‘டூரிஸ்ட் ஃபேமிலி’ ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ்!
அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவீன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்தில் சசிகுமார், சிம்ரன், யோகி பாபு ,மிதுன் ஜெய்சங்கர் ,கமலேஷ், எம். எஸ். பாஸ்கர், ரமேஷ் திலக், பக்ஸ் என்கிற பகவதி பெருமாள், இளங்கோ குமரவேல், ஸ்ரீஜா ரவி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

ஃபீல் குட் ஃபேமிலி என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இப்படத்தை மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் எம் ஆர். பி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் நாசரேத் பஸ்லியான்- மகேஷ் ராஜ் பஸ்லியான் , யுவராஜ் கணேசன் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.
படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கும் டைட்டில் விஷுவலும் கடந்த வாரம் ரிலீசானது.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
இப்போது படத்தில் இடம்பெற்ற ‘முகை மழை’ எனும் முதல் பாடலும் , பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்தப் பாடலை பாடலாசிரியர் மோகன் ராஜன் எழுத, இசையமைப்பாளர் ஷான் ரோல்டனும் பாடகி சைந்தவியும் இணைந்து பாடியிருக்கிறார்கள்.
— மதுரை மாறன்.