ரவுடி சாமியாரா ? -அரசியல் சாமியாரா ?- ஆன்மீக சாமியாரா ?- யார் இந்த திருச்சி சாமியார்?

0

ரவுடி சாமியாரா ? -அரசியல் சாமியாரா ?- ஆன்மீக சாமியாரா ?- யார் இந்த திருச்சி சாமியார்?

தமிழகத்தில் ஆங்காங்கே டுபாக்கூர் சாமியார்களின் ஆதிக்கம் பெருகத் தொடங்கி விட்டது. காரணம் சாதாரண அடித்தட்டு மக்கள் முதல் அரசியல்வாதிகள் வரை மாந்திரீகம் தேவைப்படுகிறது. அதனால் தன்மீது நம்பிக்கை இல்லாமல் இன்னொருவரை நாடி அவர்கள் சொல்லும் அனைத்தையும் செய்து அதனால் பலன் அடைந்து விட்டேன் என்று நினைத்துக்கொண்டு வாழ்ந்து தங்களை தாங்களே ஏமாற்றிக்கொள்கிறார்கள்.

ஸ்ரீ சத்யா புரோமோட்டர்ஸ்

இவற்றையெல்லாம் சாதகமாக்கிக் கொள்ளும் ஒரு சில  சாமியார்கள் தன்னிடம் வரும் பணம் செழித்த நபரை கையில் வைத்துக் கொண்டு அவர்களிடம்  சாமி செல்ல கார் வேண்டும், சாமி தங்க பங்களா வேண்டும், சாமிக்கு ஒரு கோயில் வேண்டும். என்று எவ்வளவு பணத்தை கறக்க வேண்டுமோ கரந்து விடுகின்றன.

அடித்தட்டு மக்களையும் அரசியல்வாதிகளையும் ஏமாற்றி வந்த சாமியார் கூட்டம் தற்போது ரவுடிகளையும் கையிலெடுத்து அவர்களை எப்போது என்கவுண்டர் பண்ண போறாங்க அதிலிருந்து எப்படி தப்பிக்க வைப்பது என்பது முதல் மாந்திரீகத்தின் மூலம் செய்து செய்கிறேன்.. என்கிற ஆடியோ வெளியாகி பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

அந்த வகையில் திருச்சி அல்லித்துறையை சேர்ந்த ஒரு சாமியாரின் 3 ஆடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

முதல் ஆடியோ:

அதில் நான் சாமி பேசுறேன் அல்லி துறையிலிருந்து என்று அந்த சாமியார் கூற மறுபக்கத்தில் உள்ள நபர் சாமி நல்லா இருக்கீங்களா ?  அந்த பி.டி.எப் வந்துடுச்சா, அதுல யார் யாரு இருக்கா யாரு பெயராக இருந்தாலும் கொஞ்சம் சொல்லிடுங்க ஐயா என்று கேட்க.. அதற்கு அந்த சாமியார் கொட்டப்பட்டு ஜெய் பெயர் வந்துடுச்சு, ஜெய் இப்பதான் பேசினாரு லிஸ்டில் இருந்து அவரு பெயர் எடுக்குறதுக்கு சொல்லியிருக்கேன். நேத்துக்கூட ஜெய் வீட்டுக்கு வந்தாபுள்ள ஜெய் லாம் பழக்கமா உங்களுக்கு என்று சாமி கேட்க அதற்கு அந்நபர் நல்ல பழக்கம் தான் அதைவிட பட்டறை சுரேஷ் நல்ல பழக்கம் என்று கூற அதற்கு சாமி அவர்கூட என்கிட்ட அப்பாயின்மென்ட் கேட்டுட்டு இருந்தாரு, அப்படினா நானே அழைச்சிட்டு வந்துடறேன் சாமி, அப்புறம் காட்டூர் தமிழ் கூட அப்பாயின்மென்ட் கேட்டு இருக்காரு என்ன பாக்கணும்னு. எல்லா அக்யூஸ்ட் தானே அதற்கு ஆமா சாமி, சீர்காழி சத்யாட்ட சொல்லிட்டீங்களா என்று சாமி கேட்க அதற்கு இன்னும் இல்லைங்கயா, அதற்கு சாமி இந்த நம்பரு கவர்மெண்ட் ட்ரேஸ்அவுட்ல இருக்கு, கால் ரெக்கார்டிங் பண்றாங்களாம் (ஐ.எஸ்) -ல இருந்து சொல்றாங்க, அதற்கு அந்த நபர் ஏன் சாமி என்று கேட்டதற்கு,

ஏன்னா நான் அடிக்கடி சி.எம் வீட்டுக்கு போயிட்டுவரேன் சி.எம் வீட்டில் இருந்து எனக்கு போன் வருது.. சென்னை போனப்ப தலைமைச் செயலகத்திலிருந்து தாசில்தார் வேலூர் கலெக்டர் அவராக பார்க்க வந்தாரு, எல்லா கவர்மெண்ட் ஆபீஸரும் வந்து பார்க்கிறாங்க. தலைமைச்செயலகம், மினிஸ்டர், சி.எம், பி.எஸ்.ஓ, எம்எல்ஏ எல்லாருமே வராங்க வந்து பேசுறாங்க போன் பண்றாங்க கலெக்டர் இருந்து எல்லாம்.. யார் இவரு அவருக்கு ஏன் இவங்க எல்லாம் போய் பார்க்கிறாங்க பேசுறாங்க போலீஸ் செக் பண்ணுது..

இரண்டாவது நான் சும்மா போனா பரவால்ல அமைச்சர்  சேகர்பாபு வீட்டுக்கு போயிருந்தேன் அவரு கூப்பிட்டு இருந்தாரு அப்பாயின்மென்ட் வாங்கியிருந்தாரு,  முன்னாடி ஒரு தாசில்தார் காரு பின்னாடி கலெக்டர் காரு அதற்குப்பின்னால் நான் போன காரு சைலன்ட் வச்ச காரு ஏன்னா தேசிய குழந்தைகள் நல வாரியத் தலைவரோட காரு பெண்கள் மற்றும் குழந்தைகள் நல வாரியம் இருக்குல்ல அவர் கார் என்கிட்ட கொடுத்துவிட்டார் என்னோட சேர்த்து பின்னாடி 6, 7 கார் என்று சேகர்பாபு வீட்டுக்கு போனோம், ரோடு சின்ன ரோடு புரசைவாக்கத்தில் இருக்கிற ஒரு வீட்டுக்கு போனோம் சைலண்ட் போட்டுக்கிட்டு ஏழு கார்ல போயி நான் இறங்க நானா எப்படி பாப்பாங்க என்னைய அவரே ஒரு கார்ல தான் போவாரு இவர் என்னடா ஏழு கார்ல வராரு பாக்குறாங்க. அன்னையிலிருந்து ஃபுல் செக்கப் பண்ண ஆரம்பிச்சுட்டாங்க..

4 bismi svs

இரண்டாவது  ஆடியோ:

 

ஐயா வணக்கம் யா நான் கார்த்தி பேசுறேன் அட்வகேட், நமஸ்காரம். ஒரு முக்கியமான வேலையா அவரு டிபன்ஸ் ல இருக்காரு அவர் பேசினார். திருச்சி தஞ்சாவூர் புதுக்கோட்டை டிஸ்ட்ரிக்ட் ல ஹிட் லிஸ்ட் ரெடி பண்ணி இருக்காங்களா அதுல உங்க ஆளு பேரும் இருக்கு அதற்கு எதிரே உள்ள நபர் யார் யார் பேருங்கயா சத்யா பேரு அதுல நிறைய பேர் சொன்னாங்க திருச்சில ஒருத்தரு அவர லிஸ்டில் இருந்து பெயர் எடுக்குறதுக்கு பேசி இருக்கேன் அதான் டெல்லியில் பேசினேன் அப்புறம் லோக்கல் கமிஷனர் பேசி லிஸ்ட்ல இருந்து எடுக்க சொல்லிட்டாங்க. எனக்கு பிடிஎஃப் அனுப்புறேன்னு சொல்லியிருக்காங்க யார் யார் என்று வெளியில யாரிட்டையும் சொல்லாதீங்க பேர் மட்டும் சொல்றேன் அது போலீஸ் டிபார்ட்மெண்ட் வர லிஸ்ட் அது சீக்ரெட் ஆன (ஜி.ஓ) அது ஏதும் அனுப்ப முடியுமா கேட்டுப் பார்க்கிறேன் இல்லனா உங்க ஆளுங்கள பத்திரமா இருக்கு சொல்லுங்க. அதற்கு என்ன பேர் அம்மாவாசை கண்டிப்பா வந்துடறேன்யா நம்ம கோயிலுக்கு வந்துடுறேன்..

 

மூன்றாவது ஆடியோ:

 

ஐயா நான் கார்த்தி பேசுறேன் ஐயா, அதற்கு சாமியார் நமஸ்காரம் சொல்லுங்க நான் டிபார்ட்மெண்ட்ல பேசினேன் ரொம்ப சீக்ரெட் ஆன விஷயம்னு என்னால பிடிஎஃப் கொடுக்க முடியாதுன்னு சொல்றாங்க. அதனால 42 அக்யூஸ்ட் இருக்காங்களாம் என்கவுண்டர் லிஸ்ட்ல 42 பேர் இருக்காங்களாம் திருச்சியில் 12 பேர் திருச்சி தஞ்சாவூர் கும்பகோணம் புதுக்கோட்டை இப்படின்னு 12 பேர் இருக்காங்களாம் பெயர் என்னால சொல்ல முடியாது சாமி அது சீக்ரெட் கோச்சுக்காதீங்க சாமி சொல்லிட்டாங்க. உங்களுக்கு தெரிஞ்சவங்க இருக்காங்கன்னு சொல்லுங்க அவங்கள எஸ்கேப் வேணாலும் பண்ணி விடுறேன் பிடிஎஃப் வெளியில் விட்டா எனக்கு பிரச்சனையாயிடும் சாமி. திருச்சி சரோண்டிங்ல 12 பேர் ஆல் ஓவர் தமிழ்நாட்டுல 42 பேர் என்கவுண்டர் லிஸ்ட்ல இருக்காங்க. சரிங்கய்யா ஏதாவது ஒன்னுனா நான் உங்களுக்கு பேசுறேன் என்று எதிரே உள்ள அவர் கூற, அதற்கு சாமி ஏதா இருந்தாலும் முன்கூட்டியே சொல்லிடுங்க கொஞ்சம் தலைமறைவாய் இருக்கிறதுதான் நல்லது எல்லாரையும் ஒரு ரெண்டு மூணு மாசம் இருக்க சொல்லுங்க கவனமாய் இருக்கிறதுனால தப்பு கிடையாதுல 2011 மேல இப்ப வரைக்கும் உள்ள கேஸ் எல்லாம் எடுக்க சொல்லி இருக்காங்களா 2011ல் இருந்து இருபது வரைக்கும் என்ன நான் கேஸ் போட்டு இருக்காங்களோ எல்லா லிஸ்ட்யும் கேட்டு இருக்காங்க போல..

காவல்துறை ஒருபுறம் சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க குற்றம் புரிபவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க முயற்சித்து வருகிறது ஆனால் மற்றொருபுறம் இதுபோன்ற சாமியார்கள் குற்றவாளிகளை தப்பிக்க வைப்பதற்கு என்னென்ன வழி இருக்கிறது என்று யோசித்து தப்பிக்க வழிவகை செய்து வருகின்றனர். தமிழகத்தில் உண்மையாகவே என்கவுண்டர் அடிக்க ரவுடிகளின் பட்டியல் தயார் செய்யப்பட்டு வருகிறதா அப்படி வந்தாலும் இது போன்ற சாமியார்கள் குறுக்கிட்டு காவலர்களின் கடமையை செய்யவிடாமல் தடுப்பது சட்டப் புறம்பான செயல்..

அதிலும் சிஎம், மினிஸ்டர், தலைமை செயலகம், டிபன்ஸ், ஐஎஸ் (உளவுத்துறை) என்ற எல்லா இடங்களிலும் எனக்கு ஆட்கள் இருக்கிறது என்று பேசும் அளவிற்கு சாமியார் வளர்ந்திருப்பது ஆடியோ கேட்போர் இடையே பெரும் அதிர்ச்சியை உண்டாக்கி வருகிறது.

திருச்சியில் ரவுடிகளை காப்பாற்றும் சாமியாராக வலம் வரும் நபர் யார் போலீசார் கண்டு களை எடுப்பார்களா பொறுத்திருந்து பார்ப்போம்.

ஜித்தன்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.