குவாரி அனுமதி சீட்டில் தீக்குச்சியினால் அழித்து பல முறை பயன்படுத்தி நூதன மோசடி ! தடை விதித்த கனிம வளம்! வீடியோ

0

ராஜா தாணி அருகே உள்ள பழைய கோட்டை பகுதியில் உள்ள மண் குவாரி செயல்பட தடை  குவாரி உரிமையாளர் வினோத்க்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ்

தேனி மாவட்டம்,  கணிம வளங்கள் அள்ள ஒரு முறை பயன்படுத்தும் நடை அனுமதி சீட்டை தீயில் காட்டி நூதனமாக பல முறை பயன்படுத்தி மோசடி செய்யும் குவாரி உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சி தலைவர் ஷஜுவினாவிடம் புகார் தெரிவிக்கப்பட்டது.

வீடியோ

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி தாலுகா, ராஜதானி வருவாய் கிராமத்தில் பழைய கோட்டை கிராமத்தில் பெரியகுளத்தை சேர்ந்த வினோத் என்பவருக்கு சொந்தமான குவாரி செயல்பட்டு வந்தது. இந்த குவாரியில் மண் அள்ளுவதற்காக வழங்கிய அனுமதி நடை சீட்டை,

பலமுறை பயன்படுத்தப்படுவதாக குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டது.மேலும் கனிமவளத்துறையினரால் வழங்கப்பட்ட அனுமதி நடை சீட்டை மண் அள்ளி கொண்டு செல்லும் டிப்பர் லாரிகளுக்கு வழங்கப் படுகிறது.

இந்து எழுச்சி முன்னனி புகார்
இந்து எழுச்சி முன்னனி புகார்

இந்த அனுமதி நடை சீட்டை மீண்டும் குவாரி நடத்துபவர், நடை சீட்டில் எழுதப்பட்ட எழுத்துக்களை தீக்குச்சியினால் அழித்து மீண்டும் அதே சீட்டை பயன்படுத்தும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

மேலும் இந்த நூதன முறையை பயன்படுத்தி மாவட்ட நிர்வாகம் வழங்கிய இடத்தில் மண் அள்ளாமல் தெப்பம்பட்டி, பாலக்கோம்பை, ஜக்கம்மாள் பட்டி, கணேசபுரம், ஜி. உசிலம்பட்டி ஆகிய பகுதிகளில் கனிமங்களை அதிகாரிகளுக்கு தெரியாமலேயே திருடி சென்றனர்.

வீடியோ 

இதனால் அரசுக்கு பல லட்சம் ரூபாய் நஷ்டம் அடைவது மட்டுமின்றி வருங்கால சமுதாயத்தினருக்கு தண்ணீர் சேமித்து வைக்க மணல், செம்மண் இல்லாமல் போவதால் குடிநீர் பற்றாக்குறையும்,  விவசாயம் கேள்வி குறி ஆகும் அவலம் ஏற்படும் அவலம் நீடிக்கிறது.

எனவே மாவட்ட நிர்வாகம் தவறு செய்த குவாரிக்காரர் மீதும் துணை போன அதிகாரிகள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து எழுச்சி முன்னணி சார்பில் புகார் மனுவும்  கோரிக்கை விடுத்தனர்.

இதனைத் தொடர்ந்து ராஜதானி அருகே உள்ள பழைய கோட்டை பகுதியில்  செயல்பட்ட வினோத் என்பவரின் மண் குவாரி செயல்பட தடை விதிக்கப்பட்டது . மேலும் வினோத் என்பவருக்கு விளக்கம் கேட்டு கணிம வளத்துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

ஜெ.ஜெ.

அங்குசம் இதழ் உங்கள் இல்லம் தேடிவர..

Leave A Reply

Your email address will not be published.