’த்ரிகண்டா’ பட விழாவில் திரியைப் பற்ற வைத்த கேபிள் சங்கர்!
எஸ்.வி.எம்.ஸ்டுடியோஸ் பேனரில் ராதிகா ஸ்ரீனிவாஸ் தயாரிப்பில் மணி தெல்லகுட்டி டைரக்ஷனில் உருவாகி, 2026 ஜனவரியில் வெளிவரப் போகும் படம் ‘த்ரிகண்டா’. மகேந்திரன் ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தின் ஹீரோயின்களாக ஷ்ரத்தா தாஸ், ஷாகிதி அவான்சா நடித்துள்ளனர். மற்ற கேரக்டர்களில் கல்லூரி வினோத், ஹர்ஷவர்த்தன், ராமேஷ்வர் ஆகியோர் நடித்துள்ளனர். ஷாஜித் இசையமைத்துள்ளார்.
‘த்ரிகண்டா’வின் டிரெய்லர் வெளியீட்டு விழா டிச.24-ஆம் தேதி சென்னை பிரசாத் லேப் தியேட்டரில் நடந்தது. இதில் படக்குழுவினரை வாழ்த்துவதற்காக டைரக்டர்கள் கேபிள் சங்கர், ஹாரூண் ஆகியோர் வந்திருந்தனர்.
இதில் பேசியவர்கள்…
தயாரிப்பாளர் ஸ்ரீனிவாஸ்,
“தெலுங்குல மூணு படம் எடுத்துருக்கேன். தமிழில் இதான் முதல் படம். இப்படத்தை ஆரம்பிக்கும் போதே நல்லவர்கள் பலர் இணைந்தனர். நல்ல கதையை படம் எடுத்தால் மக்கள் நிச்சயம் ஆதரிப்பார்கள் என்ற நம்பிக்கையில் டைரக்டர் மணியின் இந்தக் கதையை படம் எடுத்துள்ளேன். இந்த வருசத்தில் நிறைய சின்ன பட்ஜெட் படங்கள் நல்ல வசூலைக்கொண்டு வந்தது. எங்களின் படமும் ஜெயிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது”.
டைரக்டர் மணி தெல்லகுட்டி,
“இந்தப் படத்தை எடுக்க சென்னையில் முழு ஆதரவாக இருந்தவர் படத்தின் ஹீரோ மகேந்திரன் தான். குமரிக்கண்டம் பகுதியில் நடந்த கதையில் கற்பனை கலந்து எடுத்துருக்கோம். படத்தின் டைட்டிலுக்கான காரணம், படம் பார்த்தால் உங்களுக்குப் புரியும்”.
ஹீரோ மகேந்திரன்,
“இந்தப் படம் எனக்கு மிகப்பெரிய அனுபவம். ‘மாஸ்டர்’ படம் தெலுங்கிலும் எனக்கு நல்ல அறிமுகம் கொடுத்தது. அதனால் தான் தெலுங்கு தயாரிப்பாளர் என்னை நம்பி இந்தப் படத்தை எடுத்துள்ளார். சினிமா எனக்கு நிறைய கொடுத்திருக்கிறது”.
ஹீரோயின் சாஹிதி அவான்ஷா,
“பவர்ஃபுல் மித்தாலஜி, ஆக்ஷன், அற்புதமான விஷுவல் ட்ரீட் என எல்லாம் கலந்து பிரம்மாண்டமாக படம் வந்துள்ளது”.
டைரக்டர் ஹாரூண்,
“2026 தமிழ் சினிமாவுக்கு நல்ல வருடமாக இருக்கும். நல்ல கதைகள் வரும், கண்டிப்பாக ஜெயிக்கும். என்ன ஒரு பிரச்சனைன்னா க்யூப் கட்டணத்தைப் பற்றி யாருமே வாய் திறக்கமறுக்கிறார்கள்”.
டைரக்டர் கேபிள் சங்கர்,
“ஏதோ சின்ன பட்ஜெட் படமா இருக்கும்னு நினைச்சேன். ஆனா டிரெய்லரைப் பார்த்ததும் மிரண்டுட்டேன். கமர்சியல் படத்துக்குரிய எல்லா அம்சமும் த்ரிகண்டாவில் இருக்கும்னு டிரெய்லரைப் பார்த்தாலே தெரியுது. இந்த 2025-ல் ஏகப்பட்ட சிறு முதலீட்டுப் படங்கள் ஜெயித்து தயாரிப்பாளர்களுக்கு லாபம் கொடுத்திருக்கு. இப்ப ரிலீசாகியிருக்கிற ‘சிறை’ படம் கூட சின்ன பட்ஜெட் படம் தான். ஆனால் படத்தின் அழுத்தமான கதையால நல்ல விலைக்குப் போயுள்ளது. தியேட்டர் ஓனர் திருப்பூர் சுப்பிரமணியன் 2025-ல வந்த படங்களில் நாலஞ்சு தான் ஓடிருக்கு. நிறைய ஹீரோக்கள் படம் இல்லாமல் வீட்டில் சும்ம உட்கார்ந்திருக்கிறார்கள்னு பொய் சொல்லிக்கிட்டு திரியுறார். அப்படி எந்த ஹீரோவும் இல்ல. எல்லார் கையிலும் நாலஞ்சு படங்கள் இருக்கத்தான் செய்யுது. எல்லா வெள்ளிக்கிழமையும் ஜெயிலர் மாதிரி, காந்தாரா மாதிரி மெகா பட்ஜெட் படங்களை ரிலீஸ் பண்ண முடியுமா? சினிமா நல்லத்தான் இருக்கு” என 2025 டிசம்பரில் திரியைப் பற்ற வைத்துள்ளார் கேபிள் சங்கர்.
— ஆண்டவர்








Comments are closed, but trackbacks and pingbacks are open.