திருச்சி ஏர்போர்ட்டிலிருந்து வெளிநாடு பயணமா..? தொடரும் குற்றச்சாட்டுகள்..! பகுதி 3

பயணிகள் கவனத்திற்கு..!

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

திருச்சி ஏர்போர்ட்டிலிருந்து வெளிநாடு பயணமா..? தொடரும் குற்றச்சாட்டுகள்..! பகுதி 3

பயண ஏற்பாடு (Travel Agents), சுற்றுலா ஏற்பாடு (Tour Operatos), சரக்கு ஏற்றுமதி (Cargo Export & Import) மற்றும் இது தொடர்பான போக்குவரத்து (Transport), கிட்டங்கிகள் (Warehouse), குளிர்பதன கிடங்குகள் (Cold storage), பொருட்கள் மேலாண்மை மற்றும் பொருட்கள் இடப்பெயர்ச்சி (Logistics & Supply Chain) போன்ற வணிக வாய்ப்புகள் இரண்டாம்நிலை நகரங்களில் பெருகின. அதுமட்டுமன்றி பன்னாட்டு விமானப்பயணத்தின் தொடர்விளைவாக (Chain) உள்நாட்டு விமானப்பயணமும் அதிகரித்தது.

அஸ்வீன் சுவீட்ஸ் ஆர்டர் செய்ய..

இதன்காரணமாக, திருச்சிராப்பள்ளி, கோயம்புத்தூர், மங்களூரு, லக்னோ மற்றும் வாரணாசி போன்ற விமானநிலையங்கள் சுங்கத்
துறை வகை விமானநிலையங்கள் என்ற வகைபாட்டில் இருந்து, பன்னாட்டு விமானநிலையங்கள்
என்ற வகைப் பாட்டிற்கு தரம் உயர்த்தப்பட்டது. கிட்டத்தட்ட 35 வருடங்களாக சுங்கத்துறை விமான நிலையமாகவே புறக்கணிக்கப்பட்டு வந்த திருச்சிராப்பள்ளி விமானநிலையமும் பன்னாட்டு விமானநிலையமாக தரம் உயர்த்தப்பட்டது. இதற்கான அரசாணையை அக்டோபர் 2012ல் வெளியிட்டதும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அவர்களே.

அதேபோல் உள்நாட்டு வகை விமானநிலையங் களாக இருந்த, சண்டிகார், பாக்டோக்ரா, விசாகப் பட்டினம் மற்றும் மதுரை விமானநிலையங்கள் சுங்கத்துறை விமான நிலையங்களாக தரம் உயர்த்தப் பட்டன. இந்த அளவிற்கு நேர் மறை விளைவுகளை ஏற்படுத்திய இந்திய விமானத்துறையை அடுத்த பரிணாமத்திற்கு (Evolution) எடுத்துச் சென்ற அரசாணையானது குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் எதிர்மறை விளைவுகளைத் தந்தது.அது ECRSக்கு அதிகமாக சேவைக்கட்டணம் வசூலித்த சில இடைத்தரகர்கள் மட்டுமே!

அங்குசம் சேனல் வீடியோ பார்க்க...

ஏனெனில் அதிகமாகத் தேவைப்படும் விசிட் விசாவுக்கான ECRS (Emigration Check Required Suspension) நடைமுறைகள் முற்றிலும் நீக்கப்பட்டதாலும், அப்போது இந்திய வான்வழியை ஆக்கிரமிக்கத் தொடங்கியிருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், ஏர் ஏசியா, ஏர் அரேபியா போன்ற குறைந்த கட்டண விமானசேவை நிறுவனங்களாலும், இணையதள பயணச்சீட்டு முன்பதிவுகள் பரவலாக மக்களை சென்றடைந்திருந்தாலும், ஒரு பயண ஏற்பாட்டாளரின் (Travel Agents) உதவியோ ஆலோசனையோ பயணிகளுக்கு தேவைப்படாத சூழல் தொடங்கியது. இதனால் சில போலி மற்றும் நியாயமற்ற இடைத்தரகர்கள் வணிகம் பெரிதும் பாதிக்கப்பட்டது. அவர்கள் நியாயமாக வெளிப்படையாக வணிகம் செய்ய முன்வரவில்லை. அவர்கள் கிளப்பி விட்டதுதான் மேற்சொன்ன, “புது பாஸ்போர்ட்டா? விசிட் விசாவா? ECR பாஸ்போர்ட்டா? முதல்முறை வெளிநாட்டுப் பயணமா? திருச்சிராப்பள்ளி பன்னாட்டு விமானநிலையம் வழியாக பயணிக்கவேண்டாம்” என்பது. இதன்மூலம் பயணிகளிடையே ஒரு தேவையற்ற பதட்டத்தை ஏற்படுத்தி அவர்கள் நினைத்த, அவர்களுக்கு அதிகம் இலாபம் தரக்கூடிய விமானத்தில் பயணம் செய்ய நிர்பந்திக்கின்றனர்.

கிட்டத்தட்ட 11 வருடங்களுக்கு முந்தைய சூழலும் அப்படி அமைந்தது. எப்படியெனில், பொதுவாகவே திருச்சிராப்பள்ளி மட்டுமல்ல, பெரும்பாலான இந்திய விமானநிலையங்களில் உள்ள குடியேற்றப்பிரிவு (Immigration) அதிகாரிகள் பன்னாட்டு விமானப்பயணிகளுக்கு உரிய மரியாதை தருவதில்லை என்பது பொதுவான குற்றச்சாட்டு. மற்ற நாடுகளின் குடியேற்றப்பிரிவு அதிகாரிகளை ஒப்பிடுகையில் இவர்களது சேவைத்தரம் குறைவு என்பது உண்மையே. இந்தக் கருத்தானது விமானப்பயணிகளிடையே குடியேற்றப்பிரிவு பற்றிய ஒரு பொதுவான எதிர்மறை கருத்தை, பிம்பத்தை ஏற்படுத்தியிருந்தது. இது தங்களது கருத்தை பயணிகள் மனதில் பதியவைக்க அந்த போலி பயண ஏற்பாட்டாளர்கள் மற்றும் இடைத்தரகர்களுக்கு வசதியாய் இருந்துவிட்டது. அதுமட்டுமன்றி, அக்காலங்களில் பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்கள் இன்று போல் பெருமளவு பயன்பாட்டில் இல்லாததால், இந்த ECRS நடைமுறைகள் முற்றிலும் அழிக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டது பெருமளவு மக்களைச் சென்றடையவில்லை. இதுவும் அந்த போலி பயணஏற்பாட்டாளர்கள் மற்றும் இடைத்தரகர்களுக்கு வசதியாய் இருந்துவிட்டது.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

மேலும், இந்த அரசாணை வெளியிட்ட காலகட்டத்தில், திருச்சிராப்பள்ளியில் இருந்து கோழிக்கோடு வழியாக குவைத்திற்கு வழங்கப்பட்ட இந்தியன் ஏர்லைன்ஸின் இரண்டு வாராந்திர சேவைகளும் நிறுத்தப்பட்டது. இதனால் குவைத் பயணிகள் தங்களது பயணத்திற்கு ஏர்லங்கா விமானத்தை மட்டுமே சார்ந்திருக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகின்றனர். மேலும், இதேகாலகட்டத்தில் திருவனந்தபுரம் வழியாக ஷார்ஜாவுக்கு தினசரி சேவை வழங்கிவந்த இந்தியன் ஏர்லைன்ஸ் விமானமும் தனது சேவைகளை நிறுத்துகிறது. துபாய்க்கு நேரடி விமானசேவை தொடங்கப்பட்டாலும் ஆரம்பத்தில் அது வாரத்திற்கு மூன்று சேவைகள் மட்டுமே. இவ்வாறாக திருச்சிராப்பள்ளி மற்றும் வளைகுடா நாடுகளுக்கிடையேயான சேவையில் மிகப்பெரிய வெற்றிடம் (குறிப்பாக குவைத்) ஏற்படுகிறது. இன்றளவும் இந்த வெற்றிடம் பூர்த்தி செய்யப்பவில்லை.

வளைகுடா நிறுவனங்கள் திருச்சிராப்பள்ளி பன்னாட்டு விமானநிலையத்திற்கு சேவை வழங்க ஆர்வம் காட்டினாலும் மத்தியஅரசு அதற்கு அனுமதிக்கவில்லை என்பது வேறு விஷயம். மேலும் இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ள நினைத்த ஏர்லங்கா விமானநிறுவனம் தனது தினசரி சேவைகளை வாரத்திற்கு 11, பின்னர் தினசரி இரண்டு சேவைகள் என உயர்த்துகிறது. ஆனால் பயணக்கட்டணத்தை கடுமையாக உயர்த்துகிறது.

இதனால் பயண ஏற்பாட்டாளர்கள் அவர்களது வழக்கமான வாடிக்கையாளர்களுக்கு விளக்கம் சொல்லவேண்டிய நிர்பந்தம் ஏற்படு கிறது. விமானநிறுவனம் கட்டணத்தை உயர்த்திய தால்தான் பயண ஏற்பாட்டாளரும் கட்டணத்தை உயர்த்துகிறார் என்பதை ஒரு சிலரே விளங்கிக் கொள்கின்றனர். சிலரோ பயண ஏற்பாட்டாளர் உள்நோக்கத்துடன் கட்டணத்தை ஏற்றிச் சொல் கிறார் என தவறாக விளங்கிக் கொள்கின்றனர். இதனால் வாடிக்கையாளர்கள் மற்றும் பயண ஏற்பாட்டாளர்களுக்கு இடையேயான நல்லுறவு பாதிப்படைந்து பல பயண ஏற்பாட்டாளர்கள் தங்களது வாடிக்கையாளர்கள் மற்றும் வணிகத்தை இழக்கவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. அதுமட்டுமன்றி கஷ்டப்பட்டு ஆண்டுக்கணக்கில் எடுத்துக்கொண்டு சம்பாதித்த வியாபார நம்பகத்தன்மையை இந்த பயண ஏற்பாட்டாளர்கள் இழக்க நேரிட்டது. ஆனால், இதே காலகட்டத்தில், சென்னையிலிருந்து சேவை வழங்கும் வளைகுடா நாடுகளைச் சேர்ந்த விமானநிறுவனங்கள் தங்களது சேவைகளை அதிகப்படுத்துகின்றன. எமிரேட்ஸ் மட்டுமே தனது தினசரி “துபய் – மெட்ராஸ்” சேவையை தினசரி மூன்றாக உயர்த்துகிறது. கல்ப் ஏர், ஓமன் ஏர், கத்தர் ஏர்வேஸ் போன்றவை தங்களது வாராந்திர சேவைகளை அதிகப்படுத்துகின்றன.

இத்திகாத் ஏர்வேஸ் புதிதாக தனது சேவைகளைத் தொடங்குகிறது. இதனால் சென்னையில் விமான நிறுவனங்களுக்கிடையில் ஒரு ஆரோக்கியமான போட்டி ஏற்படுகிறது. பயணிகளுக்கு அவர்களின் வாங்குதிறனை பாதிக்காத அளவில் நியாயமான அளவில் பயணக்கட்டணங்கள் கிடைக்கின்றன.

இவர்கள் திருச்சிராப்பள்ளியில் உள்ள பயண ஏற்பாட்டாளர்களுக்கு அனைத்து சலுகைகளும் அளித்ததாலும், திருச்சியில் ஏர்லங்காவின் அதிகப்படியான பயணக் கட்டணத்தாலும் நேர்மையாக வணிகம் செய்யும் பயண ஏற்பாட்டாளர்களும், “திருச்சிராப் பள்ளியில் தேவையில்லாத சிக்கல், நீங்கள் மெட்ராஸே சென்று விடுங்களேன்” என்று சொல்லி தங்கள் வாடிக்கையாளர்களை மெட்ராஸிற்கு அனுப்பவேண்டிய நிர்பந்தத்திற்கு தள்ளப்படுகின்றனர்.

இதற்கேற்ப திருச்சிராப்பள்ளி மற்றும் வளைகுடா நாடுகளுக்கிடையிலான எந்த ஒரு புதியசேவையும் (ஷார்ஜா தவிர) கடந்த 11 ஆண்டுகளாக தொடங்கப்படவில்லை. பயணிகள் மீது திணிக்கப்பட்ட “குடியேற்றம்” தொடர்பாக திருச்சிராப்பள்ளி பன்னாட்டு விமானநிலையத்தின் மீதான பார்வைகளும் மாறாமல் தொடர்ந்து வருகின்றன.

-உபயதுல்லா

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.