பாஜக எம்பியை கைது செய்யக்கோரி  ஆர்ப்பாட்டம்!

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

பாஜக எம்பியை கைது
செய்யக்கோரி  ஆர்ப்பாட்டம்!

நாட்டிற்கு பெருமை சேர்த்த மல்யுத்த வீராங்கனைகளை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கிய பாஜக எம்.பி. பிரிஜ் பூஷன் சரண்சிங்கை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி தஞ்சையில் ஐக்கிய விவசாய முன்னணி மற்றும் அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் திங்கள்கிழமை மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அங்குசம் இதழ்..

தஞ்சை ரயிலடி முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு விவசாய சங்கத்தின் மாநில துணைச் செயலாளர் டெல்லி பாபு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் சின்னை.பாண்டியன்,

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டக் குழு உறுப்பினர் வெ.சேவையா, சிபிஎம்எல் மக்கள் விடுதலை மாவட்டச் செயலாளர் இரா.அருணாச்சலம், ஏஐடியுசி மாநிலச் செயலாளர் ஆர்.தில்லைவனம், சிஐடியு மாநிலச் செயலாளர் சி.ஜெயபால், உலகத் தமிழர் பேரமைப்பின் துணைத் தலைவர் அயனாபுரம் முருகேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினர்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy


இந்த ஆர்ப்பாட்டத்தில், மக்கள் கலை இலக்கியக் கழக மாநில இணைப் பொதுச் செயலாளர் ராவணன், ஆதித் தமிழர் கட்சி மாவட்டச் செயலாளர் ரங்கராஜ், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள், கலைஞர்கள் சங்க நிர்வாகி களப்பிரான், எழுத்தாளர் சாம்பான், இடதுசாரிகள் பொதுமேடை ஒருங்கிணைப்பாளர் துரை.மதிவாணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

சர்வதேச மற்றும் காமன்வெல்த் போட்டிகளில் பங்கேற்று தங்கப் பதக்கங்கள் உள்ளிட்ட பல்வேறு பதக்கங்களை வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்த இந்திய மல்யுத்த வீராங்கனைகளை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கிய பாஜக எம்.பி.யும் அகில இந்திய மல்யுத்த சம்மேளன தலைவருமான பிரிஜ் பூஷன் சரண்சிங்கை உடனடியாக கைது செய்ய வேண்டும்,

அவர் உடனடியாக பதவி விலக வேண்டும், நீதிமன்ற வழகாட்டுதல் அடிப்படையில் அவர் தண்டிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தியும்,

டெல்லியில் போராடி வரும் வீராங்கனைகளின் போராட்டத்தை ஒடுக்க முயற்சிக்கும் காவல்துறையினரின் நடவடிக்கைகளைக் கண்டித்தும்,

மல்யுத்த வீராங்கனைகள் மீது பாலியல் வன்கொடுமை நிகழ்த்திய பாஜக எம்.பி. மீது நடவடிக்கை எடுக்காதது மற்றும் டெல்லியில் போராடிவரும் வீராங்கனைகளை சந்தித்து அவர்களது கோரிக்கைகளைக் கேட்காத பிரதமர் நரேந்திர மோடியைக் கண்டித்தும் ஆர்ப்பாட்டத்தில் கோசங்கள் எழுப்பப்பட்டன.

அங்குசம் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள...

Leave A Reply

Your email address will not be published.