ளேன்.
 • வாரத்தில் 5 நாட்கள் மக்களை நேரடியாக சந்திக்கிறேன். விடுப்பட்ட நேரங்களில் மக்கள் குறைகளை நேரடியாக கேட்டறிந்து எனக்கு தகவல் கிடைக்கும் வகையில் ஒரு முழுமையான செயலாளரை சொந்த செலவில் சம்பளம் கொடுத்து வைத்துள்ளேன்.

அமைச்சர், மேயர் ஆதரவில்…

125 குடியிருப்புகள் கொண்ட லோட்டஸ் காலனி மக்களின் நீண்ட நாள் கோரிக்கைகளை அமைச்சர் கே.என்.நேருவின் கவனத்திற்கு கொண்டு சென்று மேயர் அன்பழகனின் வழிகாட்டுதலின்படி, அவர்களுக்கான தெரு விளக்கு, சாலை, குடிநீர், பாதாள சாக்கடை , தெற்கு முத்துராஜா தெருவில் ரூ.50 லட்சம் மதிப்பில் பொது கழிப்பிடம் ஆகிய பணிகள் அனைத்தும் முடியும் தருவாயில் உள்ளது என்றும் தெரிவித்தார். u சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து புதிய நியாயவிலைக்கடை, ரூ.68 இலட்சம் மதிப்பில் புதிய முன்மாதிரி கட்டிடமாக அங்கன்வாடி மையம் அமைக்க ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.

எம்.பி. திருநாவுக்கரசர் நிதியுதவியில்…

 •  எம்.பி. திருநாவுக்கரசர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து தலா ரூ.3 இலட்சம் மதிப்பில் 3 இடங்களில் போர்வெல் உடன் கூடிய சின்டெக்ஸ் குடிநீர் தொட்டி அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
 • மேலும் தெற்கு ராமலிங்க நகர் மசூதி அருகில் கனரா பேங்க் காலனி 4 ரோடு சந்திப்பு பகுதி மற்றும் ராமலிங்க நகர் மேற்கு விஸ்தரிப்பு சாலை சந்திப்பு என 3 இடங்களில் தலா ரூ-8 லட்சம் என 24 லட்சம் மதிப்பில் உயர்கோபுர மின்விளக்கு ஆகியவை அமைத்து தந்துள்ளேன்.

தூய்மை பணியாளர்களுக்கு கவுரவம்

தூய்மை பணியாளர்களை ஊக்குவிக்கும் விதமாகவும், மற்றவர்கள் அவர்களை மனித நேயத்துடன் அணுகும் வகையிலும் காமராஜர் பிறந்தநாள், சமத்துவ பொங்கல், தீபாவளி, கிறிஸ்துமஸ் போன்ற பண்டிகைகளின் போது விருந்து வழங்கி புத்தாடை வழங்கினேன். மேலும், அவர்களுக்கு சொந்த செலவில் சீருடை வழங்குகிறேன். தனிப்பட்ட முறையில் சிறு,குறு தொழில் தொடங்குபவர்களுக்கு என்னால் ஆன உதவிகளை செய்து வருகிறேன்.

கல்வி வளர்ச்சிக்காக மினி நூலகம்

சிவா நகர் பொது பூங்காவில் தனியார் கட்டடத்தில் இயங்கிவரும் நூலகத்திற்கு எல்.கே.ஜி முதல் ஐஏஎஸ் வரை படிக்கும் மாணவர்களுக்கு பயன்படும் வகையில் நூல்களை சொந்த செலவில் வழங்கியுள்ளேன்.

மக்கள் நலப்பணி சிறக்க ஒத்துழைப்பு

கோரிக்கைகளை கேட்ட உடன், கனிவுடன் உதவி செய்யும் அமைச்சர் கே.என்.நேரு, எம்.பி.திருநாவுக்கரசர், மேயர் அன்பழகன், மாநகராட்சி கமிஷனர் வைத்திநாதன், கோட்டத்தலைவர் விஜயலெட்சுமி கண்ணன் ஆகியோரின் ஒத்துழைப்புடன் எனது மக்கள் நலப்பணி சிறப்பாக தொடர்ந்து வருகிறது. வருகின்ற 2024ம் ஆண்டிற்குள் வார்டு மக்களின் அனைத்து குறைகளையும் நிவர்த்தி செய்வேன் என்று உறுதியாக நம்புகிறேன்.

மாநகரின் சிறந்த கவுன்சிலர்

ஓராண்டு பதவி முடிவடைந்த பின் திருச்சி பத்திரிக்கையாளர்கள் கூட்டமைப்பின் சார்பில் மாநகரின் 2வது சிறந்த கவுன்சிலர் என்ற விருது கிடைத்தது எனது பணியை மேலும் சிறப்பாக மேற்கொள்ள உந்துதலாக அமைந்து உள்ளது என தெரிவித்தார்.

10 ஆயிரம் பேருக்கு அன்னதானம்

திருச்சி புத்தூர் பகுதியில் உள்ள குழுமாயி அம்மன் கோவில் குட்டிகுடித் திருவிழா உலக புகழ்பெற்றது. கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற இவ்விழாவில் அரசு அதிகாரிகளின் ஒத்துழைப்போடு, அனைத்துவிதமான முன்னேற்பாடுகள் செய்து தரப்பட்டது. மேலும் பல்வேறு அமைப்புகள் மூலம் சுமார் 10 ஆயிரம் பேருக்கான அன்னதான செலவு களை ஏற்றுக் கொண்டு திறம்பட விழாவை நடத்தி ஆன்மீக பெருமக்களின் மத்தியில் பாராட்டை பெற்றுள்ளார்.

உதவிபெற்ற ராஜேந்திரன் (எ) ரஜினி கூறும்போது, காலில் பாதிப்படைந்து எவ்வித வேலைக்கும் செல்லமுடியாத நிலையில் எனது குடும்பத்தின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற கவுன்சிலர் அம்மாவிடம் உதவி கேட்டிருந்தேன். உடனடியாக எனது குடும்ப வருமானத்துக்கு உதவும் வகையில் இஸ்திரி பெட்டி மற்றும் வண்டியை அவரது சொந்த செலவில் வழங்கினார்.

மேலும் எங்களது தெரசாள்புரம் பகுதிக்கு தேவைப்படும் அனைத்து அடிப்படை தேவைகளையும் செய்து கொடுத்துள்ளார். என் வாழ்நாளில் எங்கள் பகுதியில் காவிரி குடிநீர் கொண்டுவந்தது கவுன்சி லர் அம்மாவின் சாதனையை என்றும் நினைவில் வைத்திருக்கும்.

24ம் வார்டை சேர்ந்த தூய்மை பணியாளர் பத்மினி கூறுகையில்,

எங்களை மிகவும் மதிப்புடனும், மனிதாபிமானத் துடனும் அணுகும் கவுன்சிலர் கிடைத்தது மகிழ்ச்சியாக உள்ளது. பண்டிகை நாட்களில் புது துணி மற்றும் இனிப்புகள் மற்றும் சொந்த செலவில் சீருடை, கையுறை ஆகியவை வழங்குவார்கள்.

– சந்திரமோகன். நிஷா

Furry genius pet hospital

Leave A Reply

Your email address will not be published.