திருவாரூரில் முதலமைச்சர் வருகையால் 3 வது மாடியிலிருந்து விழுந்த திருச்சி இளைஞர்..
திருவாரூரில் முதலமைச்சர் வருகையால் 3 வது மாடியிலிருந்து விழுந்த திருச்சி இளைஞர்..
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று 6/7/2021 அன்று திருவாரூர் செல்வதற்காக சென்னையிலிருந்து திருச்சி வரையிலும் தனி விமானத்தின் மூலம் வருகை புரிந்து பின்னர் திருச்சியில் இருந்து திருவாரூர் வரை காரில் புறப்பட்டார்.
தேர்தல் முடிந்து முதல்வராக பொறுப்பேற்றதற்கு பின் முதல்முறையாக திருவாரூர் சென்று தமிழக முதல்வராக மக்களை சந்தித்தார்.
முதல்வர் வருகையை முன்னிட்டு திருவாரூர் பகுதியில் ஆரவாரமாக தொண்டர்கள் செயல்பட்டு வந்தனர்.
இந்நிலையில் திருவாரூர் சென்ற தமிழக முதல்வர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியான திருவாரூர் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் குழந்தைகள் மற்றும் மகப்பேறு சிறப்பு ஆஸ்பத்திரி கட்டிடத்தை திறந்து வைக்கின்ற நிகழ்வும் ஒன்று.
முதல்வர் இக்கட்டிடத்தை திறந்து வைப்பதனால் கட்டிடத்தை புதியது போன்று பலபலக்க வைக்குமாறு உள்ளூர் அரசியல் தலைகள் கான்ட்ராக்டர்களிடம் நெருக்கடி கொடுக்கவே திருச்சி தில்லைநகர் இரண்டாவது கிராஸ்ல் உள்ள ஒப்பந்தகாரர் ரியாஸ் மூலம் திருவாரூர் மருத்துவக் கல்லூரிக்கு பெயிண்ட் அடிக்க சென்றிருந்த திருச்சி மணச்சநல்லூர் தாலுக்கா சென்னகரை பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் மகன் சதீஷ்குமார் (வயது -20) என்பவர் சென்றிருந்தார்.
நேற்று 6/7/2021 காலை 7.40 க்கு மூன்றாவது மாடியில் பெயிண்ட் அடித்து கொண்டு இருந்தபோது (பாதுகாப்பு இல்லாத நிலையில் (safety belt இல்லை) கயிர் அறுந்து கிழே விழுந்து தலை அடிப்பட்டு உயிருக்கு மிகவும் ஆபத்தான நிலையில் திருவாரூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பின்பு முதல்வர் வருவதனால் சதீஷ்குமாரை அங்கு வைத்து மருத்துவம் பார்க்க வேண்டாம் என்று கட்சியின் மூத்த பொறுப்பாளர் கூறவே தற்போது தஞ்சாவூர் மினாட்சி மருத்துனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
–ஜித்தன்