“சம்பளத்த ஒசத்த மாட்டேன்” -‘டூரிஸ்ட் ஃபேமிலி’ சக்சஸ் மீட்டில் சசிகுமார் க்யாரண்டி!

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

மே.01– ஆம் தேதி ரிலீஸ் ஆன டூரிஸ்ட் ஃபேமிலி படம் திரையரங்குகளை திருவிழாக்கோலமாக்கியுள்ளது. இதனால் இப்படத்தின் வெற்றி விழா படக்குழுவினர் கலந்துகொள்ள, பத்திரிகை ஊடக நண்பர்கள் முன்னிலையில், சென்னையில் மே.13- ஆம் தேதி கோலாகலமாக நடந்தது.

இந்நிகழ்வினில்….

Sri Kumaran Mini HAll Trichy

நடிகை சௌந்தர்யா, நடிகைகள் பக்ஸ், மாஸ்டர் கமலேஷ், மியூசிக் டைரக்டர் ஷான் ரோல்டன், எடிட்டர் பரத் விக்ரமன், பாடலாசிரியர் மோகன்ராஜ், திங்க் மியூசிக் சந்தோஷ் ஆகியோர் மகிழ்ச்சிப் பெருக்குடன் நன்றி சொல்லி பேசிய பிறகு….

*இயக்குநர் அபிஷன் ஜீவிந்*

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

“பத்திரிகை ஊடக நண்பர்களுக்கு நன்றி. உங்கள் பாரட்டால் தான் மக்கள் கூட்டம் கூட்டமாக திரையரங்குக்கு வந்துள்ளார்கள். என் ஃபேமிலியோடு படத்திற்கு போக எனக்கே டிக்கெட் கிடைக்கவில்லை. இப்படத்தை வெற்றிப்படமாக்கித் தந்த யுவராஜ் அண்ணா மகேஷ் அண்ணாவிற்கு நன்றி. சசி அண்ணா இந்தப்படத்தில் வருவது போல தான். உங்களுக்கே தெரியாது, நீங்கள் எனக்கு எவ்வளவு செய்துள்ளீர்கள் என்று. எல்லாவற்றிக்கும் நன்றி. சிம்ரன் மேம் உங்களுடன் வேலை பார்த்தது கனவு மாதிரி உள்ளது. இந்த வாய்ப்பைத் தந்ததுக்கு நன்றி. ஷான் ரோல்டன் அண்ணா எனக்கு ஆதரவாக இருந்ததற்கு நன்றி. என் குழுவினர்  அனைவருக்கும் நன்றி”

'டூரிஸ்ட் ஃபேமிலி' *தயாரிப்பாளர் மகேஷ் ராஜ் பசலியான்*

“மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் எம். ஆர்.பி. என்டர்டெயின்மென்ட் நிறுவனங்கள் மூலம் நல்ல படங்கள் தான் வருமென குட்நைட் பட விழாவில் சொல்லியிருந்தேன்.  அதே தான் இப்போதும் சொல்கிறேன். தொடர்ந்து நல்ல படங்கள் செய்வோம் நன்றி”.

 *சிம்ரன்*

“அபி கதை சொன்ன போதே இது சூப்பர் ஹிட் ஆகும் என்றேன். அப்போதே மகேஷிடம்  இந்தப்படம் செய்கிறேன் என்று சொன்னேன். நான் பல  வருடங்களாக இந்த துறையில் உள்ளேன். நீங்கள் தரும் ஆதரவு தான் இந்த வெற்றிக்கு காரணம். உங்களுக்கு நன்றி.

சிம்ரன்
சிம்ரன்

Flats in Trichy for Sale

சசிகுமார் சார் மிக அற்புதமான மனிதர். அற்புதமான இயக்குநர் அற்புதமான கோ ஸ்டார். மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது. 20 வருடம் கழித்து மீண்டும் என்னை உருவாக்கியுள்ளார்கள். என் குழுவினர் அனைவருக்கும் நன்றி”.

*சசிகுமார்*

“பத்திரிகையாளர்களாகிய நீங்கள் தந்த வெற்றி தான் இது. இந்த வெற்றியால் நீங்கள் சம்பளத்தை ஏத்தி விடுவீர்களா எனக்கேட்டீர்கள். கண்டிப்பாக என்னோட சம்பளத்தை ஒசத்த மாட்டேன். இதுக்கு நான் க்யாரண்டி. இந்தப்படம் நிறையப்பேரின் கனவை நனவாக்கியுள்ளது. நல்ல கதைகள் வைத்திருப்போருக்கு நம்பிக்கை தந்துள்ளது.  ஒரே மாதிரி படம் பண்ண வேணாம் டிஃபரண்ட் டிஃபரண்டா படம் பண்ணலாம், வேறு மாதிரி ஜானர் படம் பண்ணலாம் அப்படிங்கிற ஒரு நம்பிக்கையை, இந்த படம் கொடுத்திருக்குன்னு தான் நான் நினைக்கிறேன்.  ஃபேமிலி ஆடியன்ஸ் தியேட்டருக்கு வந்துகிட்டே இருக்காங்க. எனக்கு பல ஆண்டுகளுக்கு அப்புறம் இவ்வளவு பெரிய வெற்றி கிடைத்திருக்கிறது. இது என்னோட வெற்றியா நான் நினைக்கவில்லை. இந்த படம் வெற்றியால் ஒரு சசிகுமார் ஜெயிச்சுட்டான், ஒரு மில்லியன் டாலர் ஜெயிச்சிருச்சுன்னு நினைக்காதீங்க. புது தலைமுறை ஜெயித்துள்ளது.  தோல்வி அடைஞ்ச இயக்குனர்களுக்கு இப்படம் நம்பிக்கை கொடுத்திருக்கிறது.

சசிகுமார்
சசிகுமார்

நாம் வெற்றி பெற, முதலில் நாம் நம்ம தோல்வியை ஒத்துக்கணும். நான் தோல்வி அடைஞ்சிருக்கேன். என் தோல்வியை ஒவ்வொரு தடவையும் நான் ஒத்துக்கிட்டேன். இந்தப் படம் முதல் நாள் கலெக்ஷன் என்ன என்பது உங்க எல்லாருக்கும் தெரியும். தயாரிப்பாளர்கள் எல்லா நடிகர்கள்கிட்டயும்  உண்மைய சொல்லுங்க, எவ்வளவு ஓடி இருக்குன்னு சொல்லுங்க,  ஏன் மறைக்கறீங்க…  மறைக்காதீங்க எவ்வளவு ஓடி இருக்குன்னு சொன்னாதான் யாரும் சம்பளம் ஏத்த மாட்டாங்க.. அப்பதான் உண்மையா இருப்பாங்க. இந்தப்படம் முதல்  நாளை விட இப்போது தான் அதிக வசூல்.

தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

என்னுடைய ஹையஸ்ட் வசூல் சுந்தரபாண்டியனும் குட்டி புலியும்தான். அந்த இரண்டையும் விட வசூலில் இந்த டூரிஸ்ட் ஃபேமிலி தாண்டியுள்ளது. ரொம்ப சந்தோஷமா இருக்கு.  இனிவரும் எல்லோருக்கும் ஒரு நம்பிக்கை வர வேண்டும் என்பதால் தான் இதைச் சொல்கிறேன். இந்தப்படம் ஆரம்பிக்கும் போதே யுவராஜ்   ரொம்ப கான்ஃபிடென்ட்டா இருந்தார். என்னைவிட இப்படத்தின் மீது நம்பிக்கை வச்சது இந்த புரொடியூசர்ஸ் ரெண்டு பேரும்தான். அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்.நல்ல படம் தந்தால் மக்கள் தியேட்டருக்கு வரத் தயாராக உள்ளார்கள். இப்படத்தினை வெற்றிப்படமாக தந்த இயக்குநர் அபிக்கு வாழ்த்துக்கள். சிம்ரன் மேடமுக்கு நன்றி. இந்தப்படத்தை மக்களிடம் கொண்டு சென்ற தயாரிப்பாளருக்கு நன்றிகள்.  அனைவருக்கும் நன்றி”.

*தயாரிப்பாளர் யுவராஜ் கணேசன்*

“இப்படத்தை  பெரிய வெற்றிப்படமாக்கிய பத்திரிகை நண்பர்களுக்கும் மக்களுக்கும் இந்தப்படத்தை ஒப்புக்கொண்ட சசி சாருக்கும் நன்றி. இப்படத்தில் உழைத்த அனைவருக்கும் நன்றி”.

இரண்டு வாரங்களைக் கடந்தும் தியேட்டர்களில் ஹவுஸ் ஃபுல்லாக ஓடிக் கொண்டிருக்கிறது ‘டூரிஸ்ஃபேமிலி’.

 

—    மதுரை மாறன்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.