அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

ரூ.7 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் பறிமுதல் ! 2 நபர்கள் கைது!

திருச்சியில் அடகு நகையை விற்க

திருச்சி மாநகர காவல் ஆணையர் ந.காமினி,இ.கா.ப., பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் எதிர்கால நலனை பாதுகாக்கும் பொருட்டு கஞ்சா மற்றும் குட்கா போன்ற அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்களை விற்பனை செய்யும் சமூகவிரோதிகளை கண்டறிந்து, அவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், மாநகர காவல் துணை ஆணையர்கள், உதவி ஆணையர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்கியுள்ளார்கள்.

புகையிலை பொருட்கள் பறிமுதல்25.11.2025-ந்தேதி, நிலைய காந்திமார்க்கெட் காவல் எல்லைக்குட்பட்ட தஞ்சாவூர்ரோடு, அருள்மிகு கைலாயநாதர் ஆலயம் அருகில் வாடகைக்கு வீடு எடுத்து அதனை குடோனோக பயன்படுத்தி, இளைஞர்களின் எதிர்காலத்தை சீரழிக்கும் குட்கா பொருட்கள் விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக கிடைத்த ரகசிய தகவலையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காந்திமார்க்கெட் காவல் சரக உதவி ஆணையர், காந்திமார்க்கெட் காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் ஆளிநர்கள், மேற்படி வீட்டில் இருந்த வெளி மாநிலத்தை சேர்ந்த 2 நபர்களை பிடித்து விசாரணை செய்ததில், அவர்கள் கர்நாடாக மாநிலத்தை சேர்ந்த அஜித்குமார் 21/25 த.பெ.தேவராம் மற்றும் மாநிலத்தை ராஜஸ்தான் த.பெ.பால்கிஷன்சர்மா சேர்ந்த ராகேஷ்சர்மா 6T60T தெரியவந்தது. மேற்படி 25/25 இருவரும் வெளிமாநிலங்களில் இருந்து, அனீஸ் என்ற நபர் மூலம் குட்கா பொருள்களை கடத்தி வந்து, தஞ்சாவூர்ரோட்டில் உள்ள வீட்டில் பதுக்கி வைத்து திருச்சியில் விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.

இந்த வார JANUARY - 28 அங்குசம் இதழில்…2026 ANGUSAM WEEKLY BOOK

புகையிலை பொருட்கள் பறிமுதல்
புகையிலை பொருட்கள் பறிமுதல்

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

இவர்கள் 22 மூட்டைகளில் பதுக்கி வைத்திருந்த சுமார் 240 கிலோ ஹான்ஸ், 20 கிலோ கூல்லிப், 8 கிலோ விமல் என மொத்தம் சுமார் ரூ.7,00,000/- மதிப்புள்ள சுமார் 268 கிலோ குட்கா பொருள்களை பறிமுதல் செய்தும், மேற்படி எதிரிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, எதிரிகள் இருவரும் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டனர்.

Admission Enquiry Form

கமிஷனர் காமினி
கமிஷனர் காமினி

தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தவர்களை அதிரடியாக பிடித்த காந்திமார்க்கெட் காவல் ஆய்வாளர் மற்றும் காவல் ஆளிநர்களை மாநகர காவல் ஆணையர் ந.காமினி., இ.கா.ப.,  வெகுவாக பாராட்டினார்கள்.

மேலும் திருச்சி மாநகரத்தில், இளைஞர்களின் எதிர்கால வாழ்வை சீரழிக்கும் போதை பொருட்களான கஞ்சா, குட்கா பொருள்களை விற்பனை செய்யும் சமூகவிரோதிகள் மீது சட்டரீதியான நடவடிக்கைகள் தெடர்ந்து மேற்கொள்ளப்படும் என திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்களால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.