அங்குசம் சேனலில் இணைய

காவல்துறைக்கு புகழ் சேர்க்கும் வகையில் செயல்பட்ட 3 காவலர்களுக்கு போலீஸ் டிஐஜி பாராட்டு!

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

காவல்துறைக்கு புகழ் சேர்க்கும் வகையில் செயல்பட்ட 3 காவலர்களுக்கு

போலீஸ் டிஐஜி பாராட்டு!

Angusam Cinema - அங்குசம் சினிமா சேனல்

பெரும் குற்றம் நடைபெறுவதை தடுக்கும் வகையிலும் காவல்துறைக்கு புகழ் சேர்க்கும் வகையிலும் செயல்பட்ட மூன்று காவலர்களை தஞ்சாவூர் சரக காவல்துறை துணைத் தலைவர் பிரவேஷ் குமார் மீனா சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

ஜுலை 10-ம் தேதியன்று மாலை 5 மணியளவில், தஞ்சாவூர் மாவட்டம் மதுக்கூர் காவல்நிலையத்துக்குட்பட்ட ஓலைக்குன்னம் கிராமத்தில் ஒரு தென்னந்தோப்பில் சந்தேகத்திற்கிடமான வகையில் சிலர் தங்கியிருப்பதாக தனிப்பிரிவு தலைமை காவலர் செந்தில்குமார் கொடுத்த தகவலின் அடிப்படையில், பட்டுக்கோட்டை துணை காவல் கண்காணிப்பாளர் புகழேந்தி கணேஷ் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்றனர்.

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

அங்கே பதுங்கியிருந்த 10-க்கும் மேற்பட்ட நபர்கள், காவல்துறையினர் வருவதை அறிந்து, அங்கிருந்து தப்பியோடி விட்டனர். எனினும் மேற்படி இடத்தில் காவல்துறையினர் சோதனை செய்து அங்கிருந்த 7 கொடிய ஆயுதங்கள், 12 நாட்டு வெடிகுண்டுகள் மற்றும் 4 மோட்டார் சைக்கிள்களை கைப்பற்றினர். இதனால், நடைபெறவிருந்த பெரும் அசம்பாவிதம் தடுக்கப்பட்டது.

மேலும், மயிலாடுதுறை மாவட்டம் பெரம்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கடலாடி கிராமத்தில் ஜுலை 11-ம் தேதி தனது வீட்டு வாசலில் கோலம் போட்டுக்கொண்டிருந்த வயதாக மூதாட்டி ஒருவரின் தங்கச் சங்கிலியை இருசக்கர வாகனத்தில் வந்த இரு நபர்கள் பறித்துச் சென்றனர். சங்கிலித் திருடர்களை அப்பகுதி பொதுமக்கள் விரட்டிச் சென்றனர். அச்சமயம், நல்லாடை சோதனைச் சாவடி அலுவலாக இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த மயிலாடுதுறை காவல் நிலைய தலைமை காவலர் அன்பழகன், குத்தாலம் காவல் நிலைய முதல்நிலைக் காவலர் சுரேஷ் ஆகியோர் அவ்விரு திருடர்களையும் வெகுதூரம் விரட்டிச் சென்று, அவ்விருவரில் ஒரு நபரை பிடித்து, மூதாட்டியிடமிருந்து பறிக்கப்பட்ட தங்கச் சங்கிலியை கைப்பற்றினர்.

பெரும் குற்றம் நடைபெறாமல் தடுக்கும் வகையிலும், காவல்துறைக்கு புகழ் சேர்க்கும் வகையிலும் செயல்பட்ட மேற்படி மூன்று காவலர்களையும் தஞ்சாவூர் சரக போலீஸ் டிஐஜி பிரவேஷ் குமார் மீனா சான்றிதழ் வழங்கி, வெகுவாகப் பாராட்டினார்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

Leave A Reply

Your email address will not be published.