மதுரையில் தடம்புரண்ட ரயில் பெட்டிகள் ! மாற்று ரயிலில் அனுப்பி வைக்கப்பட்ட பயணிகள் !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

சென்னையிலிருந்து போடி செல்லவிருந்த  சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டியின் சக்கரம் தடம் புரண்டு விபத்துக்குள்ளான சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியது. மாற்று இரயில்கள் மூலம் பயணிகள் அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், சுமார் 1.30 மணி நேரத்தில் தடம்புரண்ட சக்கரம் சீரமைக்கப்பட்டது.

சென்னையிலிருந்து போடிக்கு வாரம்தோறும் செவ்வாய், வியாழன், சனி ஆகிய மூன்று நாட்கள் இயக்கப்படும்  சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயிலானது சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து நவம்பர்-01 இரவு புறப்பட்டு நவம்பர் – 02 காலை மதுரை ரயில் நிலையத்திற்கு  வந்தடைந்தது.

Srirangam MLA palaniyandi birthday

Madurai railway stationஇந்நிலையில் மதுரை ரயில்வே நிலையத்தில் 5-ஆவது நடைமேடையிலிருந்து இரயில் புறப்பட தயாரானபோது, திடீரென மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டியில் உள்ள சக்கரம் தடம்புரண்டது.

இதனையடுத்து அவசர அவசரமாக ரயிலானது நிறுத்தப்பட்டு ரயில் பைலட்டுகள் இறங்கிப் பார்த்தபோது, தண்டவாளத்தில் இருந்து சக்கரம் கீழே  தடம் புரண்டு இருப்பதை கண்டு உடனடியாக ரயில்வே அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர்.

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வேட்டியை மடித்துக்கட்டிக் கொண்டு களத்தில் இறங்கிவிடும் எம்.எல்.ஏ. !

இதனிடையே மாற்று ஏற்பாடாக போடி செல்லக்கூடிய பயணிகளை மாற்று ரயில் மூலமாக அனுப்பி வைத்தனர். ஒரு மணி நேரத்திற்கு மேலாக, ரயில் சக்கரம் தடம் புரண்டதை சரி செய்வதற்கான பணிகளை  அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு விசாரணை நடத்தினர்.

இதனைத் தொடர்ந்து ரயில்வே துறை சார்பில் தூக்கு இயந்திரமான ( ஜாக்கி)  இயந்திர மூலமாக தடம் புரண்ட பெட்டி தூக்கப்பட்டு ரயில் சக்கரமானது தண்டவாளத்தில் வைக்கப்பட்டது.

ஒரு மணி நேரம் 26 நிமிடங்களுக்கு பின்னர் தடம் புரண்ட ரயில் பெட்டி மட்டும் எடுத்துச் செல்லப்பட்டு மீதியுள்ள பெட்டிகளுடன் மீண்டும் ரயிலானது மதுரை ரயில்வே நிலையத்தில் யார்ட் பகுதியில் நிறுத்திவைக்கப்பட்டது.

இந்த ரயில் சக்கரம் தடம் புரண்டதால் சில ரயில்களின் தாமதத்திற்கு பின்பாக புறப்பட்டு சென்றது. மதுரை ரயில்வே நிலையத்தில் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இது தொடர்பாக ரயில்வே அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்திவருகிறார்கள். நாடு முழுவதிலும் அடுத்தடுத்து ரயில் விபத்துக்கள் நடைபெற்று வரும் நிலையில் மதுரை ரயில்வே நிலையத்தில் திடீரென ரயில் பெட்டியின் சக்கரம் தடம்புரண்டது சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

 

— ஷாகுல், படங்கள் : ஆனந்தன்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.