தேனி அம்மச்சியாபுரத்தில் இந்திர விழாவை முன்னிட்டு பாரம்பரிய விளையாட்டு போட்டி ! வீடியோ !
தேனி அம்மச்சியாபுரத்தில் இந்திர விழாவை முன்னிட்டு பாரம்பரிய விளையாட்டு போட்டி
தேனி அம்மச்சியாபுரத்தில் இந்திர விழாவை முன்னிட்டு பாரம்பரிய விளையாட்டு போட்டிகள் கபடி, மல்யுத்த, சிலம்பம்,
மல்லர் கம்பம் ஏறுதல், இளவட்டக்கல் தூக்குதல் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றது. தேவேந்திர குல வேளாளர் உறவின் முறை மற்றும் தமிழ் பண்பாடு கலாச்சாரம் மற்றும் வரலாற்று ஆய்வு மையம் சார்பில் இந்திரவிழா நடத்தினர். அப்போது இந்திர விழா என்பது இந்திரனை சிறப்பிக்கும் வகையில் பழந்தமிழகத்தில் கொண்டாடப்பட்ட விழாவாகும், பசி, பிணி, பகை முதலியவற்றால் துன்பம் அடையாது இருத்தல் பொருட்டுத் தெய்வத்தைக் கருதிச் செய்யும் சாந்திப் பெருவிழாவே இந்திர விழாவாக கொண்டாடப்படுகிறது.
இந்தாண்டு முதல் முறையாக தேனி மாவட்டம் அம்மச்சியாபுரத்தில் இந்திர விழாவில் பாரம்பரிய விளையாட்டு தேனி அம்மச்சியாபுரத்தில் இந்திர விழாவை முன்னிட்டு பாரம்பரிய விளையாட்டு, கபடி, மல்யுத்த, சிலம்பம், மல்லர் கம்பம் ஏறுதல், இளவட்டக்கல் தூக்குதல் உள்ளிட்ட போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது