அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

அங்குசம் பார்வையில் ‘டிஎன் 2026- தங்கநட்சத்திரம்’

திருச்சியில் அடகு நகையை விற்க

தயாரிப்பு : ‘கண்ணன் ரவி குரூப்’ கண்ணன் ரவி, இணைத் தயாரிப்பு : தீபக் ரவி, கதை-வசனம் : தம்பி ராமையா, திரைக்கதை-இயக்கம் : உமாபதி ராமையா, ஆர்ட்டிஸ்ட் : நட்டி[எ] நட்ராஜ், தம்பி ராமையா, எம்.எஸ்.பாஸ்கர், இளவரசு, ஷ்ரித்தா ராவ், சாந்தினி தமிழரசன், யாஷிகா ஆனந்த், விஜி சந்திரசேகர், ஜாவா சுந்தரேசன், ஸ்ரீஜா,  ரெடின் கிங்ஸ்லி, இந்திரஜா. ஒளிப்பதிவு : பி.ஜி.முத்தையா, இசை : தர்புகா சிவா, எடிட்டிங் : அரல் ஆர்.தங்கம், ஆர்ட் டைரக்டர் : என்.கே.நகுல், ஸ்டண்ட் : மகேஷ் மேத்யூ, தயாரிப்புத் தலைமை : ஸ்ரீநாத் விஸ்வநாதன், காஸ்ட்யூம் டிசைனர்: நவா ராம்போ ராஜ்குமார், பி.ஆர்.ஓ. : சதீஷ் & சிவா [ எய்ம்]

தமிழ் சினிமாவில் எம்.ஜி.ஆர். கொடிக்கட்டிப் பறந்து கொண்டிருந்த காலத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார் குல்கந்த் குமார்[ நட்டி]. தமிழைக் கொத்திக்குதறி இவர் பேசுகிறாராம். அதனால் தமிழரே இல்லாத இவரை தமிழர்களுக்கு ரொம்பவும் பிடித்துப் போகிறதாம் [ சூப்பர் ஸ்டார் ரஜினியை இமிடேட் பண்ணியுள்ளார் கதாசிரியர் தம்பி ராமையா என்பது அப்பட்டமாகத் தெரிகிறது].

இந்த வார JANUARY - 28 அங்குசம் இதழில்…2026 ANGUSAM WEEKLY BOOK

டிஎன் 2026எம்.ஜி.ஆருக்கு அடுத்து குல்கந்த் குமார் தான் என்கிறார்கள் அவரது ரசிகர்கள். இப்படிப்பட குல்கந்தை வைத்து படம் எடுக்கிறார் ஜமீன்வம்சத்தின்  மன்றாடியார் [ தம்பி ராமையா]. சினிமாவில் கொடிகட்டப் பறக்கும் குல்கந்தை கட்சி ஆரம்பிக்க வைக்கிறார் மன்றாடியார். “2026-ல்  நான் தான் முதலமைச்சர்” என ஆவேசமாக கர்ஜிக்கிறார் குல்கந்த் குமார். பொண்டாட்டியை டைவர்ஸ் பண்ண விரும்புகிறார்[ நல்லா கவனிங்க, இவரை பொண்டாட்டி டைவர்ஸ் பண்ணலயாம், இவர் தான் பொண்டாட்டிய டைவர்ஸ் பண்ண விரும்புகிறாராம்].

எம்.ஜி.ஆருடன் விஜய்யை ஒப்பிட்டு அதுல ரஜினி, கமல்ஹாசன், சிவக்குமார், முத்துராமன், ஜெய்சங்கர் [ ஏன்னா குல்கந்த் குமார் அந்தக் காலத்து ஹீரோவாக காட்டியிருப்பதால] போன்ற ஹீரோக்களையெல்லாம் போட்டு கூட்டாஞ் சோறு கிண்டி, பாமரர்களிடம்  நல்ல விலைக்கு சேல்ஸ் பண்ணிரலாம்னு  கணக்குப் போட்டு ‘டிஎன் 2026’ என்ற லேபிளை ஒட்டி கல்லா கட்ட களத்தில் இறங்கியிருக்கிறார்கள் தயாரிப்பாளர் கண்ணன் ரவியும் கதை-வசனம் எழுதிய தம்பி ராமையாவும். கல்லா நிரம்பும்…ஆனால்…

2026 யாவரும் கேளீர் ஏப்ரல் மாத இதழ்

டிஎன் 2026“நான் அடிக்குற மாதிரி அடிக்குறேன். நீ அழுவுற மாதிரி நடி”ங்கிற கதையா..”நான் தடவுற மாதிரி இல்ல, ஒரிஜினலாவே தடவுறேன். ஆனா நீ வலிக்கிற மாதிரி நடிக்கணும்”னு விஜய்யிடம் பேசிட்டுத் தான் வந்திருக்காரு தம்பி ராமையா. ரஜினி காதலித்து கல்யாணம் பண்ணிய ஐயர் ஆத்துப் பெண் லதாவாக ஷ்ரித்தா ராவ், கமல் ராஜ்யசபா எம்.பி.யானது, ஆளும் கட்சியே குல்கந்திடம் [ விஜய்] பேரம் பேசுவது என திட்டமிட்டு விஜய்க்கு சொம்பு தூக்கியிருக்கிறார்கள் தம்பி ராமையா, உமாபதி ராமையா, நட்டி கூட்டணி.

அதே போல் எம்.ஜி.ஆர்.மட்டும் தான் பரிசுத்த பரமபிதா என்பதை பதிவு செய்து அதிர்ச்சியளித்துள்ளது இந்தக் கூட்டணி. இதைவிடக் கொடுமை என்ன்னா.. விஜய் ஒரு ஆகப்பெரிய தற்குறி என்பதை  இந்தியாவே  அறிந்து சந்தி சிரிக்குது. ஆனா தம்பி ராமையாவோ, தமிழ்நாட்டின் எழுபது ஆண்டுகால அரசியல் நிலவரம், மக்களின்  பொருளாதார நிலவரம்,வாழ்வாதாரப் பிரச்சனை இதெல்லாம் விஜய்யின் மூளைக்குள் பதிந்து போயிருப்பதாக ஒரு சீனில் குல்கந்த் குமார் மூலம் வசனம் பேச வைத்து நன்றாகவே சோப் போட்டுள்ளார். போனாப் போகுதுன்னு ஒண்ணு ரெண்டு சீனில் விஜய்யை லைட்டாச் சீண்டியிருக்கிறார்கள். ஆனா இதுவும் ஒருவகை சொறிதலே என்பது எல்லாருக்கும் தெரியும்.

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

குல்கந்தாக நட்டியும் அவரது அல்லக்கைகளாக தம்பி ராமையா, இளவரசு, எம்.எஸ்.பாஸ்கர், நடிகை தையா ஸ்ரீ[ த்ரிஷா]யாக யாஷிகா ஆனந்த், ஷ்ரித்தாவின் அம்மாவாக விஜி சந்திரசேகர் ஆகியோர் உள்ளனர். ஹீரோயின் ஷ்ரித்தாவுக்கு மொத்தமே பத்து சீன்கள் தான். அதுக்கு மேல அவர் வேஸ்ட்டுன்னு டைரக்டர் உமாபதி ராமையா  நினைச்சுட்டாரு   போல.

டிஎன் 2026இந்த மாதிரியான எண்டெர்டெய்ன்மெண்டுக்கு க்யாரண்டியான அரசியல் நையாண்டி சினிமாக்களில் லாஜிக்கையோ, சீன்களின் பின்னணியையோ ஆழ்ந்து, ஆராய்ந்து பார்க்கக் கூடாது தான். ஆனால் விஜய் என்னமோ மகா யோக்கியன் மாதிரியும் அவ[னை]ரைச் சுற்றியிருப்பவர்கள் எல்லோருமே அயோக்கியர்கள், அதனால் தான் அரசியலைவிட்டு ஒதுங்கி, வெளிநாட்டுக்கு சிகிச்சை பெறப் போகிறார் என படத்தை முடித்துள்ளதைத் தான் நம்மால் 100% ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

எம்ஜிஆர் காலத்து ஹீரோ குல்கந்த் குமாருக்கு ( அதாவது விஜய்க்கு) இந்த 2026 லயும் 50 வயசு தானா தம்பி ராமையா அண்ணே? உங்கள் கற்பனைய என்ன சொல்றது?

இந்த ‘டிஎன் 2026’ ரிலீசான அன்னைக்குத் தான், 200 கோடி சம்பளத்தைவிட்டுட்டு மக்களுக்காக அரசியலுக்கு வந்திருப்பதாக, எல்லா வலிகளையும் வேதனைகளையும் தாங்கிக்கிட்டு அரசியலுக்கு வந்திருப்பதாக வெட்டி வீராப்பு பேசி வரும் தவெக விஜய்யின் ‘ஜனநாயகன்’ முழுப்படமும் நெட்டில் ரிலீசாகி சந்தி சிரிக்குது.

அங்குசம் பார்வையில் ‘டிஎன் 2026- தங்கநட்சத்திரம்’ 55/100

—   ஆண்டவர்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.